மனைவி, இரண்டு குழந்தைகளை கொன்றவரின் குற்றம் நிரூபணம்
அமெரிக்காவின் கொலராடோவைச் சேர்ந்த கிறிஸ் வட்ஸ் என்பவர் தனது மனைவி மற்றும் மகள்மாரை கொலை செய்ததாக குற்றங்காணப்பட்டுள்ளார்.

வட்ஸ் தன் மீதான ஒன்பது குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டதை அடுத்து அவர் மீது மரண தண்டனை விதிப்பதை கைவிட மாவட்ட சட்டமா அதிபர் இணங்கியுள்ளார்.

15 வாரங்கள் கர்ப்பிணியாக இருந்த ஷனன் வட்ஸ் மற்றும் அவரது மூன்று மற்றும் நான்கு வயது மகள்மார் கடந்த ஓகஸ்ட் மாதம் காணமால்போயினர். சிறுமிகளின் உடல்கள் எண்ணை தாங்கி ஒன்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டதோட தாயின் உடல் புதைகுழி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டது.

இந்நிலையில் தனக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக மனைவிக்கு கூறியதை அடுத்து அவர் தமது குழந்தைகளில் ஒருவரை கொலை செய்ததாகவும் தம்மீது தாக்குதல் தொடுக்கும்போது அடுத்த குழந்தையை கொன்றதாகவும் அந்தக் கணவர் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.

வரும் நவம்பர் 19 ஆம் திகதி இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும்போது வட்ஸ் தொடர்ச்சியான மூன்று ஆயுள் தண்டனைகளுக்கு முகம்கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.