விடுமுறையில் வீட்டிற்கு சென்று குளத்தில் நீராடச் சென்ற இராணுவச் சிப்பாய்க்கு நடந்த சோகம்…..!!

வில்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்துன்கமுவ வாவியில் நீரில் மூழ்கி இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளார்.நீராடச்சென்ற நால்வரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக வில்கமுவ பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


உயிரிழந்தவர் 35 வயதுடைய கும்புறுகமவ பகுதியை சேர்ந்த ஹேவா கங்கானம்கே கனேஷ் பிரியதர்சன் எனப்படுபவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேற்படி நபர் சாவகச்சேரி இராணுவ முகாமில் பணிபுரிபவர் எனவும் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ளுவதற்காக கந்துன்கமுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வில்கமுவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .