இந்திய மூத்த ஊடகவியலாளர் நக்கீரன் அதிரடியாக கைது... - WeligamaNews

Latest

Tuesday, October 9, 2018

இந்திய மூத்த ஊடகவியலாளர் நக்கீரன் அதிரடியாக கைது...


இந்தியாவின் மூத்த ஊடகவியலாளர் நக்கீரன் கோபாலை கைது செய்த தமிழ் நாடு மாநில அரசின் செயற்பாட்டிற்கு அந்த மாநில சட்டசபையின் எதிர்க் கட்சித் தலைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரத்திற்கு விமானம் மூலம் செல்வதற்காக இன்று காலை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்த போதே, ஊடகவியலாளர் நக்கீரன் கோபால் தமிழ்நாடு காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.


தமிழ்நாடு ஆளுநர் மாளிகையிலிருந்து அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே, இவர் மீது கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


மாணவிகளை பாலியல் முறைகேடுகளில் ஈடுபட அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பேராசிரியை ஒருவர், தமிழ் நாடு மாநில ஆளுநரை 4 தடவைகள் சந்தித்ததாக, தான் நடாத்தி வரும் இதழில் ஊடகவியலாளர் நக்கீரன் கோபால் வெளியிட்டமையை அடுத்தே, இந்த முறைப்பாட்டை தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அளித்துள்ளது.