இங்கிலாந்தின் புகழ்பெற்ற கிரிக்கட் கழகம் Langley Mill United முகம்மத் தில்ஷாதை ஒப்பந்தம் செய்தது.


இங்கிலாந்தின் புகழ்பெற்ற கிரிக்கட் கழகமான Langley Mill United, இலங்கையின் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரரான அக்குரனையை சேர்ந்த முஹம்மத் டில்ஷாதை அவர்களின் 2019 ஆம் ஆண்டு லீக் போட்டி தொடர்களில் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது.

இலங்கையில்முதல்தர உள்ளூர் போட்டிகளில் விளையாடி வேகப்பந்து வீச்சு மூலம் திறமையை வெளிப்படுத்தி வருபவர் 26 வயது முஹம்மத் தில்சாத் .

2012ஆம் ஆண்டு Panadura Sports Club விளையாட்டுக் கழகத்துக்கு தனது முதல் போட்டியை ஆரம்பித்த இவர் அன்று முதல் பல உள்ளூர் முன்னணி போட்டிகளில் விளையாடி திறமையை வெளிப்படுத்தி வந்தவர்.

அத்துடன் இலங்கை A அணியில் தெரிவு செய்யப்பட்டு இங்கிலாந்து தொடருக்கு சென்று விளையாடியவரும் ஆவார்.

இந்நிலையில் இங்கிலாந்தின் Langley Mill United கழகம் தனது 2019 தொடர்களில் விளையாட இவரை ஒப்பந்தம் செய்துள்ளது. இதனை CricX இணையதளத்திலும் செய்தியாக வெளியிட்டுள்ளது.
http://www.cricx.com/Latest-News/langley-mill-sign-sri-lankan-a-quick.html

வாழ்த்துக்கள் முகம்மத் தில்சாட்