வெலிகம மதுராபுரயில் இடம்பெற்ற விபத்தில் தரம் 2 சிறுமி வபாத்.


வெலிகம மதுராபுரயில் இன்று மாலை வீதியை கடக்க முற்பட்ட ஏழு வயது சிறுமி பாதிமா அமானியை வேகமாக வந்த லொறி மோதியது. இதனால் தலையில் பலமாக அடிபட்ட சிறுமி துடி துடிக்க வாகனமொன்றில் அவசரமாக வலானை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனாலும் சிறுமி விபத்துக்குள்ளாகி சில நிமிடங்களிலேயே இறந்துவிட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில் இவ்விபத்தைக் கண்ட சிலர் ஆத்திரத்தில் குறித்த லொறியையும் தாக்கியுள்ளனர். வாகனத்தின் முன் கண்ணாடி முழுமையாக சேதமாக்கப்பட்டுள்ளது. தெனிபிடிய பிரதேசத்தைச் சேர்ந்த வாகன சாரதி பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.