இலங்கை உயர்நீதிமன்ற தீர்ப்பை, உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது

கொழும்பில் உள்ள - மேற்குலக பலம் வாய்ந்த நாடொன்றின் தூதுவரான எனது நண்பர் ஒருவர் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து என்னுடன் தொலைபேசியில் பேசினார்.

உயர்நீதிமன்ற தீர்ப்பை உலகமே பார்த்துக் கொண்டிருப்பதாக சொன்ன அவர்,

“ போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை வந்த போது அவை சர்வதேச நீதிக்கட்டமைப்பில் விசாரிக்கப்பட தேவையில்லை... உள்நாட்டு நீதித்துறை மட்டத்தில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று இலங்கை அரசு சர்வதேச சமூகத்துக்கு வாக்குறுதி அளித்துள்ளது.. அந்த நம்பகமான நீதித்துறையை நாங்கள் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். பார்ப்போம்”என்று உரையாடலின்போது குறிப்பிட்டார் அந்த தூதுவர்...மிகவும் சிந்திக்க வேண்டிய விடயம்...