தொங்கிகொண்டு இருக்கும் சருமத்தை மாற்ற ? தேங்காய் எண்ணெயை இதோட அப்ளை பண்ணுங்க

சருமம் இறுக்கம் இழந்து தொங்க ஆரம்பிப்பது வயது முதிர்வின் அடையாளமாகும். ஆனால் ஆரம்பக் கட்டத்திலேயே இதனைத் தடுப்பதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளும்போது வயது முதிர்விற்கான அறிகுறிகளைத் தாமதப்படுத்தலாம்.இந்த பதிவில் நாம் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி சருமத்தை இறுக்கமாக மாற்றுவதைப் பற்றி பார்க்கவிருக்கிறோம். இதன்மூலம் உங்கள் வயது முதிச்சி அறிகுறி தடுக்கப்படுகிறது, சருமமும் இறுக்கமாகிறது..
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் சருமத்தை நீர்ச்சத்தோடு வைத்து ஈரப்பதம் தருவதால் சருமத்தில் உண்டாகும் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் தடுக்கப்படுகிறது. தேங்காய் எண்ணெயில் உள்ள வைடமின் ஏ சத்து கொலோஜென் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை சுருக்கங்கள் அற்றதாக மாற்றுகிறது. மேலும், தேங்காய் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலங்கள் சருமத்தில் புதிய அணுக்கள் உற்பத்திக்கு உதவுகின்றன.
தேங்காய் எண்ணெய்யில் உள்ள லாரிக் அமிலம் கிருமி எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டதாகும். தொடர்ந்து தேங்காய் எண்ணெய்யை ,முகத்திற்கு பயன்படுத்துவதால் உங்கள் முகம் மிருதுவாகவும் மென்மையாகவும் மாறுகிறது.