இலங்கை வீரர்களின் தொலைபேசிகள் பரிசோதனை - ஹோட்டலுக்குள் புகுந்து ICC அட்டகாசம்


ஆட்ட நிர்ணய சதி தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக இலங்கை வந்துள்ள ஐ.சீ.சீயின் ஊழல் தடுப்பு பிரிவினர் இலங்கை அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குள் புகுந்து, அவர்களின் கையடக்க தொலைபேசிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ரங்கிரி மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில் அதற்காக தம்புளையில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்த போதே அவர்கள் அங்கு சென்று கையடக்க தொலைபேசிகளை பரிசோதனை செய்துள்ளனர்.