டுபாயில் கணவர் வபாத், இலங்கையில் மனைவி படுகாயம் (படங்கள்)

-முஹம்மட் ஹாசில்-


டுபாயில் உயிரிழந்த தன் கணவரை டுபாயிலயே நல்லடக்கம் செய்வது தொடர்பில் கொழும்பிலுள்ள டுபாய் தூதுவராலயத்திற்கு சென்று சகல நடவடிக்கைகளையும் செய்து விட்டது மீண்டும் அனுராதபுரம், நேகமை நோக்கி பயணித்த வேன் ஒன்று மடாட்டுகம பகுதியில் கெப் ஒன்றுடன் மோதி நேற்றிரவு 9 மணியளவில் விபத்துக்குள்ளானது.


இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் பயணித்த வேனில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


மேலும் காயமுற்ற ஏனையவர்கள் தம்புள்ளை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுள் ஆண் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.


இவ் விபத்தினால் டுபாயில் உயிரிழந்தவரின் மனைவியும் படுகாயமுற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.