ஐரோப்பிய நாடுகளைப் பின்தள்ளி முன்னிலை பெற்ற ஸ்ரீலங்கன் விமான சேவை…!!

உலகளாவிய ரீதியில் பல நாடுகளை பின்தள்ளி இலங்கையின் தேசிய விமான சேவை முன்னிலை பெற்றுள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் சரியான நேரத்தில் அதிக சதவீத விமான பயணங்களை மேற்கொண்ட விமான சேவையாக ஸ்ரீலங்கன் விமான சேவை முதலிடம் பிடித்துள்ளது.flightstats.com நிறுவனத்தினால் மேற்கொண விசேட ஆய்விற்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.


அதற்கமைய கடந்த செப்டெம்பர் மாதம் ஸ்ரீலங்கன் விமான சேவையின் பயணங்களில் நூற்றுக்கு 91.37 வீதமான பயணங்கள் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் விமான பயண தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய விமான சேவைகளின் பிரிவுகளின் கீழ் ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளின் மிகபெரிய விமான சேவைகளும் இந்த தரவிற்காக இணைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் டெல்டா விமான சேவை இந்த தரவிற்கமைய இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

அத்துடன் ஜப்பான் விமான சேவையான ஏ.எல்.ஏ விமான சேவை மூன்றாம் இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.