Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

இலங்கையில் இளம் பெண்ணின் மோசமான செயற்பாடு!! திகைத்து நிற்கும் பொலிஸார்….!

இலங்கையில் பொலிஸாருக்கு பெரும் நெருக்கடி கொடுக்கும் வகையில் செயற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மக்களின் பெருந்தொகை பணத்தை ஏமாற்றி மோசடி செய்த பெண் ஒருவர், தலைமறைவாகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.




பல லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றிய நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.ஒரு லட்சம் ரூபாய் பணம் வைபை்பு செய்பவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் பாதுகாப்பு வட்டிப்பணம் வழங்குவதாக கூறிஇ பொது மக்களை குறித்த பெண் ஏமாற்றியுள்ளார்.


சுமார் 8 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகிய ஷாமலி திஸாநாயக்க என்ற 29 வயதான இளம் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் பொலநறுவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுஇ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவித்துள்ளார்.ஒன்றரை மாத காலமாக குறித்த பெண் தான் வசித்த பகுதி மக்களுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டு வந்துள்ளார்.

மக்களின் நம்பிக்கையை பென்ற பெண் திடீரென தலைமறைவாகியுள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி முதல் தலைமறைவாகிய பெண்ணை பொலநறுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பல வாரங்களாக பொலிஸாரை ஏமாற்றும் வகையில் தலைமாறைவாகி இருந்த பெண்ணின் செயற்பாடு பொலநறுவை பொலிஸாருக்கு திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.