யாழ்ப்பாணத்தின் கஜா புயலின் தாக்க விபரம்...


-பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாணத்தின் கஜா புயலின் தாக்கத்தால் சேதமடைந்த புற நகரங்களான கரையோர பகுதிகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் பார்வையிட்டுள்ளார் வசந்தபுரம் அராலி வீதி நவாந்துறை கொட்டடி பண்ணைவீதி சோனகத்தெரு பொம்மைவெளி பகுதியில் மரங்கள் உடைந்து விழுந்துள்ளதுடன் நவாந்துறை பகுதி இராணுவ முகாம் காற்றினால் பகுதிஅளவில் சேதமடைந்துள்ளது.

எனினும் காற்றின் வேகம் இப்பகுதியில் தணியவில்லை என்பதுடன் மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது.

மேலும் வீதிகளில் ஆங்காங்கே சிறிய மரங்கள் முறிந்து சாய்ந்து காணப்படுகின்றன.