மூடிய அறைக்குள் அமர்ந்து கொண்டு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் மோசமான முடிவை எடுத்துள்ளனர். - WeligamaNews

Latest

Monday, November 12, 2018

மூடிய அறைக்குள் அமர்ந்து கொண்டு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் மோசமான முடிவை எடுத்துள்ளனர்.மூடிய அறைக்குள் அமர்ந்து கொண்டு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் மோசமான முடிவை எடுத்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள ஐ.நா செயலாளர் நாயகத்தின் இளைஞர் விவகார பிரதிநிதி ஜெயத்மா விக்ரமநாயக்க, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.இலங்கை நிலவரம் குறித்து கவலை தெரிவித்து, தன்னுடைய டுவிட்டர் கணக்கிலேயே மேற்கண்டவாறு அவர் பதிவிட்டுள்ளார். ஆசியாவின் மிகப் பழமையான ஜனநாயகம்

சோதனைக்குள்ளாகியுள்ளது. அரசமைப்பும், ஜனநாயக விழுமியங்களும் கேள்விக்குறியாகியுள்ளன. சில வயதான நபர்கள் மூடிய அறைக்குள் உட்கார்ந்து கொண்டு, நாட்டின் தலைவிதியை முடிவு செய்து வருகிறார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கை அரசியல்வாதிகளுக்கு எனது கோரிக்கை ஒன்றுதான். நாட்டின் ஜனநாயகத்தை மதித்துக் காப்பாற்றுங்கள். அனைவரையும் உள்ளடக்கிய, வெளிப்படையான ஜனநாயகத்தை போற்றிப் பாதுகாக்க முயற்சியுங்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் அதை சீர் செய்ய முயலுங்கள் என்று ஜெயத்மா தன்னுடைய டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.