தனது வீட்டை ட்ரோன் மூலம், வீடியோ பதிவு செய்ததாக பாராளுமன்றத்தில் ரவி குற்றச்சாட்டு

தனியார்த் தொலைக்காட்சி நிறுவனமொன்று, தனது அனுமதியின்றி, ட்ரோன் கெமரா மூலம் தன்னுடைய வீட்டை வீடியோப் பதிவு செய்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் இன்று (25), சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை எழுப்பிய ரவி எம்.பி, இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு, சபாநாயகரிடம் கோரினார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிப்பதாக, சபாநாயகர் பதிலளித்தார்.