மகிந்த போட்டியிடப்போவது கொழும்பா..? குருநாகலா...??

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் மகிந்த ராஜபக்ச கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த முறை குருநாகல மாவட்டத்தில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச இம்முறை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி ஐந்தாம் திகதி பொது தேர்தல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. முன்னதாக சிறிலங்கா சுதந்திர கட்சியில் இருந்து இன்று விலகிய மகிந்த ராஜபக்ச சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் மகிந்த ராஜபக்ச கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இம்முறை பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்குவாரென, அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, பல மாவட்டங்களிலிருந்து பிரதமர் மஹிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் குருநாகல் மாவட்டத்திலேயே போட்டியிட பிரதமர் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.