பரபரப்பான அரசியல் சூழலில் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை…!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளைய தினம் கூடவுள்ளது.கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரது இல்லத்தில் கூடவுள்ள இந்த கூட்டத்தில் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளன.


அத்துடன், கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் புதிய அமைப்பாளர்களை நியமித்தல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்படும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்தார்.

அதேவேளை, சுதந்திரக் கட்சிலிருந்து நீக்கப்பட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர் பதவிகளிலிருந்து தூக்கப்பட்டவர்களுக்கு மீள்நியமனம் வழங்குவது குறித்து தீர்க்கமான முடிவெடுக்கப்படவுள்ளது.