வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதியை, சந்திக்க மறுத்த பௌத்த பீடங்கள்

கண்டி தலதா மாளிகைக்கு நேற்று சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர்கள் மறுத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் நள்ளிரவு நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.இதன் பின்னர் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பௌத்த பீடங்களின் மாநாயக்க தேரர்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார். இதற்கமைய மாநாயக்க தேரர்களை சந்திக்க வரவுள்ளதாக ஜனாதிபதி தூது அனுப்பியுள்ளார்.நாட்டில் தற்போதுள்ள நிலைமைக்கு அமைய ஜனாதிபதி சந்திக்க பெருத்தமற்றது எனவும் சந்திக்க முடியாது எனவும் மாநாயக்க தேரர்கள் கூறியுள்ளனர்.

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நாட்டின் மிகப் பெரிய பௌத்த பீடங்களின் மாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி ஒருவரை சந்திக்க மறுத்துள்ள சம்பவம் நடந்துள்ளதாக அரசியல் தரப்பில் பேசப்படுகிறது. இதற்கு முன்னர் தம்மை சந்திகக் வந்த எந்த அரச தலைவர்களையும் மாநாயக்க தேரர்கள் திரும்பி அனுப்பியதில்லை அஸ்கிரிய மற்றும் மல்வத்து பௌத்த பீடங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.