Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

OPPO A7 அறிமுகத்துக்கு முன்னதாக முன்பதிவுகள் ஆரம்பம்

OPPO இன் புதிய A7 மாதிரி இலங்கையில் இம்மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அவற்றுக்கான முன்பதிவுகளை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் நவம்பர் 9 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

A7 இன் விலை ரூபா. 45,990 ஆக காணப்படுவதுடன், புதிய OPPO A7 நடுத்தர அம்சங்களை கொண்ட தொலைபேசியாக அமைந்திருக்கும். 16 Mega-Pixel முன்புற கமராவை கொண்டுள்ளதுடன், AI 2.0 ஐயும் அடங்கியுள்ளது. 13MP+2MP இரட்டை பின்புற கமராவைக் கொண்டுள்ளதுடன், 4230mAh பாரிய பற்றரியையும் கொண்டுள்ளது.இலங்கையின் பெருமளவான வாடிக்கையாளர்களை OPPO A7 சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நவீன அம்சங்களைக் கொண்டிருக்கும். அங்கிகாரம் பெற்ற முகவர்களிடமிருந்து தமது தொலைபேசிகளை முன்பதிவு செய்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு விசேட அன்பளிப்பு திட்டமொன்றையும் முன்னெடுக்க OPPO முன்வந்துள்ளது.
தொடர்பான செய்திகள்:
இலங்கையில் மிக விரைவில் புதிய Oppo A7 அறிமுகம்
உலகக் கிண்ண 20க்கு 20 போட்டிகளுக்கான விஷேட தயாரிப்பு OPPO F1 ICC WT20 அறிமுகம்
Oppo F1 Selfie Expert - செல்பி மொபைல் அறிமுகம்
Read more »

இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்
ஏ.எம்.ஏ.அஸீஸ் முஸ்லிம்களின் கல்விக்கு ஆற்றிய பங்களிப்பைப் பற்றி கல்விமான்கள்,ஆசிரியர்கள்,அவரது சகாக்கள் என பலர் எழுதியுள்ளனர். இலங்கையில் முஸ்லிம் பெண்களின் கல்வித் துறையில் அவருடைய சிந்தனைகள் பற்றி அறிந்தோர் சிலரேயாவர். முஸ்லிம் பெண்களின் கல்வி விடயத்தில் அவருடைய பணிகள் ஏராளம்.

முஸ்லிம் சமுதாயத்தின் அன்றைய பின்னடைவுக்குப் பிரதான காரணம் கல்வி இன்மையே என அஸீஸ் அன்றே உணர்ந்திருந்தார். உயர்கல்வியைத் தொடருமாறு அவர் இளைஞர்களைத் தூண்டினார்.வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவுவதற்கென புலமைப்பரிசில் ஒன்றை ஆரம்பித்தார். கல்வி மீதுஅன்னார் அக்கறை கொண்டிருந்தார். அரச சிவில் சேவையிலிருந்து 1948 இல் முன்னதாகவே ஒய்வு பெற்று கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றார்.

முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன் அவர் கல்வியில் கவனம் செலுத்தினார். ஸாஹிரா கல்லூரியில் நூல்கள் நிரம்பிய நூலகம் ஒன்றை உருவாக்க அவர் முற்பட்டார். எல்லா சமூகத்தையும் சேர்ந்த அர்ப்பணிப்பும் செயல்திறனும் கொண்ட ஆசிரியர்களை நியமித்தார்.

அத்தோடு,ஒருவர் மற்றவருடைய மதத்தையும் கலாசாரத்தையும் புரிந்து கொள்ளும் வகையில் எல்லா மாணவர்களையும் இனமத வேறுபாடின்றி ஸாஹிராவில் சேர ஊக்குவித்தார்.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முஸ்லிம்களிடையே,விசேடமாக முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வித் தரத்தை விருத்தி செய்ய எண்ணிய சித்திலெப்பை போன்ற பெருந்தகைகளினால் முஸ்லிம் பெண்களுக்கு கல்வி ஊட்டுவதில் சில முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. முஸ்லிம் பெண் பிள்ளைகளுக்கான முதல் பாடசாலை 1891 இல் கண்டியிலும், அதனைத் தொடர்ந்து கம்பளையிலும்,குருநாகலிலும் ஸ்தாபிக்கப்பட்டன. பெற்றோர்களின் அசிரத்தை காரணமாக இப்பாடசாலைகள் செயலற்றுப் போயின.

'எமது சகோதரிகளை இருளில் வைத்திருக்கும் வரை ஒவ்வொரு குடும்பத்துக்கும்,சமூகத்துக்கும் கல்வியினால் பெறப்படும் பிரயோசனங்களில் 50 சதவீதத்தை நாம் இழக்கின்றோம்'என முஸ்லிம் மாதர் கல்வியின் ஆர்வமிக்க வைத்திய கலாநிதி எம்.சீ.எம்.கலீல் எடுத்துரைத்தார்.

முஸ்லிம் பெற்றோர் தமது புதல்விகளை பாடசாலைக்கு அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக,பெண்கள் பாடசாலைகளை நிறுவுமாறு சேர் ராஸிக் பரீத் அரசாங்கத்தைத் தூண்டினார். 1940ஆம் ஆண்டு வரையும் முஸ்லிம் பெண்களுக்கு கல்வி ஊட்டுவதற்கு எதிர்ப்பு நிலவியது.

சேர். ராஸிக் பரீத் அவர்களின் ஊக்கத்தினால், 1946ம் ஆண்டு கொழும்பில் புதியதோர் இடத்தில் முஸ்லிம் மகளிர் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டது. அதன் அதிபராகஆயிஷா ரவூப் நியமிக்கப்பட்டார். அக்கல்லூரி நிறுவப்பட்டதை அஸீஸ் வரவேற்றார். அவர் ஸாஹிராவில் அறிமுகப்படுத்திய அதேமுறையை அக்கல்லூரியும் கடைப்பிடிக்கும் என அவர் எதிர்பார்த்தார். முஸ்லிம் பெண்களுக்கு கல்வி புகட்டுவதில் அது ஒரு பெரும்படியென அவருக்குத் தென்பட்டது.

பெண்களின் உயர் கல்விக்கும் பல்கலைக்கழக பட்டத்துக்கான உரிமைக்கும் அன்னார் பெரும் ஆதரவாளராக இருந்தார். அஸீஸ்,யாழ்ப்பாண சோனகத் தெருவைச் சேர்ந்த கற்றறிந்த குடும்பத்தவர்.சோனகத் தெருவானது முஸ்லிம் பிரதேசம் என இனங்காணப்பட்டிருந்தாலும் தமிழ் சமூகத்துடன் பெருமளவு உறவும் நட்பும் நிலவியது. அஸீஸ் அவர்கள் வைதீஸ்வரா கல்லூரியிலும் பின்னர் யாழ் இந்துக் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.அவர் எல்லா சமூகங்களுக்கிடையிலும் நட்புறவையும் புரிந்துணர்வையும் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவராகவும் திகழ்ந்தார்.

இக்காலப் பகுதியிலேயே அஸீஸ் பெண்கள் கல்வியைப் பற்றி ஆர்வம் கொள்ள ஆரம்பித்தார்.

பெண்களுக்குரிய உரிமைகள் மீது அஸீஸ் பிடிவாதமாக இருந்தார். பெண்களின் கல்விக்கு இடையூறாக இருந்த மனப்போக்கை அவர் எதிர்த்தார்.

முஸ்லிம் பெண் கல்விக்காக உயரக் குரல் கொடுத்ததோடு,சீதனமுறையையும் கடுமையாகச் சாடினார். உயர் கல்வி,பல்கலைக்கழக பட்டம் உட்பட பெண்களுக்குரியஉரிமைகள் மீது அஸீஸ் பிடிவாதமாக இருந்தார். பெண்களின் கல்விக்கு இடையூறாக இருந்த எதனையும் அவர் அங்கீகரிக்கவில்லை.

கற்ற பெண்ணொருத்தி தம்மை மேம்படுத்திக் கொள்ளும் ஒழுக்கவிழுமியங்களுடன் கூடிய கல்வி கற்ற பிள்ளைகளை வளர்த்தெடுப்பாள் என்ற அசையாத நம்பிக்கையை அஸீஸ் கொண்டிருந்தார். அதுவே எழுச்சிக்கான மிகப் பெரிய தேடலாகும் என்பது அவரது கருத்தாகும். இந்தக் கருத்துகளை தனது உரைகளிலும் எழுத்துகளிலும்,கருத்தரங்குகளிலும்,கலந்துரையாடல்களிலும் வெளிப்படுத்தினார். அவருடைய முயற்சிகள் பெருமளவு வெற்றியளித்தன. இவரது முயற்சியினால் இளம் பெண்கள் பலர் ஆசிரிய பயிற்சி பெற்றுக் கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

1950 ஆம் ஆண்டு தொடக்கம் அஸீஸ்,சித்திலெப்பை, கலீல்,ராசீக் பரீட் போன்ற சமகருத்துடையவர்கள் இணைந்து பெண்கள் உயர் கல்வியைத் தொடரும் சவாலை ஏற்று உதவி புரிந்தனர்.

பல்கலைக்கழக மற்றும் தொழிற்சார் தகைமைகளை அடைந்துகொள்ள விரும்பிய முஸ்லிம் பெண்கள் தங்களது கல்வியை முன்னெடுத்துச் செல்ல உதவினர்.

முன்னேற்றகரமான வாழ்க்கைத் தரத்தை அடையத்தக்கதாக,அவர்களுடைய குடும்பங்களுக்கு பங்களிப்பை வழங்கக் கூடியவர்களாயினர். தமது பிள்ளைகளுக்கு கல்வித் துறையில் ஆர்வமூட்டும் இயலுமைகளை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

படித்த முஸ்லிம் மாதர், ஏனைய சமூகத்தின் படித்த பெண்களுக்கு இணையாக தன்னம்பிக்கையுடன் நிற்பதற்கு ஆற்றலுடையவர்களாக மாறினர். அவர்கள் பல்வேறு தொழிற்துறைகளில் ஈடுபட்டு பொறுப்பு வாய்ந்த பதவிகளையும் இன்று வகிக்கின்றனர். உயர் கல்வியைத் தொடர்வதற்கும் தொழில் பெற்றுக் கொள்வதற்கும் மற்றைய முஸ்லிம் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்து ஊக்கமும் ஆக்கமும் அளித்துள்ளனர். அன்னார் 24.11.1973 இல் காலமானார். அன்னாரின் கல்விப் பணிகள் என்றும் நினைவு கூரத்தக்கவை.ஆங்கிலத்தில்:
மரீனா இஸ்மாயில்

தமிழில்:
என்.எம்.எம்.றெஸீன்
Read more »

அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்
தென் கிழக்கு அவுஸ்திரேலியாவை இராட்சத புழுதிப் புயல் மூடியிருப்பதோடு, வானம் செம்மஞ்சளாக மாற்றமடைந்து காணப்படுகிறது. இங்கு காற்றுத் தரம் பற்றிய கவலை ஏற்பட்டுள்ளது.

500 கிலோமீற்றர் விரிந்த புழுதி சிட்னி நகரை நோக்கி நகர்வதால் அந்த நகரில் சுகாதார எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. நியூ செளத் வேல்ஸின் வேறு பிராந்தியங்களில் பார்க்க முடியாத அளவுக்கு புழுதி சூழ்ந்துள்ளது.

உளர்ந்த மண்ணை கிளப்பியபடி புயல் வீசுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஓகஸ்ட் தொடக்கம் நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியம் எங்கும் நீடிக்கு வரட்சி, நிலைமையை இன்னும் மோசமாக்கி இருப்பதாக அவுஸ்திரேலிய வானிலை ஆராய்ச்சி நிலையம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சினை கொண்டவர்கள் உள்ளுர் மக்கள் உள்ளே இருக்கும்படி சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டு சிட்னி நகரை தாக்கிய புழுதிப் புயலுடன் தற்போதைய சூழலை ஒப்பிட ஆரம்பித்துள்ளனர். அந்த நிகழ்வின்போது நூற்றுக்கணக்கான மக்கள் சுவாசிப்பதில் சிரமத்தை சந்தித்ததோடு பல விமானங்களும் தரையில் நிறுத்தப்பட்டன.
Read more »

Tata வாகன உரிமையாளர்களுக்கு உலகளாவிய சேவை நடவடிக்கை

- நவம்பர் 26 முதல் 28 ஆம் வரை
- DIMO மற்றும் Tata Motors Limited ஏற்பாடு

Tata Motors நிறுவனம் தனது வர்த்தகப் பாவனை வகுப்பு வாகன உற்பத்தி வரிசையில் மிகச் சிறந்த வாடிக்கையாளர்கள் அனுபவத்தை நோக்கிய, வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயற்பாடுகளின் தொடர்ச்சியாக, Diesel & Motor Engineering PLC (DIMO) மற்றும் Tata Motors Limited ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து 2018 நவம்பர் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை உலகளாவிய சேவை நடவடிக்கையொன்றை (Service Campaign) ஏற்பாடு செய்துள்ளன.

உலகளாவில் முன்னெடுக்கப்படுகின்ற Tata உலகளாவிய சேவைப் நடவடிக்கைக்கு அமைவாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சியம்பலாபே, அனுராதபுரம், குருணாகல், கண்டி, புத்தளம், இரத்தினபுரி, மாத்தறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், திஸ்ஸமஹராம, மட்டக்களப்பு, இரத்மலானை மற்றும் மத்துகம உள்ளிட்ட நாட்டின் பிரதான நகரங்களை உள்ளடக்கிய 13 இடங்களில் வாடிக்கையாளர்களை எட்டும் இத்தனித்துவமான நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.மூன்று தினங்களாக இடம்பெறவுள்ள இச்சேவையின் மூலமாக DIMO நிறுவனத்தின் Tata Motors வர்த்தகப் பாவனை வகுப்பு வாடிக்கையாளர்கள் முழுமையான வாகன நிலைமை சோதனைகள், இலவச Tata அசல் ஓயில் மாற்றங்கள், மற்றும் பல்வேறுபட்ட பெறுமதி சேர் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும். மூன்று தினங்களாக இடம்பெறவுள்ள இச்சேவையின் மூலமாக Tata அசல் உதிரிப்பாகங்களுக்கு கவர்ச்சியான தள்ளுபடிகளை DIMO வழங்கவுள்ளதுடன், சேவைப் நடவடிக்கைக்கு வருகை தரவுள்ள சாரதிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு வியப்பூட்டும் வெகுமதிகளையும் அளிக்கவுள்ளது. ‘அதிக தூரம்’ (High Mileage) வாகனத்தைச் செலுத்தியுள்ள சாரதிகளுக்கான வெகுமதிகளும் இச்சேவையில் வழங்கப்படவுள்ளன. மேலும், சேவைக்கு கொண்டு வரப்படுகின்ற அனைத்து வாகனங்களும் புகை வெளியீடு தொடர்பான சோதனைகளுக்கும் உள்ளாக்கப்படும். Tata வாகனங்களின் உரிமையாளர்கள் என்ற வகையில், வாடிக்கையாளர்களுக்கான ஒரு பெறுமதி சேர் அம்சமாக வாடிக்கையாளர்களின் இடங்களுக்கு சென்று வாகன சோதனைகளையும் DIMO முன்னெடுக்கவுள்ளது.

மேலும், மூன்று தினங்களாக இடம்பெறுகின்ற இந்த சேவை முகாமில் தனது வர்த்தகப் பாவனை வகுப்பு வாகனங்களுக்கு விசேட விலையையும் DIMO வழங்கவுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் Tata Motors இன் புதிய சில வாகனங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் பரீட்சார்த்த செலுத்தல் அனுபவங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான பல்வேறுபட்ட சாரதி பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களும் மற்றும் விசேட கண் பரிசோதனைகளும் இச்சேவை நடவடிக்கையில் உள்ளடங்கியுள்ளன. வாகனங்களின் பாதுகாப்பான இயக்கம் மற்றும் செயற்திறன் தொடர்பான வீடியோக்களும், வாடிக்கையாளர்கள் ஓய்வெடுக்கும் கூடத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

Tata வாகனங்களின் உரிமையாளர்கள் மாற்றும் சாரதிகளின் பிள்ளைகள் DIMO ஏற்பாடு செய்துள்ள ஓவியப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர். இப்போட்டியில் பங்குபற்றுபவர்கள் Tata வாகனம் ஒன்றை வரைந்து வாகன சேவை நடவடிக்கையில் பங்குபற்றுகின்ற சமயத்தில் தாங்கள் வரைந்த ஓவியங்களை சமர்ப்பிக்க முடியும்.

இச்சேவை தொடர்பில் DIMO நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே அவர்கள் கருத்து வெளியிடுகையில், ““TATA Motors மற்றும் DIMO ஆகியன 1961 ஆம் ஆண்டு முதல் தமக்கிடையில் வலுவான பங்குடமையொன்றைப் பேணி வந்துள்ளதுடன், பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஒருங்கிணைப்புக்களை தெளிவாகக் கொண்டுள்ள Tata குழுமத்தின் நிலைபேற்றியல் கொள்கை, DIMO நிறுவனத்தின் மரபணுவுடன் எப்போதும் ஒத்திசைந்துள்ளதுடன், பிணைப்பினை மேலும் வலுப்படுத்தியுள்ளது. Tata Motors உலகளாவிய சேவை ஊக்குவிப்பானது Tata Motors இன் உலகளாவிய நிலைபேற்றியல் கொண்ட வாடிக்கையாளர் கவனிப்பு செயற்திட்டமாகும். இச்சேவைப் ஊக்குவிப்பில் பங்குபற்றி, நத்தார் மற்றும் புத்தாண்டு பருவகாலத்தில் வாகனங்களின் சோதனை மற்றும் திருத்த வேலைகளை மேற்கொள்ள முன்வருமாறு பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். மேலும், உலகளாவிய சேவைப் ஊக்குவிப்பின் மூலமாக நாம் வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ள எமது நன்மைகள் மற்றும் எமது வசதிகளை எமது பங்காளர்கள் அனுபவிப்பதற்கு இது பொருத்தமான ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “DIMO நிறுவனம் தனது உற்பத்தி வரிசைகள் மற்றும் பல்வேறுபட்ட ஊக்குவிப்புகள் மூலமாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரினதும் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு எப்போதும் தனது ஆதரவை வழங்கி வந்துள்ளது. பொறுப்புணர்வுமிக்க ஒரு நிறுவனம் என்ற வகையில், நாட்டின் பொருளாதாரத்தை முன்கொண்டு செல்வதில் சமூகப் பொறுப்புணர்வின் மீது கொண்டுள்ள அர்ப்பணிப்பிற்கு அது பெயர் பெற்றுள்ளதுடன், மூன்று தினங்களாக இடம்பெறும் இந்த உலகளாவிய சேவை ஊக்குவிப்பை ஏற்பாடு செய்வது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது,” என்று குறிப்பிட்டார்.

Tata Motors நிறுவனத்தின் வர்த்தகப் பாவனை வாகனங்களுக்கான சர்வதேச வர்த்தகத்தின் தலைமை அதிகாரியான ருத்ராரப் மைத்ரா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட உலகளாவிய சேவை முகாமானது Tata Motors இனைப் பொறுத்தவரையில் மகத்தான வெற்றியளித்துள்ள ஒரு நடவடிக்கையாகும். இதற்கு முதல் இடம்பெற்ற இரு சேவை நிகழ்வுகளின் போது பரிமாணம் மற்றும் வாடிக்கையாளர்களை எட்டுதல் ஆகியவற்றில் நாம் புதிய தரஒப்பீட்டு நியமங்களை ஏற்படுத்தியுள்ளோம். இந்த முகாமானது எமது வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு உரிய சேவைகளை வழங்குவதற்கு எமக்கு இடமளித்துள்ளது மட்டுமன்றி, எம்முடன் தொடர்புபட்ட முக்கிய தரப்பாக அமைந்துள்ள வாடிக்கையாளர்களின் கருத்துக்களையும் செவிமடுக்கும் வாய்ப்பினை எமக்கு வழங்கியுள்ளதுடன், அவர்கள் எம்முடன் பேணி வருகின்ற உறவுமுறைக்கு எமது நன்றிகளைக் காண்பிக்கவும் இடமளித்துள்ளது. மூன்றாவது தடவையாக இம்முறை 2018 ஆம் ஆண்டில் இந்த முகாமை ஏற்பாடு செய்வதை அறிவிப்பதில் நாம் மிக்க மகிழ்ச்சியளித்துள்ளதுடன், வாடிக்கையாளர்களை செவிமடுத்து எமது வர்த்தகநாமத்தை மேலும் வலுப்படுத்தும் ஈடுபாட்டுடன் உள்ளதுடன், வாடிக்கையாளர்களின் வர்த்தக முயற்சிகளுக்கு பெறுமதியைச் சேர்ப்பிக்கும் உற்பத்திகளையும், சேவைகளையும் வழங்க இடமளித்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.

இலங்கையில் முதற் தர வர்த்தகப் பாவனை வாகனங்களுள் ஒன்றாக Tata Motors திகழ்வதுடன், இலங்கை மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதற்கு மிகவும் விரிவான வர்த்தகப் பாவனை வாகன வரிசையைக் கொண்டுள்ளது. அதன் விசாலமான சர்வதேச அனுபவத்துடன், பல்வேறுபட்ட சந்தைகளில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்களை அது ஆழமாக விளங்கிக் கொள்வதுடன், உலகளாவில் எப்போதும் மாற்றம் கண்டு வருகின்ற வாகன நியமங்கள் மற்றும் வர்த்தகப் பாவனை வாகனப் போக்குகளை நிறைவேற்றி வருகின்றது. தனது உற்பத்திகள், விற்பனை மற்றும் சேவை வலையமைப்பு மீது Tata Motors தொடர்ந்தும் முதலீடு செய்து வருவதுடன், வாடிக்கையாளர்களின் தேவைப்பாடுகளை எதிர்பார்த்து வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டுள்ள அணுகுமுறையை தீவிரமாக பின்பற்றி வருகின்றது.
Read more »

இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழு கலைக்கபபட்டது.


இலங்கை கிரிக்கட் தெரிவு கமிட்டி கலைக்கபபட்டது.


விளையாட்டு அமைச்சால், இலங்கை கிரிக்கட் கமிட்டி கலைக்கபபட்டது.


அதே வேளை அசந்த டி மெல், பிராண்டன் குருப்பு, ஹேமந்த் விக்ரமரட்ன மற்றும் சாமந்தி மெண்டிஸ் தலைமையில் ஒரு புதிய குழு நியமனம் செய்யப்பட்டது.


Read more »

பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட முயற்சித்த சிவாஜிலிங்கம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விடுதலை.வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்ட ஏற்பாடுகளை செய்த
வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.

எனினும் இக குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம், விடுவிக்கப்பட்டார்.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாட முயன்றாரெனக் குற்றஞ்சாட்டி, வல்வெட்டித்துறை பொலிஸாரால், இன்று காலை கைது செய்யப்பட்டார்.

அதன்போது, அவர் வசமிருந்த பிறந்தநாள் கேக் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் பறிமுதல் செய்த பொலிஸார் , அவரைக் கைதுசெய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.

இந்நிலையில், பொலிஸ் நிலையத்தில் வைத்து, மேலதிக நடவடிக்கை குறித்த அறிவுறுத்தல்களை பின்னர் வழங்குவதாகக் கூறி, சிவாஜிலிங்கத்தை பொலிஸார் விடுவித்துள்ளனர்.
Read more »

மஹிந்தவின் விசேட உரை (முழு விபரம் இணைப்பு)


பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று -25- நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தினார்.


பிரச்சினை பாராளுமன்றத்திலேயே காணப்படுகின்றது. ஆகவே, தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்த வேண்டிய எவ்விதத் தேவையும் இல்லை. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எந்தவொரு கட்சியும் தௌிவான பெரும்பான்மையைப் பெறவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களைப் பெற்றதுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 96 ஆசனங்களைப் பெற்றது. இரு கட்சிகளுக்கும் இடையில் 10 ஆசனங்களே வித்தியாசப்பட்டன. ஆகவே, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்றுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமையவே ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழு அரசாங்கத்தில் இருந்து வௌியேறியது. அதன்பின்னர், ஐக்கிய ​தேசியக் கட்சியின் சில உறுப்பினர்களும் எம்முடன் இணைந்துகொண்டனர்.


ஆகவே, இன்று பாராளுமன்றத்தில் உள்ள மிகப்பெரிய குழுவுக்கே நான் தலைமைத்துவம் வழங்குகிறேன். 1994, 2001, 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களின் பின்னர் ஜனாதிபதியாக இருந்த டி.பி. விஜேதுங்க மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் அதிகூடிய உறுப்பினர்கள் கொண்ட குழுவையே ஆட்சியமைக்க அழைத்தனர். அதன்படி 1994 ஆம் ஆண்டு பொதுஜன முன்னணியும் 2001 ஆம் ஆண்டு ஐக்கிய ​தேசியக் கட்சியும் 2004 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் ஆட்சி அமைத்தன. தற்போது உயர்நீதிமன்ற நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்தல் நிறைவடையும் வரையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக மாத்திரமே கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு நாட்டில் யுத்தம் ஆரம்பமானபோது பொதுமக்கள், தொழிற்சங்கங்கள், நுகர்வோர், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் யுத்தத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பட்டனர். அந்த ஒத்துழைப்பின் காரணமாகவே எவராலும் முடிவுக்குக் கொண்டுவரமுடியாத யுத்தத்தை நாம் முடிவுக்குக் கொண்டுவந்தோம். ஆகவே, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக யுத்த காலத்தில் வழங்கிய ஒத்துழைப்பைப் போன்று ஒத்துழைப்பு வழங்குமாறு நான் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.


நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமான இறுதி சந்தரப்பம் இதுவாகும். இந்த முயற்சியில் தவறிழைக்கப்பட்டால் கிரேக்கத்திற்கு ஏற்பட்ட நிலைமையே எமது நாட்டிற்கும் ஏற்படும். நாட்டில் தற்போது பொருளாதார இடர்நிலைமை ஏற்பட்டுள்ளதாக கருதியே செயற்பட வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி பொதுமக்கள் மீது அதிக வரியை சுமத்தி அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து வௌிநாட்டு பயணங்களுக்கு அதிக பணத்தை செலவு செய்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அடுத்த பொதுத்தேர்தலின் பின்னர் அதிகாரத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியுமான வகையில் குறிப்பிடத்தக்க அமைச்சர்களை நாம் நியமிப்போம். அதனை நான் முன்கூட்டியே கூறுகின்றேன். இவை அனைத்துக்கும் முன்பாக நாட்டில் நிலையான அரசாங்கமொன்று இருக்க வேண்டும். அந்த புதிய அரசாங்கத்தில் செலவுகளைக் குறைப்பதற்கு இயன்றளவு நடவடிக்கைகளை எடுப்பேன். மூடிஸ் நிறுவனத்தினால் எமது கடன் தரப்படுத்தல் கீழ் மட்டத்தில் உள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் கூறியுள்ளார். அவ்வாறு செய்யாவிட்டாலே புதுமையானது. 2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாம் அரசாங்கத்தை கையளிக்கும்போது அவையனைத்தும் தரப்படுத்தலில் உயர்மட்டத்திலேயே காணப்பட்டன. 2015 ஆம் ஆண்டின் பின்னரே அது வீழ்ச்சியடைந்தது.


இந்தத் தரப்படுத்தலில் அரசியலும் கூற வேண்டும். 2009 ஆம் ஆண்டு யுத்த வெற்றியின் பின்னர் கடன் தரப்படுத்தில் உயர் மட்டத்திற்கு கொண்டுசெல்ல வேண்டி இருந்தபோதிலும், அவர்கள் எம்மை கீழ் மட்டத்திற்கு கொண்டு சென்றனர். எனினும், வர்த்தகசந்தை தொடர்பில் எமக்கு இருந்த நம்பிக்கை காரணமாக நாம் அதனை ஐந்து சதத்திற்கு கவனத்திற் கொள்ளவில்லை. அவ்வாறான சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்பதினாலேயே ஜனாதிபதி நாட்டை எம்மிடம் கையளித்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு இது குறித்து தெரியும் என்பதினாலேயே தினமும் வௌிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் தூதுவர்களை அழைத்து பொதுத் தேர்தலை நடாத்துவது ஜனநாயக விரோதமான செயற்பாடு என சர்வதேசத்திற்கு பிரசாரம் செய்கின்றனர். பொதுத் தேர்தல் நடைபெற்று எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஜனாதிபதியும் நாமும் இணைந்து உருவாக்கும் அரசாங்கம் மிகவும் பலம் வாய்ந்தது. அது மக்கள் சார்ந்த அரசாங்கம் என்பதை கூறுகின்றேன். நாட்டின் ஸ்திரத் தன்மையை உருவாக்குவதற்காக நடாத்தவிருந்த பொதுத்தேர்தல் பிற்போட்டுள்ளமையால் ஸ்திரமான அரசாங்கம் ஒன்றை உருவாக்க சிறிது காலம் செல்லும். ஆகவே, இந்த காலத்தில் எம்முடன் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.


2006 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை மக்கள் சிரமங்களை எதிர்கொள்ளாத வகையில் நாம் செயற்பட்டோம் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி நாம் ஆரம்பித்த இந்தப் பயணத்தின் ஊடாக எரிபொருளின் விலையையும் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையையும் குறைத்து உரமானியத்தை வழங்கி விவசாயத்தை மேம்படுத்துவதற்கு செயற்படுகின்றோம். 2015 ஆம் ஆண்டு உண்பதற்கும் அணிவதற்கும் மக்கள் ஆட்சி மாற்றத்தை உருவாக்கவில்லை என முன்னாள் அமைச்சரவைப் பேச்சாளர் எத்தனை தடவை கூறியிருப்பார். ஜனநாயகத்தை உருவாக்குவதற்காகவே ஆட்சி மாற்றத்தை மக்கள் ஏற்படுத்தியதாக அவர் கூறினார். எனினும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் மக்களுக்கு ஜனநாயகம் கிடைக்கவில்லை. வாக்களிக்கும் உரிமை கிடைக்கவில்லை. உண்பதற்கும் அணிவதற்கும் கிடைக்கவில்லை. அதுவல்லவா இடம்பெற்றது. நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இருக்கும் இறுதி சந்தர்ப்பம் இதுவாகும். தேர்தலை நடாத்தாமல் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருந்துகொண்டு நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டுசெல்லும் சக்திகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தோற்கடித்து, இந்த நாட்டை சரியான பாதைக்குக் கொண்டுசெல்வோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்
Read more »

கண்ணீர் விட்டழுத சிறிசேன
சர்வதேச ஊடகவியலாளர்கள் முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்ணீர் விட்டழுததாக தகவல் வெளியாகி உள்ளது.


கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் தொடர்பில் சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் இன்று -25- நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி அழுதுள்ளார்.


உள்ளுராட்சி தேர்தலில் தோல்வியடைந்தவேளை ரணில் விக்கிரமசிங்கவை பதவிவிலகுமாறு எவ்வாறு மன்றாடினேன் என விபரிக்கும் போது ஜனாதிபதி கண்ணீர் சிந்தியுள்ளார்.


ரணிலின் பொருளாதார கொள்கைகள் காரணமாகவே நாங்கள் தேர்தலில் தோற்றோம் என அவரிற்கு தெரிவித்தேன், இந்த அறையில் வைத்து அவரை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டேன் அவர் அதனை ஏற்க மறுத்தார் என சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.


நாங்கள் 100 தடவைக்களிற்கு மேல் வெளிப்படையாக மோதியிருப்போம் எங்கள் மத்தியிலான அதிகாரப்போட்டி குறித்து அமைச்சரவை வெளிப்படையாக அறிந்திருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


பிரதமராக நியமிக்கப்பட்டவர் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படவேண்டும் என்ற பாரம்பரியமுள்ளது. என்னால் ரணிலுடன் இணைந்து பணியாற்ற முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Read more »

தனித்து செயற்படப்போகின்றோம் - சு.க. MP கள் சிலர் எச்சரிக்கை


மகிந்தராஜபக்சவினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் பாராளுமன்றத்தில் தனித்து செயற்படப்போவதாக மகிந்த அமரவீர துமிந்த திசநாயக்க தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபலா சிறிசேனவிடம் தெரிவித்துள்ளனர்


ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.


பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பிற்கு பிரதமமந்திரி பதவியை வழங்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Read more »

தோல்வியைத் தழுவினார் மைத்திரி - மகிந்த இனிமேல் விலகமாட்டார்


மகிந்த ராஜபக்சவிற்கு பெரும்பான்மை கிடைப்பதை உறுதி செய்யுமாறு பசில்ராஜபக்ச எஸ்பி திசநாயக்க திலங்க சுமதிபால உட்பட ஐந்து பேரிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி இந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


பெரும்பான்மையை நிருபிக்க தவறினால் மகிந்த ராஜபக்ச பதவிவிலகுவது சிறந்தது என தான் தெரிவித்துள்ளதாகவும் சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் தெரிவித்துள்ளார்.


இதேவேளை மகிந்த ராஜபக்ச ஒருபோதும் பிரதமர் பதவியிலிருந்து விலகமாட்டார் என குறிப்பிட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் முடிந்தால் ஜனாதிபதி அவரை பதவி விலக்கி காட்டட்டும் எனவும் சவால் விடுத்துள்ளார்.


ராஜபக்ச பிரதமர் பதவியை கோரவில்லை ஜனாதிபதியே அவரை பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைத்ததுடன் தான் பெரும்பான்மையை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார் என சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
Read more »

கரு ஜயசூரிய பதவியை இராஜினாமா செய்யாவிட்டால், பாரிய எதிர்ப்பு போராட்டங்களை சந்திக்க நேரிடும்


சபாநாயகருக்கு எதிராக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கிளர்ந்தெழுவதற்கு முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய பதவியை இராஜினாம செய்ய வேண்டும் என அகில இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.


நெழும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அகில இலங்கை உள்ளூராட்சி மன்ற சங்கங்களின் தலைவர் அத்துவேவில மேற்கண்டவாறு கூறினார்.


மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்காக செயற்படும் சபாநாயகர் நாட்டுக்கு அவசியமில்லை. அத்துடன் கரு ஜயசூரிய பதவியை இராஜினாமா செய்யாவிட்டால் பாரிய எதிர்ப்பு போராட்டங்களை சந்திக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

Read more »

என் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும்
காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களைப் பயன்படுத்தியதாக எக்கோ நிறுவனம் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தார் இசையமைப்பாளர் இளையராஜா.

இந்தப் புகாரின் மீது காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து எக்கோ நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது ஒரு சிவில் பிரச்சினை. எங்கள் மீது குற்றவியல் புகார் அளிக்க எந்த முகாந்திரமும் இல்லை.

அதை ரத்து செய்யவேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது ஒரு சிவில் பிரச்சினை. இதன் அடிப்படையில் குற்றவியல் புகார் அளிக்கமுடியாது என்று தீர்ப்பளித்தது. இந்நிலையில் இந்தத் தீர்ப்பு தொடர்பாக இளையராஜா ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

நான் 2014-ம் ஆண்டு தொடர்ந்த எனது பாடல்களைப் பயன்படுத்தத் தடை கோரிய வழக்கின்படி இன்றளவும் எனது பாடல்களைப் பயன்படுத்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தடை செல்லும். அந்தத் தீர்ப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு கூடிய விரைவில் வெளிவரும்.

நான் 2010-ம் ஆண்டு எக்கோ நிறுவனத்தின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் காவல் துறையினரிடம் புகார் அளித்தேன். சட்டத்துக்குப் புறம்பாக என் பாடல்களை விற்பனை செய்வதாக அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை சிடிக்களைப் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தது.

அந்தக் குற்றவியல் வழக்கை ரத்து செய்யக்கோரி அவர்கள் தொடுத்த வழக்கின் தீர்ப்பே நேற்று முன்தினம் வெளிவந்தது. அதில் நீதியரசர் எக்கோ நிறுவனத்தின் மீதான குற்றவியல் நடவடிக்கையை மட்டுமே ரத்து செய்துள்ளார். அதில் எனது காப்புரிமை செல்லாது என அறிவிக்கவில்லை. இந்த வழக்குக்கும் எனது பாடல்களின் உரிமை மீதான வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான்கு ஆண்டுகள் வழக்கு நடத்தி இறுதித் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் நிலையில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
Read more »

காங்கிரசுக்கு ஆதரவாக நக்மா, விஜயசாந்தி பிரசாரம்
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக விஜயசாந்தி பிரசாரம் செய்துவரும் நிலையில் விரைவில் நக்மா பிரசாரம் செய்ய உள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி நடந்தது.

முதல்வர் சந்திரசேகரராவ் முன்கூட்டியே தேர்தலை சந்திக்க முடிவு செய்து ஆட்சியை கலைத்தார்.

இதையடுத்து தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 7-ந்திகதி நடக்கிறது. இதனால் அம்மாநிலத்தில் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது.

சந்திரசேகரராவ் தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அவர்கள் தொகுதிகளில் தேர்தல் பணியில் மும்முரமாக உள்ளனர்.

தெலுங்கானா தேர்தலில் காங்கிரசும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நடிகையும், நிர்வாகியுமான நக்மா பிரசாரம் செய்கிறார். இதே போல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் முகமது அசாருதீனும் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரத்தில் குதிக்கிறார்.நடிகை விஜயசாந்தி ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மெகபூபா நகர் மாவட்டத்தில் வாக்காளர்களை சந்தித்து காங்கிரசுக்கு வாக்குகளை சேகரித்து வருகிறார்.

தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியை வீழ்த்த காங்கிரஸ் திவிரமாக உள்ளது.

இதனால் பிரசாரத்தில் நட்சத்திர பட்டாளங்களை களம் இறக்க முடிவு செய்துள்ளது.
Read more »

வரலட்சுமி விரைவில் அரசியலில் நுழையப் போவதாக அறிவிப்பு
விஷாலுடன் காதலுமில்லை திருமணமும் இல்லை என்று கூறியுள்ள வரலட்சுமி, தான் விரைவில் அரசியலில் நுழையப்போவதாக கூறியுள்ளார்.

“போடா போடி” படம் மூலம் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். சமீபத்தில் வெளியான சண்டக்கோழி-2 படத்தில் வில்லியாக நடித்து உள்ளார். அடுத்து விஜய்யுடன் “சர்கார்” படத்தில் நடித்து இருக்கிறார்.அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறி இருப்பதாவது:-

’நடிகர் விஷால் எனக்கு நெருக்கமான நண்பர். எல்லா வி‌ஷயங்களையும் இருவரும் பகிர்ந்து கொள்வோம். ஆனால் அவரும் நானும் காதலிப்பதாகவோ டேட்டிங் செல்வதாகவோ வரும் தகவல்களில் உண்மை இல்லை.

விஷாலுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்தால் நானே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க தயார். அவர் திருமணம் செய்தால் மகிழ்ச்சியடையப் போவதும் நான்தான். எதற்காக விஷாலுடன் என்னை இணைத்து பேசுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை. தமிழகத்தில் அரசியல் காலியிடம் உள்ளது உண்மைதான். அந்த காலியிடத்தை நிரப்பத்தான் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் முயற்சி செய்கிறார்கள். ஆனால் மக்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஜெயலலிதா சிறப்பான ஆளுமை மிக்க தலைவர். இதுவரை அவரை 3 முறை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அரசியலில் அவர் எனக்கு உந்து சக்தியாக உள்ளார். சிறப்பான ஆட்சியாளர், சிறப்பான கல்வியாளர். தனியொரு பெண்மணியாக மொத்த மாநிலத்திலும் ஆளுமை செலுத்தினார்.

இன்னும் 5 வருடங்களில், அரசியலுக்கு வருவேன். எனது தந்தை அவரது கட்சியில் சேருவதற்கு ஏற்கனவே அழைப்பு விடுத்தார். நான்தான் மறுத்துவிட்டேன். நான் தந்தை கட்சியில் சேர்ந்து அரசியலுக்கு வர மாட்டேன். எந்த கட்சியில் சேருவேன் என்பதை பிறகு தெரிவிக்கிறேன்’ இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்தார்
Read more »

எம்.ஜி.ஆரின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது
எம்.ஜி.ஆர் ஒரு தெய்வப்பிறவி என்றும் தமிழக அரசியலில் அவர் இடத்தை யாராலும் பிடிக்கவோ நிரப்பவோ முடியாது என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

வளர்ந்துவரும் காலங்களில் பிற நடிகர்களின் கட் அவுட்களை பார்த்து உங்களுக்கும் கட்-அவுட் வைக்கும் கனவுகள் வந்ததா?

ஆமாம். ஆனால் அவை நிஜமாக மாறும்போது பெரிய மகிழ்ச்சி இல்லை. எப்போதுமே கனவாக இருப்பது நிஜமாகும் போது அவ்வளவு ஈர்ப்பு இருக்காது. இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். கல்யாணத்தையும் சேர்த்து. எல்லாமே மாயை தான்.

2.0 படத்தில் ரோபோவில் ஸ்டைல் கொண்டு வந்தது எப்படி?

எல்லா பெருமையும் ‌ஷங்கரையே சேரும். நல்லவேளை என்னோட நல்ல நேரம் அவர் நடிப்பு பக்கம் வரவில்லை. அவரது கடின உழைப்பு தான் எல்லாவற்றிற்கும் காரணம். அவர் செய்ததைப் பார்த்தால் நான் ஒண்ணுமே செய்யலை. ஸ்டைல் பண்ணவேண்டும் என்று நான் இப்போது எதையும் செய்வது கிடையாது.

மக்களிடம் உங்கள் மீது ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பை எப்படி உருவாக்குகிறீர்கள்?

(மேலே கையை காட்டி) ஆண்டவன் தான் எல்லாவற்றிற்கும் காரணம். நீங்கள் சாதாரண நபர் இல்லை என்பதை உண ர்ந்தது எப்போது?

திடீர் என்று பணம், புகழும் வந்தது. அப்போது நாம தனிப்பிறவியோ.. ஆண்டவன் நம்மை தனியா உருவாக்கிட்டானோன்னு ஒரு எண்ணம் வந்துச்சு. பின்னர்தான் எல்லாமே நேரம் என்று உணர முடிந்தது. 60களில் நடிக்க வந்திருந்தால் எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு முன்பு நம்மால் நிலைத்து நின்று இருக்க முடியாது. இந்த உண்மை புரிந்தபிறகு இயல்பாகி விட்டேன்.

எந்த கதாநாயகனுக்காகவாவது முதல் நாள் முதல் காட்சிக்கு சிரமப்பட்டு பார்த்தது உண்டா?

பெங்களூரில் எம்ஜிஆர் படம் ஒன்றுக்கு சவால் விட்டு அப்படி காலை 4.30 மணிக்கு சென்று டிக்கெட் எடுத்து பார்த்து இருக்கிறேன்.

எந்த வி‌ஷயம் உங்களை மிகவும் பாதிக்கும்?

குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பது மனதை மிகவும் பாதிக்கும். குழந்தைகளை சுயநலத்துக்காக பயன்படுத்துகிறவர்களை நடுரோட்டில் நிற்க வைத்து சுடவேண்டும்.

எம்ஜிஆரின் இடத்தை நிரப்ப வருகிறீர்களா?

இல்லை. அவர் ஒரு தெய்வப்பிறவி. அவர் இடத்தை யாராலும் பிடிக்கவோ நிரப்பவோ முடியாது. அவரை பார்த்து மிகப்பெரிய ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர் நெருக்கத்தில் செல்ல செல்ல அது அதிகமானது.

கமலை பாராட்டிக் கொண்டே இருப்பது எப்படி?

கமல் எனக்கு முன்பே பெரிய நடிகராக இருந்தார். நடனம், நடிப்பு உட்பட அனைத்து துறைகளிலுமே அவரை பார்த்து பிரமித்து இருக்கிறேன். ஒரு காலத்தில் கமலுடன் ஒரே காரில் பயணித்ததையே பெருமையாக நினைத்து இருக்கிறேன். எப்போதுமே அவரை அந்த இடத்தில் தான் வைத்து இருக்கிறேன். அவரை முந்தியதாக நினைக்கவில்லை.

இவ்வாறு ரஜினி கூறினார்.
Read more »

கோமளவல்லி ஜெயலலிதாவின் பெயரே அல்ல; அவரே என்னிடம் சொன்னார்
டிடிவி தினகரன்

கோமளவல்லி என்கிற பெயர் ஜெயலலிதாவின் பெயரே அல்ல. இதுகுறித்து ஜெயலலிதாவே என்னிடம் கூறியுள்ளார் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

'சர்கார்' படத்தில் ஜெயலலிதாவின் பெயரை இழிவுபடுத்தியுள்ளதாக அமைச்சர்கள் கூறி வரும் நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இது குறித்து கூறியதாவது:

''நான் அந்தப்படத்தைப் பார்க்கவே இல்லை. கோமளவல்லி என்கிற பெயர் ஜெயலலிதாவின் பெயரே அல்ல. 2002-, 2003-ல் காங்கிரஸ் கட்சித்தலைவர் ஒருவர் பேசியது. அந்த நேரத்தில் ஜெயலலிதாவே என்னிடம் கேட்டார். என்ன அது கோமளவல்லி, யார் பெயர் அது, நான் அப்படி ஒரு கெரக்டரில்கூட நடிக்கவில்லை. இப்போது ஏதாவது நெகடிவ் கேரக்டருக்கு அப்படி ஏதும் பெயர் இருக்கா? என்று கேட்டார்.

ஆகவே கோமளவல்லி என்பது ஜெயலலிதாவின் பெயர் கிடையாது. இன்னொன்று அந்தப் படத்தை வியாபார நோக்கத்துடன் எடுத்துள்ளார்கள். எதையாவது செய்து ஓட வைக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்கும். அதன் தயாரிப்பாளர் யார் என்று உங்களுக்கே தெரியும், நடிகர் யார் என்று தெரியும். இதில் ஒரே ஒரு இடம் எனக்கு சொல்லப்பட்டது இலவச மிக்சி, கிரைண்டர் எரிக்கப்பட்டதுபோல் அதில் ஜெயலலிதாவின் படம் உள்ளதுபோல் காண்பித்துள்ளார்கள்.

அது 2011-ல் ஜெயலலிதா அறிவித்து மக்களால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்கள். அத்துடன் சேர்த்து அந்த இலவச தொலைக்காட்சி கொடுத்தார்களே அதைக் காண்பித்து அதில் ஒட்டியிருந்த படத்தையும் காண்பித்து எரித்ததுபோல் காட்டியிருந்தால் இவர்கள் நடுநிலையாக இலவசங்கள் வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று நம்பலாம்.

இவர்கள் செய்வது வியாபார நோக்கத்துடன் எடுக்கப்படும் படம். மக்களுக்கு நல்லது சொல்லும் விவரண படம் கிடையாது. எல்லோரும் சம்பளம் வாங்கித்தான் நடித்திருக்கிறார்கள். அந்தப் படத்தை ஜெயலலிதா இருந்தபோது தயாரித்து, டைரக்ட் செய்து நடித்திருந்தால் அவர்களை பெரிய வீரர்களாக ஏற்றுக்கொள்ளலாம்.

அந்தப் படம் சாதாரணமாகத்தான் ஓடியிருக்கும். ஆனால் இதுபோன்று உள்ளவர்கள் செய்வதை எல்லாம் பெரிதாக எடுத்து பார்க்காதவர்களை பார்க்க வைத்து பிரபல்யத்தை நீங்களே ஏற்படுத்தி கொடுக்கிறீர்களோ என்கிற எண்ணம்தான் தோன்றுகிறது.

மறைந்த தலைவர்களைப் பற்றி அவர்கள் இல்லாதபோது இப்படி எல்லாம் படம் எடுக்கின்றனர். அவர்கள் எந்த அளவுக்கு நாகரிகமானவர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை''.

இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.
Read more »

மிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு!
விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தீபாவளியன்று வெளியான 'சர்கார் ' திரைப்படம் தேர்தல் மற்றும் வாக்கு அரசியலைப் பேசும் படமாக அமைந்திருந்தது. இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருந்தாலும் ஆளும் கட்சியின் கடும் எதிர்ப்புக்குள்ளானது.

படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமலவள்ளி என்ற பெயரை படத்தின் வில்லி கதாபாத்திரத்துக்கு வைத்திருந்தது ஆளும் தரப்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் இலவசங்கள் குறித்தும் காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அதை நீக்கக் கோரியும் அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்தி வந்தனர்.

பெனர்கள் கிழிப்பு, காட்சிகள் ரத்து என அ.தி.மு.கவினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``சர்கார் திரைப்படம் தொடர்பான பெனர்களை அ.தி.முகவினர் கிழித்தார்கள் என்பது தவறான தகவல். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுமக்களோடு சேர்ந்து அ.தி.மு.கவினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். ஏ.ஆர்.முருகதாஸின் உறவினர்கள்கூட விலையில்லா பொருட்களை வாங்கியிருக்கின்றனர்.

அந்தப் பட்டியலை நாங்கள் வைத்திருக்கிறோம். விலையில்லா திட்டங்களால்தான் உயர்கல்வியில் தமிழகம் 46.8 சதவிகிதமாக சிறந்து விளங்குகிறது. படத்தில் கோடிகோடியாக சம்பாதிக்கும் திரையுலகினர் மக்களுக்கு என்ன செய்திருக்கின்றனர்? அந்தப்படத்தில் குறிப்பிட்ட காட்சியை நீக்கியிருக்கிறார்கள். சர்கார் பிரச்சினை சுமுகமாக முடிந்துவிட்டது. ஊடகங்கள் இனி இதை பெரிதுப்படுத்த வேண்டாம்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் `சர்கார்' படக்குழுவினர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர் விவேக், நடிகைகள் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி ஒன்றாக சந்தித்துள்ளனர். இந்தப் புகைப்படங்களை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு கேக்கின் மேலிருக்கும் மெழுகுவர்த்தியை ஒளியேற்றுவதுபோல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதே நேரத்தில் அந்த கேக்கில் சிறு சிறு மிக்ஸி, கிரைண்டர்களால் அலங்காரப்படுத்தப்பட்டிருந்ததை மீம்ஸுகளாக போட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

இலவச பொருட்களை விஜய் ரசிகர்கள் ஒருபுறம் போட்டு உடைப்பதே பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள நிலையில் சர்கார் படக்குழுவின் இந்த கேக் புகைப்படம் என்ன விளைவுகளைத் தரும் என்று பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.
Read more »

வேற்று நாட்டு மக்களை கண்டதும் வெறுப்பு!
அமெரிக்கரை கொலை செய்து கடலில் வீசிய அந்தமான் ஆதிவாசிகள்

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் அந்தமான் தீவுகளில் ஆதிவாசிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். வேற்றுநாடுகளின் மனிதர்களின் வருகையை விரும்பாத அங்கிருந்த ஆதிவாசிகள் அவரைக் கொலை செய்து இருக்கிறார்கள்.

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் நிறைய குட்டிகுட்டி தீவுகள் உள்ளன. அந்த வகையில் அங்கு இருக்கும் சென்டினல் தீவு மிகவும் பிரபலம். ஆனால் இது சுற்றுலாத் தலமாகப் பிரபலம் அடையவில்லை. அங்கு இருக்கும் சென்டினேலீஸ் ஆதிவாசி மக்களால் பிரபலம் அடைந்து இருக்கிறது.

அங்கு இருக்கும் சென்டினேலீஸ் ஆதிவாசி மக்கள் வெளிஉலகுடன் எந்த விதமான தொடர்பும் இல்லாமல் இத்தனை வருடங்களாக உயிர் வாழ்ந்து வருகிறார்கள்.

சென்டினேலீஸ் என்பவர்கள் உலகம் தோன்றியதில் இருந்து வெளிஉலக மனிதர்களின் தொடர்பு இல்லாமல் வசிக்கும் மனிதர்கள் இனம் ஆவர். இவர்கள் பேசும் மொழி எது என்று யாருக்கும் தெரியாது. எந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது 50 தொடக்கம் - 60 சென்டினேலீஸ் மக்கள் அந்த சென்டினல் தீவில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சென்டினேலீஸ் மக்கள், தங்கள் தீவிற்குள் வரும் பிற மனிதர்களை விடுதலை செய்ய மாட்டார்கள். அவர்களைக் கைது செய்து கொலை செய்து கடலில் வீசுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு முன்பே இவர்கள் அங்கு சென்ற மீனவர்கள் சிலரையும் சில வெளிநாட்டவர்களையும் கொலை செய்து கடலில் வீசி இருக்கிறார்கள். இவர்களுக்கு வெளியுலக மனிதர்களின் தொடர்பு கொஞ்சமும் பிடிக்காது.

இந்த நிலையில்தான் கடந்த வாரம் அந்தத் தீவிற்குள் சென்ற அமெரிக்காவைச் சேர்ந்த ​ேஜான் ஆலன் என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே அந்தத் தீவிற்குள் சில சமயம் செல்ல முயன்று முடியாத காரணத்தால் பின்னர் வெளியே வந்துள்ளார். இந்த முறை அவர் தீவிற்குள் சென்ற பின்னர் சென்டினேலீஸ் மக்கள் மூலம் சிறைப் பிடிக்கப்பட்டார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் சிறைப்பிடிக்கப்பட்ட அவர் கொடூரமாக கொடுமைப் படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இவர் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டு இருக்கிறார். இவரது உடல் நேற்றுமுன்தினம் இரவு மீட்கப்பட்டது. இந்தக் கொலையில், அடையாளம் தெரியாத சென்டினேலீஸ் மக்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
Read more »

சமூக வலைத்தளங்களில் பரவும் போலிச் செய்திகள்!
வதந்திகளுக்கு எல்லையே கிடையாதா?

இந்தியாவின் சதுரகிரி மலையில் 'மஹாமேரு புஷ்பம்' என்ற ஒருவகை பூக்கள் 400 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்படும் புகைப்படங்கள் போலியானவை என்று தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சதுரகிரி மலையில் 400 ஆண்டுகளுக்குப் பிறகு மஹாமேரு புஷ்பம் என்ற அரியவகை பூக்கள், தற்போது பூத்துள்ளதாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் "முடிந்தவரை மற்றவர்களும் பார்த்திடப் பகிருங்கள்" என்று குறிப்பிடப்பட்டு புகைப்படங்களுடன் பரப்பப்படுகின்றன.

"சமூக வலைத்தளங்களில் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் என பரப்பப்படுபவை ஓர்க்கிட் வகை செடியின் மலர்கள் மற்றும் காசித் தும்பை வகையைச் சேர்ந்த மலர்கள் போன்று உள்ளன. அதிலும் அவை 'கிராபிக்ஸ்' செய்யப்பட்டுள்ளன. 'மஹாமேரு புஷ்பம்' என்ற வகை மலர்களே கிடையாது. ஓர்க்கிட் வகை மலர்கள் வெளிநாட்டு ரகத்தைச் சேர்ந்த அலங்காரச் செடியில் பூப்பவையாகும். மலர்ச்செண்டு தயாரிப்பதற்கும், வீடுகளில் அழகுக்காகவும் இதை வளர்ப்பர்.

அதிக மழை பெய்து குளிர்ந்த காலநிலை நிலவும்போது இவை நன்கு வளரும். காசித் தும்பை மலர்ச் செடிகள் 3 மாதங்கள் மட்டுமே உயிரோடு இருப்பவை. உலகத்தில் எந்த இடத்திலும் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் செடிகளே இல்லை. அதிகபட்சம் குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பவை. அது ஏன் என்ற காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

ஆனால், அவை அனைத்து இடங்களிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்காது. சில இடங்களில் மட்டும் ஆங்காங்கே பூக்கின்றன. ஒரே நேரத்தில், அதிகளவில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிப்பிட்ட இடங்களில் பூப்பதால், குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூப்பதாக வரலாறு பதிவாகி விட்டது. வதந்திகளை சுவாரசியமாக்க படங்களை போலியா 'போட்டோ ​ெஷாப்' செய்து சிலர் திட்டமிட்டு பரப்புகின்றனர்" என்று தமிழ்நாட்டின் காந்தி கிராமப் பல்கலைக்கழக உயிரியியல் துறை உதவிப் பேராசிரியரும், தாவரவியல் ஆர்வலருமான ராமசுப்பு கூறியிருக்கிறார்.
Read more »

அன்பு வழியில் ஆண்டவனின் பக்தியில் ஈடுபடுங்கள்

பகவான் சத்ய சாயிபாபாவின் 93ஆவது ஜனன தினம் இன்று

ஏழைக்குக் கைத்தொழிலைக் கற்றுத் தா. அது அவனுக்கு உணவும் அளிக்கும்; சமூகத்தில் அந்தஸ்த்தும் அளிக்கும்.

கடவுளுக்கு ஏது தீட்டும் சடங்கும்?

கடவுளுக்கு ஏது மதமும் சாதியும்?

ஒரு இந்து நல்ல இந்து ஆகவும் ஒரு இஸ்லாமியன் நல்ல இஸ்லாமியனாகவும் ஒரு கிறித்தவன் நல்ல கிறித்தவனாகவும் இருக்கவே நான் விரும்புகிறேன்.

கடவுளை தேடி ஏன் அலைகிறீர்கள்? உங்களுள் இருக்கும் கடவுளைக் கண்டுக்கொள்ளுங்கள்..

இவை பகவான் பாபாவின் பொன் மொழிகள்.

அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான பக்தர்களைத் தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா கடந்த 2011 ஏப்ரல் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 இற்கு சித்தியடைந்தார் . சித்தியடையும்போது அவருக்கு வயது 85. இன்று 93ஆவது ஜனன தினம்.

சத்ய சாய்பாபா, 1926ஆம் ஆண்டு நவ.23ஆம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ. இவரது பெற்றோர் ராஜூ ரத்னகரம், ஈஸ்வரம்மா ஆகியோர். பக்தர்கள் சாய்பாபாவை கடவுளின் அவதாரமாகவே பார்க்கின்றனர்.

ஒரு நாள் பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் போது, வானில் இருந்து வந்த சக்தி வாய்ந்த ஒளி அவரது வயிற்றில் புகுந்ததாகவும், அதன் பின் கருவுற்றதாகவும், இது ஓர் அதிசய நிகழ்வு என்றும் ஈஸ்வரம்மா தெரிவித்தார்.

சாய்பாபா குழந்தை பருவத்திலேயே நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல் இசை அமைப்பு என பல துறைகளில் திறமையாக விளங்கினார். 1940 மார்ச் 8ஆம் தேதி தனது சகோதரருடன் சாய்பாபா இருக்கும் போது, தேள் ஒன்று இவரை கொட்டியது. இதையடுத்து சில மணி நேரங்கள் தன்நிலை மறந்தவராக இருந்தார். தொடர்ந்து சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது போன்று இருந்தார். டாக்டர்கள் இவர் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தனர். மதகுருக்கள் உள்ளிட்டவர்கள் புட்டபர்த்தியில் இருந்த சாய்பாபாவின உடலை பரிசோதித்தனர்.

1940, மே 23ல் வீட்டில் இருந்தவர்களை அழைத்த சாய்பாபா, கைகளில் இருந்து கல்கண்டு வரவழைத்து காண்பித்தார். அவரது தந்தை, ""என்ன இது மாய மந்திரம்'' என கோபத்துடன் கேட்டார். அதற்கு சாய்பாபா, ""நான் யார் தெரியுமா? நான் தான் சாய்பாபா. சீரடி சாய்பாபாவின் மறுஜென்மம் நானே'' என்றும் கூறினார். சீரடி சாய்பாபா 19வது நூற்றாண்டின் இறுதி முதல் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை மகாராஷ்டிராவில் வாழ்ந்தவர். இவர் சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.

சாய்பாபாவை தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சாய்பாபாவும் சென்னை உள்ளிட்ட தென் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள் வழங்கினார். 1944ல் பக்தர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இந்த இடம் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தற்போது பிரசாந்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆசிரமம் 1948ல் கட்டப்பட்டு 1950ல் நிறைவடைந்தது.1954ல் சாய்பாபா, அங்கு சிறு மருத்துவமனையை நிறுவி, அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். 1957ல் வட இந்தியாவின் பல பகுதிகளின் கோவில்களுக்கு சாய்பாபா பயணம் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவரது சக்தியை நம்பி பக்தர்களாக தொடர்ந்தனர்.

சாய்பாபா அதிசயம்: பக்தர்களால் "அவதாரம், கடவுள்' என அழைக்கப்பட்டவர் சாய்பாபா. லிங்கம், விபூதி, மோதிரம், வாட்ச் போன்றவற்றை வரவழைத்து மக்களை ஆச்சர்யபடுத்தினார். இவரது ஆன்மிக குரு ஷீரடி சாய்பாபா . இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் மூலம் சமூக தொண்டு செய்து வந்தார். இவரது கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது. இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, தனது அருளுரையால் ஈர்த்துள்ளார். 137 நாடுகளில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் உள்ளனர்.

இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்களான வாஜ்பாய், சங்கர்தயாள் சர்மா, நரசிம்மராவ், வெங்கடராமன், பி.டி. ஜாட்டி, எஸ்.பிரித்திவிராஜ் சவான், சந்திரசேகர், அர்ஜுன் சிங், ராஜேஷ்பைலட், சங்கரானந்த், பங்காரப்பா, வீரப்ப மொய்லி, சந்திரபாபு நாயுடு ஆகியோரும் இவரது பக்தர்கள். ரவிசங்கர், நானி பல்கிவாலா, டி.என்.சேஷன், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல்துறை அறிஞர்களும் இவரது பக்தர்களாக உள்ளனர்.

1993 ஜூன் 6ல் சாய்பாபாவை கொல்ல நடந்த முயற்சி சர்வதேச செய்தியானது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சில சர்ச்சைகளும் எழுந்தன. ஆனால் சாய்பாபாவின் பொதுத் தொண்டுகள் அவரது மதிப்பை மக்கள் மனதில் மேலும் உயர்த்தியுள்ளன. சமூகத்தொண்டு: ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சம், பாபாவின் ரூ.200 கோடி திட்டத்தால் முடிவுக்கு வந்தது. அம்மாவட்டத்திலுள்ள 50 லட்சம் மக்கள் இன்றும் பயனடைகின்றனர்.

இத்திட்டம் 9 மாதங்களில் முடிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 500 கி.மீ. தூர குழாய்கள், 268 தண்ணீர் தொட்டிகள், 124 நீர்த்தேக்கங்கள், 200 நீரேற்று நிலையங்கள் ஆகியன 700 கிராமங்களுக்கும் 11 நகரங்களுக்கும் பயனளிக்கின்றன. இத்திட்டத்துக்கு ரூ.30 கோடி நிதியளிக்க மத்திய அரசு முன்வந்தபோதும் பாபா மறுத்துவிட்டார். அவரது 70வது பிறந்த நாளில் இத்திட்டம் செயலுக்கு வந்தது.

சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200 சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையின் குடிநீர் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணா நதி நீரை தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கொண்டுவர நிதியுதவி வழங்கினார்.

"அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே' இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம்.

பொன் மொழிகள்

* அன்பு வழியில் ஆண்டவனின் பக்தியில் ஈடுபடுங்கள். உங்கள் குழப்பம் யாவும் மறைந்து விடும்.

* படிப்பில் மட்டுமின்றி, நமது நாடு, மொழி, மதம் மீதும் பற்றும் மரியாதையும் கொள்வது அவசியம். இதுவே நமக்கு நம்பிக்கையை வளர்க்கும்.

* சோதனைகளை மனிதன் விரும்பி ஏற்க வேண்டும்.

* தயாராக இருக்கும் மொட்டுகள்தான் மலரும். மற்றவை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

* உண்மை, தர்மம், கருணை, மன்னிக்கும் மனப்பான்மை, இவற்றை பெற வேண்டுமானால் ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

* மனதைத் - தூய்மையாக - முழுமையாக வைத்துக்கொள். வெற்றி பெறுவாய்.

பாபாவின் சேவைகள்...

* பாபாவின் ஆசிரமத்திற்கு அருகில் 2 கிலோமீற்றர் தொலைவில் முதியோருக்காக விருத்தாஸ்ரமம் என்ற ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு முதியவர்களுக்கு தேவையான வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

* பாபா குறித்த நூல்கள், சிடிக்கள் என அனைத்தும் ஆஸ்ரம வளாகத்திலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

* பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக சத்யசாய் கோகுல ஆசிரமத்தில் 240 அறைகள் உள்ளன. இங்கு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 மட்டும் வசூலிக்கப்படுகின்றன.

* உலக அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி பாபா அவர்கள் புட்டபர்த்தி மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தார்.

* வைட்பீல்ட் ஆசிரமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்யசாய் மருத்துவமனையில் 100இக்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இதே போன்று, சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஒப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 52 ஏக்கரில் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 333 படுக்கைகள், 12 அறுவை சிகிச்சை கூடங்கள், ரத்தவங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

பாபா இன்று நம்மிடையே மனித உருவில் இல்லை. எங்கள் இதயத்தில் அந்த அன்புத் தெய்வம் என்றும் வாழ்கிறார்.

பாபா உமக்கேது மரணம்.
Read more »

ஊட்டச்சத்து குறைபாடு: யெமனில் 85,000 குழந்தைகள் உயிரிழப்பு
யெமனில் கடந்த மூன்றாண்டுகளாக நடந்து வரும் போரின்போது மட்டும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 85,000 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்று மதிப்பீடுகள் தெரிவிப்பதாக முன்னணி தொண்டு நிறுவனமொன்று குறிப்பிட்டுள்ளது.

யெமனில் உயிரிழந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, பிரிட்டனின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான பர்மிங்ஹாமிலுள்ள ஒட்டுமொத்த ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கைக்கு சமம் என்று ‘சிறுவர்களை பாதுகாப்போம்’ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

யெமனில் அதிகபட்சம் 14 மில்லியன் மக்கள் பஞ்சத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்திருந்தது.

உலகிலேயே மோசமான மனிதாபினாம நெருக்கடியாக கருதப்படும் மூன்றாண்டுகளாக நடந்து வரும் யெமன் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஐ.நா சபை முயற்சித்து வருகிறது.

எனினும் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதி செய்ய முடியாதுள்ளது. நாட்டின் அரை பகுதியில் மாத்திரமே சுகாதார வசதிகள் இயங்கிவரும் நிலையில் பலரும் எந்த பதிவும் இன்றி உயிரிழப்பதாக யெமன் தொண்டு பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Read more »

இன்டர்போல் புதிய தலைவராக தென் கொரியாவின் யாங் தேர்வு
இன்டர்போல் சர்வதேச பொலிஸ் அமைப்பின் தலைவராக தென் கொரியாவின் கிம் ஜோங் யாங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த அமைப்பின் தலைவராக இருந்த சீனாவின் மெங் ஹோங்வெய், சில நாட்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு சென்ற போது மாயமானர். பின்னர், ஊழல் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாகவும், அவர், பதவியை இராஜினாமா செய்துவிட்டதாகவும் சீனா விளக்கமளித்தது.

இதனையடுத்து தற்போது துணை தலைவராக இருக்கும் ரஷ்யாவின் அலெக்சாண்டர் புரோகோப்சக் தலைவர் பதவிக்கான போட்டியில் களமிறங்கினார். எனினும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் தென் கொரியாவின் கிம் ஜோங் யாங் களமிறங்கினார். ரஷ்யா ஆதரவு பெற்ற அலெக்சாண்டர், தலைவர் பதவிக்கு வர மேற்கத்திய நாடுகள் அச்சம் தெரிவித்தன.

தொடர்ந்து, கிம் ஜோங் யாங், தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக இன்டர்போல் அமைப்பு தெரிவித்துள்ளது.

57 வயதான யாங் முன்னாள் தென் கொரிய பொலிஸ் அதிகாரி என்பதோடு அந்நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான கியேங்கியின் பொலிஸ் தலைவராகவும் இருந்துள்ளார்.

இன்டர்போல் தலைமை பதவி ஓர் அடையாள பொறுப்பாகவே உள்ளது. அந்த அமைப்பின் அன்றாட நடவடிக்கைகளை அதன் செயலாளர் நாயகம் ஜுர்கன் ஸ்டொக் முன்னெடுத்து வருகிறார்.

194 நாடுகளின் போலிஸ் படைகளை ஒன்றிணைத்த இன்டர்போல் தேடப்படும் நபர்கள் மற்றும் தேடுதல் உதவிகள் மற்றும் உளவுத் தகவல்களை பகிர்ந்துகொள்ளும் அமைப்பாகும்.

இன்டர்போலுக்கு சொந்தமான அதிகாரிகள் இல்லாத நிலையில் உறுப்பு நாடுகளில் தேசிய பொலிஸார் ஊடாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Read more »

வழிபாட்டாளர்களை கற்பழித்த போதகருக்கு 15 ஆண்டு சிறை
தென் கொரியாவின் எட்டு பெண் வழிபாட்டாளர்களை கற்பழித்த குற்றச்சாட்டில் போதகர் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மமின் மத்திய தேவாலயத்தின் சுமார் 130,000 சீடர்களைக் கொண்ட 75 வயது லீ ஜீ ரொக் தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரித்துள்ளார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் அவரது இறை சக்தி பற்றி குறிப்பிட்டிருப்பதோடு, அவர் கடவுளாக இருப்பதால் அவர் கூறுவதை செய்வது கட்டாயம் என உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

தென் கொரியாவின் கிறிஸ்தவர்களில் பெரும்பாலானவர்கள் பிரதான தேவலாயங்களுடன் தம்மை இணைத்துக் கொண்டபோதும் சிறு எண்ணிக்கையானவர்கள் வழிபாடுகள், சடங்குகளில் ஈடுபடும் அமைப்புகளுடன் தொடர்புபட்டுள்ளனர்.

லீயின் தேவாலயம் கிறிஸ்தவத்தில் இருந்து விலகிய வழிபாடுகளைக் கொண்டிருப்பதாக பிரதான கிறிஸ்தவ வழிபாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

லீ 1982 ஆம் ஆண்டு 12 வழிபாட்டாளர்களுடன் மமின் மத்திய தேவாலயத்தை ஆரம்பித்தார். தற்போது அது நாட்டின் பிரமாண்ட அமைப்பாக மாறியுள்ளது.

இந்நிலையில் அவர் தம்முடன் கட்டாய பாலுறவில் ஈடுபட்டதாக மூன்று வழிபாட்டாளர்கள் இந்த ஆண்டு ஆரம்பத்தி குற்றம்சாட்டினர்.
Read more »

சவூதிக்கு ஆயுத ஏற்றுமதியை இடைநிறுத்தியது டென்மார்க்
செய்தியாளர் ஜமால் கசோக்கி கொலை மற்றும் யெமன் யுத்தத்தில் சவூதி அரேபியாவின் தொடர்பு காரணமாக அந்நாட்டுக்கு எதிர்காலத்தில் ஆயுதம் மற்றும் இராணுவ உபகரணங்கள் ஏற்றுமதியை டென்மார்க் இடைநிறுத்தியுள்ளது.

ஜெர்மனி ஏற்கனவே சவூதிக்கான ஆயுத ஏற்றுமதியை இடைநிறுத்தியதோடு கசோக்கி கொலை தொடர்பில் சவூதி மீது தடை விதிப்பது குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் என்று பிரான்ஸ் கடந்த திங்கட்கிழமை குறிப்பிட்டிருந்தது. உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடுகளில் ஒன்றாக சவூதி உள்ளது. அதன் தலைமையிலான இராணுவ கூட்டணி ஒன்று ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கும் யெமன் யுத்தத்தில் பங்கேற்றுள்ளது.

“ஏற்கனவே மோசமடைந்திருக்கும் யெமனில் தொடரும் அழிவுகள், சவூதி செய்தியாளர் ஜமால் கசோக்கி கொலை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களின் அண்மைய பேச்சுவார்த்தைகளுக்கு அமைய சவூதி அரேபியாவுக்கு ஆயுத ஏற்றுமதியை இடைநிறுத்த நான் தீர்மானித்துள்ளேன்” என்று டென்மார்க் வெளியுறவு அமைச்சர் அன்டெர்ஸ் சாமுவேல்சன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
Read more »

அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்
நவீன நாகரிகம் நுழையாத தீவு ஒன்றில் ஆதிவாசிகளின் அம்பு தாக்கி கொல்லப்பட்ட அமெரிக்க மதப்போதகர் அந்த மக்களை கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்ற முயற்சித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

27 வயதான ஜோன் அலன் சோ என்ற அந்த இளைஞன் இந்திய சமூத்திரத்தில் இருக்கும் தொலைதூர வடக்கு சென்டினல் தீவில் சட்டவிரோதமாக நுழைந்ததை அடுத்து கடந்த வாரம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அவர் அன்பளிப்பாக மீன் மற்றும் கால்பந்துகளை எடுத்துக் கொண்டு தனது படகை அந்த தீவை நோக்கி செலுத்தி இருப்பதாக அவரது பயணம் பற்றி ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“எனது பெயர் ஜோன். நான் உங்களை நேசிக்கிறேன் இயேசு உங்களை நேசிப்பார்.... இதோ மீன்கள்!” என்று அவர் சத்தம்போட்டுள்ளார்.

அப்போது அந்த ஆதிவாசிகள் அவர் மீது அம்புகளை எறிந்திருப்பதோடு அதில் ஒரு வில் அவர் எடுத்துச் சென்ற பைபிளில் பாய்ந்துள்ளது. இதனை அடுத்து அவர் மீனவர்களின் படகுக்கு திரும்பியுள்ளார். தனது அனுபவம் பற்றி அன்று இரவு எழுதி இருக்கும் அவர் அடுத்த நாள் மீண்டும் அந்த தீவுக்கு சென்றுள்ளார்.

பின்னர் அவர் மீண்டும் அங்கிருந்து திரும்பவில்லை.

இறப்பதற்கு முன், சமூக வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது,

“என் பெயர் ஜோன். நான் உங்களை நேசிக்கிறேன்் இயேசு உங்களை நேசிப்பார் என உரத்த குரலில் அவர்களிடம் தெரிவித்தேன். தீவில் இருந்த ஆதிவாசி சிறுவன் செலுத்திய ஒரு அம்பு எனது பைபிள் புத்தகத்தை துளைத்து விட்டது. எனது செயல்கள் பைத்தியகாரத்தனமாக இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், பழங்குடியின மக்களிடம் இயேசுவை அறிமுகப்படுத்துவது சரியான செயல் என்றே நான் கருதுகிறேன்.

கடவுளே, நான் இறக்க விரும்பவில்லை. இது எனது கடைசி பதிவாக இருக்காது என நான் நம்புகிறேன். அப்படி இருந்தால், அது கடவுளின் மகிமையாகவே இருக்கும்” என இணைய தளத்தில் நவம்பர் 16ஆம் திகதி ஜோன் எழுதியுள்ளார். அதன் பின்னரே அந்த தீவை நோக்கி சென்றுள்ளார்.

வங்காள விரிகுடாவில் உள்ள வடக்கு சென்டினல் தீவில் சென்டிகல் மக்கள் வாழ்வதோடு அவர்கள் 150 பேர் மாத்திரமே இருப்பதாக நம்பப்படுகிறது. அவர்களது வாழ்க்கை முறையை பாதுகாக்க அந்த தீவுக்கு ஐந்து கிலோ மீற்றர் தூரம் வரை செல்ல வெளிநாட்டினர் மற்றும் இந்தியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வெளியுலகில் இருக்கும் நோய்களால் அவர்களுக்கு ஆபத்து என்பதால், அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது சட்டவிரோதமானதாகும்.

வெளியாட்கள் வருவதை எதிர்க்கும் இந்த ஆதிவாசிகள் 2006இல் அங்கு சென்ற இரு மீனவர்களை கொன்றனர். 2004 ஆம் ஆண்டு இந்திய சமுத்திரத்தில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் சேதத்தை மதிப்பிட அந்த தீவுக்கு மேலால் பறந்த ஹெலிகொப்டர்கள் மீது அவர்கள் அம்பு எறிந்தனர்.

“நான் கொல்லப்பட்டால் அவர்கள் மீது அல்லது கடவுள் மீது கோபப்பட வேண்டாம்” என்று ஜோன் தனது பெற்றோர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

ஆதிவாசிகள் அலனின் உடலை கடற்கரையில் புதைப்பதை மீனவர்கள் அடுத்த நாள் கண்டதாக சக மதப்போதகர் ஒருவர் அலனின் பேற்றோருக்கு எழுதி இருப்பதாக வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஜோனின் உடலை மீட்டுவருவதற்கு துறைசார் நிபுணர்கள், வன அதிகாரிகள் மற்றும் ஆதிவாசிகள் தொடர்பான தொண்டு அமைப்புகளின் உதவியை இந்திய பொலிஸார் நாடியுள்ளனர்.

அவர்களின் வாழ்விடத்திற்கு மற்றும் அவர்களுக்கு எந்த தொந்தரவும் இன்றி நாம் இதனை கையாள வேண்டியுள்ளது. இது அதிக கட்டுப்பாடு கொண்ட வலயம் இதற்கு சற்றுக் காலம் எடுத்துக் கொள்ளும்” என்று உள்ளுர் பொலிஸ் தலைவரான டிபென்திரா பதக் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.
Read more »

ஐ.அ. இராச்சியத்தில் பிரிட்டன் மாணவனுக்கு ஆயுள் தண்டனை


வெளி ஆட்களுக்கு உளவு பார்த்ததாகவும், இரகசிய பாதுகாப்பு தகவல்களை கொடுத்ததாகவும் பிரிட்டன் நாட்டு மாணவரான மத்தியூ ஹெட்ஜெஸுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அபூதாபியின் மத்திய நீதிமன்றம் கடந்த புதன்கிழமை இந்தத் தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பு குறித்து பிரிட்டன் பிரதமர் தெரேசா மே கடும் அதிப்தியை வெளியிட்டுள்ளார்.


“அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை எம்மால் உறுதி செய்ய முடிகிறது. அவரது வழக்கறிஞரும் இல்லாமல் ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான நேர விசாரணைக்கு பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது” என்று ஹெட்ஜஸின் குடும்பம் சார்பில் பேசவல்ல ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார். டர்ஹாம் பல்கலைக்கழத்தின் முனைவர் பட்ட மாணவரான 31 வயது ஹெட்ஜெஸ் கடந்த மே 5 ஆம் திகதி டுபாய் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
2011 அரபு வசந்தத்திற்கு பின் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு கொள்கைகள் தொடர்பிலேயே ஹெட்ஜெஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
Read more »

171 பேரை கொன்றவருக்கு 5,160 ஆண்டுகள் சிறை
குவான்தமாலாவில் 171 பேரை கூட்டாக படுகொலை செய்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவருக்கு 5,160 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டோஸ் எர்ரஸ் என்ற விவசாய கிராமம் ஒன்றில் உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என அனைவரும் 1982 ஆம் ஆண்டு கூட்டாக படுகொலை செய்வதில் சான்டோஸ் லோபஸ் என்ற அந்த முன்னாள் இராணுவ வீரரும் பங்கேற்றிருந்ததாக குற்றங்காணப்பட்டுள்ளது.

குவான்தமாலாவின் 36 ஆண்டு சிவில் யுத்தத்தில் மோசமான குற்றச்செயல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

குறித்த கிராமத்தில் கெரில்லாக்கள் அல்லது துப்பாக்கிகளை இராணுவம் கண்டுபிடிக்க தவறியதை அடுத்து ஆத்திரமடைந்த இராணுவம் அங்குள்ளவர்களை இழுத்துச் சென்று படுகொலை செய்துள்ளனர். அப்போது பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

குவான்தமாலாவின் முன்னாள் இராணுவ சர்வாதிகாரி உப்ரெயின் ரியோஸ் காலத்திலேயே இந்த படுகொலை இடம்பெற்றது. அவர் மீது இனப்படுகொலை குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மரணமடைந்தார்.

1960 தொடக்கம் 1996 வரை நீடித்த குவன்தமாலா சிவில் யுத்தத்தில் 2 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.
Read more »

அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்
தென் கிழக்கு அவுஸ்திரேலியாவை இராட்சத புழுதிப் புயல் மூடியிருப்பதோடு, வானம் செம்மஞ்சளாக மாற்றமடைந்து காணப்படுகிறது. இங்கு காற்றுத் தரம் பற்றிய கவலை ஏற்பட்டுள்ளது.

500 கிலோமீற்றர் விரிந்த புழுதி சிட்னி நகரை நோக்கி நகர்வதால் அந்த நகரில் சுகாதார எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. நியூ செளத் வேல்ஸின் வேறு பிராந்தியங்களில் பார்க்க முடியாத அளவுக்கு புழுதி சூழ்ந்துள்ளது.

உளர்ந்த மண்ணை கிளப்பியபடி புயல் வீசுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஓகஸ்ட் தொடக்கம் நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியம் எங்கும் நீடிக்கு வரட்சி, நிலைமையை இன்னும் மோசமாக்கி இருப்பதாக அவுஸ்திரேலிய வானிலை ஆராய்ச்சி நிலையம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சினை கொண்டவர்கள் உள்ளுர் மக்கள் உள்ளே இருக்கும்படி சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டு சிட்னி நகரை தாக்கிய புழுதிப் புயலுடன் தற்போதைய சூழலை ஒப்பிட ஆரம்பித்துள்ளனர். அந்த நிகழ்வின்போது நூற்றுக்கணக்கான மக்கள் சுவாசிப்பதில் சிரமத்தை சந்தித்ததோடு பல விமானங்களும் தரையில் நிறுத்தப்பட்டன.
Read more »

பணத்திற்காக 35 வயது அதிகமாக பெண்ணை மணந்த இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த சோகம்…… வெறும் கையுடன் நாடு திரும்பும் பிரித்தானியப் பெண்…..!!

இலங்கையர் ஒருவரை பணக்கார பிரித்தானிய பெண் திருமணம் செய்த நிலையில் இலங்கையர் கொல்லப்பட்டதுடன், குறித்த பெண் அனைத்து பணத்தையும் இழந்து கடனாளியாகி சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளார்.பிரித்தானியாவை சேர்ந்தவர் டயன் டீ (60). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு சுற்றுலா வந்த போது அந்நாட்டை சேர்ந்த பிரியஞ்சனா டீ ஜோய்சா (26) என்ற இளைஞரை சந்தித்துள்ளார்.பின்னர் வயது வித்தியாசத்தை மீறி இருவரும் அடுத்த ஆறு மாதங்களில் திருமணம் செய்து கொண்டனர். இதன்பின்னர் பிரியஞ்சனா ஏற்கனவே இளம் பெண்ணை திருமணம் செய்தவர் என டயனுக்கு தெரியவந்தது.இதையடுத்து பிரியஞ்சனுக்காக அதிகளவில் பணத்தை டயன் செலவு செய்துள்ளார்.இலங்கையர் ஒருவரை பணக்கார பிரித்தானிய பெண் திருமணம் செய்த நிலையில் இலங்கையர் கொல்லப்பட்டதுடன், குறித்த பெண் அனைத்து பணத்தையும் இழந்து கடனாளியாகி சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளார்.பிரித்தானியாவை சேர்ந்தவர் டயன் டீ (60). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு சுற்றுலா வந்த போது அந்நாட்டை சேர்ந்த பிரியஞ்சனா டீ ஜோய்சா (26) என்ற இளைஞரை சந்தித்துள்ளார்.பின்னர் வயது வித்தியாசத்தை மீறி இருவரும் அடுத்த ஆறு மாதங்களில் திருமணம் செய்து கொண்டனர். இதன்பின்னர் பிரியஞ்சனா ஏற்கனவே இளம் பெண்ணை திருமணம் செய்தவர் என டயனுக்கு தெரியவந்தது.


இதையடுத்து பிரியஞ்சனுக்காக அதிகளவில் பணத்தை டயன் செலவு செய்துள்ளார்.கடந்த ஆண்டு பிரித்தானியாவில் உள்ள தனது வீட்டை விற்ற டயன் கொழும்பில் ஒரு வீட்டை வாங்கியுள்ளார்.இதோடு £31,000 மதிப்புள்ள மினி பேருந்தையும் பிரியஞ்சனுக்காக வாங்கி கொடுத்துள்ளார். மொத்தமாக £90,000 வரை கணவருக்கு டயன் செலவு செய்தார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 30-ஆம் திகதி பிரியஞ்சனா அவர் நண்பர்கள் வீட்டில் சுட்டு கொல்லப்பட்டார்.பிரியஞ்சனா வசதியாக வாழ்வதை பார்த்த அவர் நண்பர்கள் பணத்துக்காக அவரை கொன்றுவிட்டதாக டயன் கூறுகிறார்.

பிரியஞ்சனா, நண்பர்களுக்கு பணம் கொடுத்து வந்த நிலையிலும் அதிக பணத்துக்கு அவர்கள் ஆசைப்பட்டதாக டயன் தெரிவித்துள்ளார்.டயன் கூறுகையில், என் மீதுள்ள காதலால் பிரியஞ்சனா என்னை மணக்கவில்லை என்பதை பின்னரே உணர்ந்தேன்.

பணத்துக்காக தான் என்னை அவர் திருமணம் செய்ய நினைக்கிறார் என எனது குடும்பத்தார் கூறியும் நான் முன்னர் கேட்கவில்லை. நான் பிரியஞ்சனாவுடன் தங்கியபோது என்னை வீட்டில் அடைத்து வைத்து அவர் குடும்பத்தார் பணம் கேட்டு மிரட்டுவார்கள்.தற்போது எல்லா பணத்தையும் இழந்துவிட்டு கடனாளியாக சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளேன் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
Read more »

விடுமுறையில் வீட்டிற்கு சென்று குளத்தில் நீராடச் சென்ற இராணுவச் சிப்பாய்க்கு நடந்த சோகம்…..!!

வில்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்துன்கமுவ வாவியில் நீரில் மூழ்கி இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளார்.நீராடச்சென்ற நால்வரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக வில்கமுவ பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


உயிரிழந்தவர் 35 வயதுடைய கும்புறுகமவ பகுதியை சேர்ந்த ஹேவா கங்கானம்கே கனேஷ் பிரியதர்சன் எனப்படுபவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேற்படி நபர் சாவகச்சேரி இராணுவ முகாமில் பணிபுரிபவர் எனவும் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ளுவதற்காக கந்துன்கமுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வில்கமுவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .
Read more »

காட்டு யானைகள் தாக்கியதில் சிறுமிகள் ரிஸ்கா மற்றும் அவரின் உறவினரின் மகள் வபாத்தான சோகம்.


(எச்.எம்.எம்.பர்ஸான்)
காட்டு யானைகள் வசிப்பிடத்தில் புகுந்து தாக்கியதில் இரண்டு சிறுமிகள் பலியாகியுள்ளனர்
இச் சம்பவம் இன்று (23) மஹிங்கனைப் பகுதியில் அதிகாலை 1மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவறுவதாவது

ஓட்டமாவடி, பதுரியா நகரைச் சேர்ந்த றிஸ்வான் என்பவர் மஹியங்கனையில் வசித்து வந்தார்.


சம்பவம் நடந்த நேரத்தில் றிஸ்வான் என்பவருடைய இரண்டு பிள்ளைகளும் இவரின் பராமரிப்பிலுள்ள உறவினரின் இரண்டு பிள்ளைகளும் ஒரு வீட்டில் ஒன்றாக உறங்கியுள்ளனர்.

நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை குறித்த வீட்டில் உறக்கத்திலிருந்தவர்களை தாக்கியத்தில் இரண்டு சிறுமிகள் (ரிஸ்கா வயது 9 மற்றும் உறவினரின் மகள் வயது 11) சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த பெற்றோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Read more »

இலங்கை ரூபா, 180 ஆக வீழ்ச்சி


இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.


அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 180.66 ரூபாவாக பதிவாகியுள்ளது.


இது இலங்கை வரலாற்றில் இலங்கை ரூபா அதிக வீழ்ச்சியடைந்த முதலாவது சந்தர்ப்பமாகும்.


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு காரணமாக அமைவதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
Read more »

ரணிலை பிரதமராக ஏற்றுக்கொள்ளும் வகையில், பெரும்பான்மையை ஏற்றுக்கொள்ள முடியுமா..?ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஏற்றுக் கொள்வது தொடர்பில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் விடுத்துள்ளார்.


நாடாளுமன்றில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,


எமக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதனை விடுத்து ரணிலுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என்பதனை நிரூபிக்க முடிந்தால் ஓர் பிரேரணை கொண்டு வர வேண்டும்.


முடிந்தால் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களை ரணிலுக்கு ஆதரவாக நாடாளுமன்றில் வாக்களிக்குமாறு நான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் விடுக்கின்றேன்.


மேற்குலக நாடுகள் இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்து வருகின்றன. எதிர்க்கட்சி தலைவரையும், சபாநாயகரையும், ரணிலையும் வெளிநாட்டு தூதுவர்கள் சந்திப்பதற்கான அவசியம் என்ன?


கடந்த காலங்களில் இந்த ராஜதந்திரிகள் எங்கிருந்தார்கள்? புதிய அரசியல் அமைப்பின் ஊடாக சமஸ்டி அரசாங்கமொன்றை உருவாக்குவதே மேற்குலக நாடுகளின் நோக்கமாக அமைந்துள்ளது.


சபாநாயகரினால் இந்த அனைத்துப் பிரச்சினைகளும் நாடாளுமன்றில் ஏற்படுகின்றது. நான் எந்த சந்தர்ப்பத்திலும் மிளகாய்தூள் கொண்டுவரவில்லை என மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
Read more »

பாராளுமன்றில் இன்று, நடந்தது என்ன..? (முழு விபரம்)
பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமக்கு அதிக இடம் வழங்கபட வேண்டும் என மஹிந்த தரப்பினரும் ராஜபக்ஷ குழுவினர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இழந்த நிலையில் தம்மை ஆளும் கட்சியென ஒருபோதும் கூற முடியாது எனவும் அதனால் அவர்களுக்கு அதிக இடம் வழங்க முடியாது என ரணில் தரப்பினரும் மோதிக்கொண்டனர்.


இந்நிலையில் பாராளுமன்றத்தில் கட்சிகளின் பெரும்பான்மை அடிப்படையிலேயே தெரிவுக்குழு அமைய வேண்டும் என ரணில் தரப்பினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


இதனையடுத்து இதுதொடர்பில் ஆராய இன்று காலை சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.


இதில் எவ்வித இணக்கப்பாடும் இன்றி கூட்டம் முடிவடைந்ததை அடுத்து இன்று காலை பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.


இதையடுத்து பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் 5 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் 5 உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஒரு உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஒரு உறுப்பினரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் மன்றில் அறிவித்திருந்தார்.


இது குறித்து பாராளுமன்றில் அரசியலமைப்புக்கு முரணாக மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டு ஒருமாத காலம் முடிவடையும் நிலையில் இன்னும் பாராளுமன்றில் அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் உள்ளனர்.


அவ்வாறு தமக்கு பெரும்பான்மை இருக்கின்றது என நிரூபித்தாலும் தாம் அவர்களுக்கு இடம்விட்டு விலகியிருக்க தயாராக இருக்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.


பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறும் அங்கத்தவர்கள் தொடர்பாக மன்றில் இடம்பெற்ற வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறிய மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரை அரசாங்கமாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பிரதமர் என ஒருவர் இல்லை எனவும் சபாநாயகர் ஏற்கனவே அறிவித்திருந்தீர்கள். அதன் அடிப்படையில் ஆட்சியில் இல்லாதவர்களுக்கு எவ்வாறு தெரிவுக்குழுவில் அதிக உறுப்பினர்களை வழங்க முடியும் என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.


இதேவேளை, சபாநாயகரின் அறிவிப்பை ஏற்க மாட்டோம் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.


தெரிவுக்குழுவில் எனக்கும் ஒரு உறுப்புரிமை தேவையென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் டக்ளஸ் தேவானந்த பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.


நான் ஆளுங்கட்சியில் இருக்கின்றேனா அல்லது எதிர்க்கட்சியில் இருக்கின்றேனா என்பது எனது முடிவு.


ஆனால் நான் எனது கட்சியின் மூலமே நான் பாராளுமன்றத்திற்கு தெரிவானேன். அதன்படி எனது கட்சிக்கும் தெரிவுக்குழுவில் உறுப்புரிமை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் என சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.


தற்போது அராசாங்கம் என்று ஒன்று இல்லை, தெரிவுக் குழு குறித்து வாக்கெடுப்பை நடத்துங்கள் மக்கள் விடுதலை முன்னணியின் அனுரகுமார திஸாநாயக்க மன்றில் வேண்டுகொள் விடுத்தார்.


இதேவேளை, பாராளுமன்றில் அவநம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்படவில்லையென விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டிருந்தார்.


இன்று மன்றில் தினேஷ் குணவர்தன, லக்ஷ்மன் கிரியெல்ல, டக்ளஸ் தேவானந்தா, பந்துல குணவர்தன, அநுரகுமார திஸாநாயக்க, வீமல் வீரவன்ச, அஜித் பெரேரா ஆகியோர் தெரிவுக்குழு தொடர்பில் பல்வேறு கருத்துக்களை மன்றில் முன்வைத்திருந்தனர்.


இந்நிலையில், ஆட்சியில் உள்ளவர்களுக்கே பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அதிகமான அங்கத்துவம் வழங்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.


ஆனால் பாராளுமன்றில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியுள்ளமையால் அவர்களின் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் அறிவித்திருந்தார்.


இந்நிலையில் சபாநாயகரின் அறிவிப்புக்கமைய பெரும்பான்மையற்றவர்களுக்கு எவ்வாறு அதிகமான அங்கத்துவத்தை வழங்க முடியும் என ஐக்கிய தேசியக் முன்னணியினர் கேள்வியெழுப்பினர்.


இதற்கு மத்தியிலேயே இன்று பாராளுமன்றம் கூடிய போது எழுந்த வாதப் பிரதிவாதங்களால் மஹிந்த அணியினர் வெளிநடப்பு செய்திருந்தனர்.


பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்தவர்கள் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்பது தொடர்பில் மன்றில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. ஆகியோர் கோரிக்கை விடுத்தமைக்கு அமைய, சபாநாயகர் இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்படுமென அறிவித்தார்.


இதனையடுத்து மஹிந்த தரப்பு வெளிநடப்பு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.


இதன்போது லக்ஷ்மன் கிரியெல்ல, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், சரத் பொன்சேகா எம்.பி. உள்ளிட்ட சிலருக்கு இலத்திரனியல் கோளாறு காரணமாக இலத்திரனியல் முறையில் வாக்கை செலுத்த முடியாமல் இருந்தது. அவர்கள் வாய்மூலம் தமது வாக்கை செலுத்தினர்.


தெரிவுக்குழு உறுப்பினர் தொடர்பில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 121 பேர் ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read more »

சபாநாயகரிடம் மரிக்கார், செய்த முறைப்பாடு


நாட்டின் ஊடகங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


பெரும்பான்மையான ஊடகங்கள் மஹிந்த தரப்பினை ஆளும் கட்சி என குறிப்பிட்டு செய்தி அறிக்கையிட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.


சபாநாயகர் நாட்டில் அரசாங்கமொன்று இல்லை என அறிவித்துள்ள நிலையில் சபாநாயகரின் தீர்மானத்தை புறந்தள்ளி ஊடகங்கள் மஹிந்த தரப்பினை ஆளும் கட்சி என அறிவித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Read more »

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..?காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம். அய்யோ…. என்ன ஆயிற்று எனக்கு? நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? ஒரு நிமிடம் யோசிக்கிறேன்….

நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன்.


காபி வேண்டுமே, என் மனைவி எங்கே? மணி பத்தாகிவிட்டது . என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம். அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான். அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்……

என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள்.
பெண்கள் எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள், சோக கப்பிய முகத்துடன் இறுக்கமாக நின்றிருந்தார்கள். தெரு ஜனங்கள் உள்ளே வந்து என் உடலைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள்.

என் மனைவிக்கு சிலர் ஆறுதல் சொல்கிறார்கள். குழந்தைகளைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள்.நான் இறக்கவில்லை., இங்கே இருக்கிறேன் என்று கத்தினேன். ஆனால், என் குரல் யாருக்கும் கேட்கவில்லை.

என் உடல் அருகே நான் நிற்பது கூட யாருக்கும் தெரியவில்லை.அய்யோ என்ன செய்வேன் நான்? எப்படி அவர்களுக்குத் தெரிவிப்பேன்?

நான் மீண்டும் என் படுக்கை அறைக்கு சென்றேன். “நான் இறந்துவிட்டேனா?” நான் என்னையே கேட்டேன். இறப்பு இப்படித்தான் இருக்குமா?

என் மனைவியும், அம்மா, அப்பாவும் அடுத்த அறையில் அழுதுகொண்டிருந்தார்கள். என் மகனுக்கு என்ன நடக்கிறது என்பது விளங்கவில்லை. எல்லோரும் அழுவதால், அவனும் அழுது கொண்டிருக்கிறான்.
நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். அவனை பிரிந்து என்னால் இருக்கவே முடியாது. என் மனைவி, பாசமும், பரிவும் கொண்டவள். எனக்கு தலைவலி என்றால் கூட அவள் அழுவாள்.

அவளை பிரியப்போவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
அம்மா, நான் ஒரு குழந்தைக்கு தந்தையானபோதும், இன்னமும் என்னை குழந்தையாகவே பார்ப்பவள். அப்பா, கண்டிப்பானவர் என்றாலும், அந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றிலும் பாசமே நிறைந்திருக்கும்.


இதோ, ஒரு மூலையின் நின்று அழுது கொண்டிருப்பவன், அட.. என் நண்பன். பகையை மறந்து வந்திருக்கிறானே? சிறு தவறான புரிதல் எங்களை பிரித்துவிட்டது. இருவரும் பேசி ஓராண்டுக்கு மேலாகிறது. அவனிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.

அருகில் சென்று அவனை அழைக்கிறேன். ஆனால், என் குரல் அவனுக்குக் கேட்கவில்லை. என் உடலைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான்.ஆம்.. நான்தான் இறந்துவிட்டேனே. அருகில் மாட்டப்பட்டிருக்கும் சாமிப் படங்களைப் பார்க்கிறேன்.

“ஓ கடவுளே! எனக்கு இன்னும் சில நாட்கள் கொடுங்கள். நான் என் மனைவி, பெற்றோர்கள் நண்பர்களிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று வெளிப்படுத்த வேண்டும்” என் மனைவி அறையில் நுழைந்தாள். “நீ அழகாக இருக்கிறாய் ”
என்று நான் கத்தினேன். நான் அவளால் என் வார்த்தைகளைக் கேட்கவில்லை.
உண்மையில் இதற்கு முன்னால் இவ்வாறு சொல்லவே இல்லை.


“கடவுளே!” நான் கதறினேன். அழுதேன். தயவு செய்து இன்னும் ஒரு வாய்ப்பு, என் குழந்தையை கட்டி அணைக்க , என் அம்மாவை ஒரு முறையாவது சிரிக்க வைக்க , என் அப்பா என்னை பெருமையாய் நினைக்க வைக்க , என் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க, இப்பொழுது நான் அழுதேன்!

திடீரென என் உடலை பிடித்து யாரோ உலுக்கினார்கள். அதிர்ந்து கண் விழித்தேன். “தூக்கத்தில் என்ன உளறல், கனவு ஏதாவது கண்டீர்களா? என்றாள் மனைவி.
ஆம் வெறும் கனவு. நிம்மதியானேன். ..

என் மனைவியால் தற்போது நான் பேசுவதைக் கேட்க முடியும் இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம். அவளை கட்டி அணைத்து. ” இந்த பிரபஞ்சத்திலேயே நீ மிகவும் அழகான மற்றும் பாசமான மனைவி, உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்” என்றேன் முதன் முறையாக.

முதலில் புரியாமல் விழித்த அவள், பின்னர், என் அருகே வந்து என்னை அணைத்துக்கொண்டாள். அவளது கண்களில் இருந்து லேசாக கண்ணீர் வெளியேறத் துடித்தது. அது ஆனந்தக் கண்ணீர் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது. இந்த இரண்டாவது வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி.
நண்பர்களே……

இன்னும் உங்களுக்கு நேரம் இருக்கிறது. உங்களது ஈகோவை புறம் தள்ளி விட்டு உங்களது பாசத்தையும் நேசத்தையும் உங்களிடம் நெருக்கமானவர்களிடம் வெளிபடுத்துங்கள். ஏனெனில் உங்களுது பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்!!!!பிடித்திருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
Read more »

உங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா? மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்!

வாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம்.இருப்பினும் சில சமயங்களில் ஏதாவது விபத்துக்கள் அல்லது வேறு காரணங்களினால் இந்த ஆவணம் பாதிப்படையலாம் அல்லது காணாமல் செய்யப்படலாம்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளும், ஆவணத்தின் பிரதியை பெற்றுக் கொள்ள இலகுவான வழிகளும் கீழே தரப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர் படிவம் “M.T.A. 42” கீழ்கண்ட இடங்களிலிருந்து பெறுதல்
மாவட்ட செயலக அலுவலகங்கள் (சாதாரண சேவை)
வெரஹேராவில் உள்ள தலைமை அலுவலகம் – கொழும்பு (ஒரு நாள் சேவை-முன்னுரிமபூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் சேர்த்து தேவையான ஆவணங்களையும் துணை ஆணையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்மாவட்ட செயலக அலுவலகங்கள் (சாதாரண சேவை)
வெரஹேராவில் உள்ள தலைமை அலுவலகம் – கொழும்பு (ஒரு நாள் சேவை-முன்னுரிமை)
விண்ணப்பதாரர்கள் சமர்பித்த ஆவணங்கள் சரியானவை இல்லை என கண்டறியப்பட்டால் போலி உரிமத்திற்கான வேண்டுகோள் நிராகரிக்கப்படும் மற்றும் விண்ணப்பதாரர்கள் இது தொடர்பான ஆவணங்களை மறுபடியும் சமர்ப்பிக்க வேண்டும்.

கீழ்காணும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு விண்ணப்பதாரர்கள் இந்த சேவைக்காக விண்ணப்பிக்க வேண்டும் ஓட்டுனர் உரிமம் தொலைந்து போயிருப்பின்
ஓட்டுனர் உரிமம் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருப்பின் இந்த சேவையில் தகுதி பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் கட்டளைகளை சந்திக்க வேண்டும்: ஓட்டுனர் உரிமத்தின் உரிமையாளராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் வழங்கும் உரிமத்தின் விபரங்கள் கீழ் கொடுத்திருக்கும் இரண்டிற்குள் இருக்க வேண்டும்.
கணிப்பொறி திணைக்களம் (1996க்குப் பிறகு வழங்கப்பட்ட உரிமம் எனில்)
செயல்முறை கோப்பு (1996க்கு முன் வழங்கப்பட்ட உரிமம் என்றால்)

:மேலே கொடுக்கப்பட்டுள்ள கட்டளையை சந்திக்காத விண்ணப்பதாரர்கள் யாராக இருந்தாலும் தகுதியற்றவர்கள் என்று கருதப்படுவர்.சமர்ப்பிக்கும் முறைகள்

அனைத்து விண்ணப்பங்களும் உரிமப் பிரிவின் ஆணையாளரிடம் அனுப்பப்படும்.

ஆணையாளர் – வாகனப் போக்குவரத்து திணைக்களம்,
தபால் பெட்டி: 533, 581-341, எல்விட்டிகல மாவத்தை.
கொழும்பு 5.

உரிமம் பெறுவதற்கான எளிய வழியை விண்ணப்பதாரர்களுக்கு வழங்குதல்அனைத்து மாவட்ட காரியதரிசி அலுவலகங்கள் (சாதாரண சேவை)
வெரடிஹராவில் உள்ள தலைமை அலுவலகம் – கொழும்பு (ஒரு நாள் சேவை-முன்னுரிமை)

செயல்முறை காலக்கெடு:

ஒரு நாள் சேவைக்காக விண்ணப்பித்தல் (முன்னுரிமை) – ஒரு நாட்களுக்குள் உரிமம் வழங்கப்படும்.
சாதாரண சேவைக்காக விண்ணப்பித்தல் – 3 மாதத்திற்குள் உரிமம் வழங்கப்படும்.
ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கெடு:

செயல்கள் முடிவடையும் வரை மற்றும் போலி உரிமம் வழங்கும் வரை அந்த விண்ணப்பம் செல்லுப்படியாகும்.

கட்டணம்:
வேண்டுதலின் வகை – சாதாரண சேவை – முன்னுரிமை சேவை

தொலைந்த உரிமத்திற்காக – ரூ.520.00 – ரூ.770.00
சேதாரமான உரிமத்திற்காக – ரூ.520.00 – ரூ.770.00
3 வருட புதுப்பித்தலில் தொலைந்த உரிமத்திற்காக – ரூ.820.00 – ரூ.1120.00
5 வருட புதுப்பித்தலில் தொலைந்த உரிமத்திற்காக – ரூ.1120.00 – ரூ.1470.00
5 வருட புதுப்பித்தலில் தொலைந்த உரிமத்திற்காக – ரூ.1420.00 – ரூ.2270.00
தேவையான இணைப்பு ஆவணங்கள்:

– “2*2” அளவில் இரண்டு கருப்பு வெள்ளை நிழற்படங்கள் அதில் ஒரு நிழற்படத்தின் பின்புறம் கிராம நிலதிகாரியிடம் அத்தாட்சி பெற்றிருக்க வேண்டும்.

– உரிமம் தொலைந்து விட்டது என்று பொலிஸிடம் கொடுத்த பதிவின் அத்தாட்சி நகல். அந்த நகல் கடைசி 6 மாத காலத்திற்குள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.– தேசிய அடையாள அட்டை – தேசிய அடையாள அட்டையின் இலக்கம் கொண்டுள்ள செல்லத்தக்க கடவுச்சீட்டின் அசல் மற்றும் நிழற்படநகல்– விண்ணப்பதாரரின் தற்போதைய உரிமம் – உரிமம் பழுதடைந்திருக்கும் பட்சத்தில்,முன்னுரிமை சேவைக்கு பதிவுசெய்யும் போது கிராம நிலதாரியிடமிருந்து ஒரு கடிதம் அல்லது மண்டல செயலதிகாரி சான்றழித்த வாழ்விட உண்மை அத்தாட்சியை விண்ணப்பதாரர் வழங்க வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்ய>>>
Read more »

வவுனியாவில் இரவு நேரத்தில் தனியாக சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்….!

வவுனியா – காத்தார்சின்னகுளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம், காத்தார்சின்னகுளம் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிள், துவிச்சக்கர வண்டியொன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.இதன்போது மோட்டார்சைக்கிளில் பயணம் செய்த மூவரும், துவிச்சக்கர வண்டியில் சென்ற பெண்ணொருவரும் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மோட்டார்சைக்கிளில் சென்ற மூவரும் மதுபோதையில் காணப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.


அத்துடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Read more »

எதிர்பார்ப்புகளிடையே இன்று 1 மணிக்கு பாராளுமன்றம் - கலரிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதிமறுப்பு


நாடாளுமன்றம் இன்று -19- பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கருஜசூரிய தலைமையில் கூடவுள்ளது. இந்நிலையில், மக்கள் கலரிகளுக்கு செல்வதற்கு, பொதுமக்களுக்கு இன்று அனுமதியளிக்கப்படமாட்டாது.


நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ள நிலையில், அதற்கு முன்தாக, ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது.


அதன் பின்னர், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நண்பகல் 12 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும். இதன்போது, நாடாளுமன்றத்தில் இன்றைய நடவடிக்கையை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் அறியமுடிகின்றது.
Read more »

மைத்திரி முன் மகிந்தவும், ரணிலும் பேசியது இதுதான்...!


தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கான காரணங்கள் என்னவென்பது தெரியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் குற்றச்சாட்டு என்ன என்று எனக்குத் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.


நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வ கட்சி கூட்டத்தில் பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


“நான் எந்த விதத்தில் நம்பிக்கையை உடைத்தேன் என்று கூட தெரிந்து கொள்ள எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட கடந்த 14ஆம் திகதி நான் பேச சந்தர்ப்பம் கேட்டேன் எனினும் சபாநாயாகர் அதற்கு அனுமதிக்கவில்லை. அதனாலேயே நான் நாடாளுமன்றத்தை விட்டு எழுந்து சென்றேன்” என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.


நேற்றைய கூட்டம் ஆரம்பித்தது முதல் அமைதியாக இருந்த, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உரையாற்றுமாறு ஜனாதிபதி மைத்திபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.


நாங்கள் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பித்தோம். அதில் வெற்றி பெற்றோம். எங்களுக்கு அரசாங்கம் ஒன்றை அமைக்க இடமளிக்குமாறே கேட்கின்றோம் என ரணில் தனது உரையை சுருக்கமாக முடிந்துக் கொண்டார்.
Read more »