Breaking

Sunday, October 7, 2018

பிள்ளைகளை படுகொலை செய்யும், பரீட்சைத் திணைக்களம்


பத்து வயதான அப்பாவி பிஞ்சுகளின் உளவியலை கொன்று உளவியல் கொலையை மிக திறம்பட பரீட்சைகள் திணைக்களம் நடத்தி முடித்தமைக்கு முதலில் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.


புலமைப்பரிசில் பரீட்சை தேவையா?? தேவையில்லையா?? என்ற வாதப்பிரதிவாதங்கள் வலுத்த நிலையில் அதன் வெட்டுப்புள்ளியை 164 மேல் அதிகரித்து இரண்டு வினாத்தாள்களிலும் 80 புள்ளிகள் எடுத்த பிள்ளையை தோல்விக்குரிய பிள்ளையாக சமூகமட்டத்தில் அடையாளப்படுத்திய பெருமை அவர்களுக்குரியது.


இந்த பரீட்சை ஊக்கத்தொகை முன்னணி பாடசாலைகளுக்கான அனுமதி என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட போதிலும் இது பயணிக்கும் திசை ஆபத்தானது.


அந்த வகையில் பத்தே வயது பச்சிளங்குழந்தைகளின் மீது உளவியல் தாக்குதலை கட்டமைத்து நடத்துகின்றது என்ற உண்மையை இலகுவாக உணர்ந்து கொள்ள முடியாத மாணவ உளவியலாளர்கள்,கல்வியியலாளர்கள் கல்வி அதிகாரிகளை நாட்டின் சாபக்கேடு என விமர்சிப்பதை தவிர வேறெதுவும் எனக்குத் தெரியவில்லை.


இவ்வளவு காலத்தில் அது என்ன இலக்கை அடைந்தது என கேள்வி எழுப்பினால் அம்மாக்களுக்கான அப்பாக்களுக்கான வரட்டு கெளரவத்தை பிள்ளையை கொடுமைப்படுத்தி அடைந்ததை தவிர வேறுதுவும் யாராலும் கூற முடியாது.


இன்று சில ஆரம்பகால பாடசாலைகளுக்கு சென்ற போது அங்கு தேம்பி தேம்பி அழுத அந்த குழந்தைகளின் முகம் இன்றும் என் மனத்திரையில் ஒலித்த படி உள்ளது. சில அதிபர்களுடன் உரையாடிய போது இந்த பிள்ளைகளின் அழுகையை அச்சத்தை எதிர்காலம் மீதான நம்பிக்கையீனத்தை எப்படி போக்குவது..??என தெரியவில்லை என்றனர். ஒரு பிள்ளையின் உளவியலை தனது நிலையை உணர முடியாத பிஞ்சிலேயே பலவீனப்படுத்தும் ஒரு பரீட்சை அல்லது கல்விக்கட்டமைப்பு நாட்டிற்கு கிடைத்த சாபமென கூறல் பொருத்தமானது.


எங்கே சிறுவர் உரிமை மண்ணாங்கட்டி என தொண்டை கிழியக்கத்தி ஆசிரியர்களுக்கு மட்டும் வகுப்பெடுக்கும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள்...????மாணவ உளவியல் துஸ்பிரயோகம் என கூறும் சகல வரைவிலக்கணக்கங்களுக்கும் இன்றைய பரீட்சை பொருந்தி வருகின்றது.!!


புலமைப் பரிசில் திட்டத்தை அறிமுகப்படுத்திய C.W.W கன்னங்கரா மட்டும் இப்போது உயிரோடிருந்திருந்தால்....பிஞ்சுக் குழந்தைகளின் நிலை கண்டு தான் தற்கொலை செய்திருக்கக் கூடும்..!!!


சரியான மேய்ப்பன் இல்லாத மந்தைகள் போல்...இன்றைய இலங்கை பரீட்சை திணைக்களம்..!!!


(Safardeen)


புலமைப் பரீட்சை


இரண்டு வினாத்தாள்களிலும் 80+80=160 புள்ளிகள் பெற்ற பிள்ளை சித்தி அடையவில்லை. என்று சொல்லும் ஒரே நாடு இலங்கைத் திரு நாடு.


3,55,000 பேர் எழுதி 3,40,000 பேர் தகுதியில்லாத பிஞ்சுகள் என்று உத்தியோக பூர்வமாக அறிவித்து அவர்களை அழ வைத்ததும் நாமே