சீன சின்ஜியாங் நகரில் ஹலால் எதிர்ப்பு பிரசாரம் - WeligamaNews

Latest

Thursday, October 11, 2018

சீன சின்ஜியாங் நகரில் ஹலால் எதிர்ப்பு பிரசாரம்


சீனாவின் உய்குர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சின்ஜியாங் பிராந்திய தலைநகர் உரும்கியில் ‘தீவிரவாதம்’ என்ற பெயரில் ஹலால் உற்பத்திகளுக்கு எதிரான பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உரும்கியின் ஆளும் கம்யுனிஸ கட்சி தலைவர்கள் ‘ஹலால்மயமாதலுக்கு எதிரான தீர்க்கமான போராட்டத்திற்கு” சத்தியப்பிரமாணம் செய்ததாக அந்த நகரின் உத்தியோகபூர்வ சமூகதளத்தில் கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு அனுமதிக்கப்பட்ட உணவு மற்றும் ஏனையவையே ஹலால் என அடையாளம் காணப்படுகிறது.

“எனது நம்பிக்கை மாக்சிஸம்– லெனினிஸம் ஆகும்... ஹலால் வழக்கத்திற்கு முடிவுகட்ட நான் கொடியை உயரப் பறக்கவிட்டு எனது நம்பிக்கையில் மரணிக்கும் வரை உறுதியாக இருப்பேன்” என்று அந்த சத்தியப்பிரமாணத்தில் கூறப்பட்டுள்ளது.

பிரிவினைவாதத்திற்கு எதிராகவெனக் கூறி சீனா அண்மைக் காலங்களில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான ஒடுக்குமுறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.