பாக். தெய்வ நிந்தனை விவகாரம்: 'ஆசியா' சிறையிலிருந்து விடுதலைபாகிஸ்தானில் தெய்வ நிந்தனை குற்றச்சாட்டில் எட்டு ஆண்டுகள் சிறை அனுபவித்து விடுதலை அளிக்கப்பட்ட பாகிஸ்தான் கிறிஸ்துவ பெண்ணான ஆசியா பீபி சிறையில் இருந்து விடுதலை பெற்றதாக அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். ஆசியா பீபி விமானம் ஒன்றில் ஏற்றி அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆசியா பீபியை விடுவிக்கும் உச்ச நீதிபன்ற தீர்ப்புக்கு எதிராக பாகிஸ்தானில் கடும்போக்கு இஸ்லாமியவாதிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதோடு அவர் நாட்டை விட்டு வெளியேற தடைசெய்யப்படுவதாக பாகிஸ்தான் அரசு குறிப்பிட்டுள்ளது.

எனினும் தாம் ஆபத்தில் இருப்பதாக கூறும் அவரது கணவர் வெளிநாடுகளில் தஞ்சம் கோரியுள்ளார். ஐந்து குழந்தைகளின் தாயான ஆசியா பீபி முல்தான் நகர சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் சயிப் முலுௗத் நேற்று குறிப்பிட்டார். ஆசியா நோரீன் என்றும் அழைக்கப்படும் அந்தப் பெண் 2010 ஆம் ஆண்டு அயலவர்களுடன் ஏற்பட்ட சண்டையில் முஹமது நபியை அவமதித்ததாக குற்றங்காணப்பட்டார். அவருக்கு அடைக்கலம் வழங்க பல நாடுகளும் முன்வந்துள்ளன.