வழிபாட்டாளர்களை கற்பழித்த போதகருக்கு 15 ஆண்டு சிறை
தென் கொரியாவின் எட்டு பெண் வழிபாட்டாளர்களை கற்பழித்த குற்றச்சாட்டில் போதகர் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மமின் மத்திய தேவாலயத்தின் சுமார் 130,000 சீடர்களைக் கொண்ட 75 வயது லீ ஜீ ரொக் தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரித்துள்ளார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் அவரது இறை சக்தி பற்றி குறிப்பிட்டிருப்பதோடு, அவர் கடவுளாக இருப்பதால் அவர் கூறுவதை செய்வது கட்டாயம் என உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

தென் கொரியாவின் கிறிஸ்தவர்களில் பெரும்பாலானவர்கள் பிரதான தேவலாயங்களுடன் தம்மை இணைத்துக் கொண்டபோதும் சிறு எண்ணிக்கையானவர்கள் வழிபாடுகள், சடங்குகளில் ஈடுபடும் அமைப்புகளுடன் தொடர்புபட்டுள்ளனர்.

லீயின் தேவாலயம் கிறிஸ்தவத்தில் இருந்து விலகிய வழிபாடுகளைக் கொண்டிருப்பதாக பிரதான கிறிஸ்தவ வழிபாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

லீ 1982 ஆம் ஆண்டு 12 வழிபாட்டாளர்களுடன் மமின் மத்திய தேவாலயத்தை ஆரம்பித்தார். தற்போது அது நாட்டின் பிரமாண்ட அமைப்பாக மாறியுள்ளது.

இந்நிலையில் அவர் தம்முடன் கட்டாய பாலுறவில் ஈடுபட்டதாக மூன்று வழிபாட்டாளர்கள் இந்த ஆண்டு ஆரம்பத்தி குற்றம்சாட்டினர்.