Breaking

Monday, November 12, 2018

உலக முடிவிலிருந்து செல்பி; ஜேர்மன் பெண் வீழ்ந்து பலி


மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு நுவரெலியா உலக முடிவு (World's End) பகுதிக்குச் சுற்றுலா சென்ற ஜெர்மன் நாட்டுப் பெண் செல்பி எடுக்க முயற்சித்தபோது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் அம்பேவலை பட்டிபொல (World's End) பகுதியில் நேற்று (11) காலை 8.30 மணியளவில் நடந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, ஜெர்மன் நாட்டை ச் சேர்ந்த யூலியா எல்கா என்ற 35 வயது பெண் நேற்று காலை 5.30 மணியளவில் அவருடைய தோழியான நினிதி ரிபேர் என்பவருடன் காரில் நுவரெலியாவில் இருந்து அம்பேவலை பட்டிபொல பகுதியில் அமைந்துள்ள உலக முடிவு (World's End) பகுதிக்குச் சென்றுள்ளார்.இவர்கள் இருவரும் உலக முடிவு பூங்காவின் நுழைவாயிலை 6.30 மணியளவில் சென்றடைந்து அங்கிருந்து நுழைவுச் சீட்டை பெற்றுக் கொண்டு உலக முடிவு பகுதியை பார்வையிடுவதற்காகச் சென்றுள்ளனர்.

இந்த உலக முடிவு பகுதியில் மிகவும் அபாயகரமான பகுதியில் யூலியா எல்கா செல்பி எடுப்பதற்கு முயற்சி செய்துள்ளார்.இதன்போது கால் இடறி பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார்.

இவருடைய நண்பி கூக்குரல் இட்டதை கேள்விப்பட்ட ஏனைய சுற்றுலா பயணிகள் அந்த இடத்திற்கு வந்து நிலைமையை அறிந்து காவலர்களுக்குத் தகவல்களை வழங்கியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து அவர்கள் பட்டிபொலை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் குறித்த இடத்திற்கு வருகை தந்துள்ளதோடு விமான படையினரின் உதவியுடன், பலாங்கொடை நொன்பேரியல் பள்ளத்தாக்கில் மரத்தில் தொங்கியிருந்த நிலையில் சடலத்தை மீட்டுள்ளனர்.