இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா

காசாவுடனான யுத்த நிறுத்தத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அவிக்டர் லிபர்மான் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

எகிப்து மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட இந்த யுத்த நிறுத்தம் “பயங்கரவாதத்திடம் சரணடைவது” என லிபர்மான் விமர்சித்து 48 மணி நேரத்திலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.“மாறுபட்ட கருத்துகளுக்கு மத்தியிலும் அரசின் நம்பிக்கைக்குரிய உறுப்பினராக இருக்க முடியுமான வரை நான் முயற்சித்தேன்... என்றாலும் நான் தோல்வியடைந்துவிட்டேன்” என்று அவர் குறிப்பிடடுள்ளார்.

“இரு முக்கிய விடயங்கள் தொடர்ந்து நீடிக்க முடியாததற்கு காரணம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் காசாவில் பலஸ்தீனர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக கட்டார் அனுப்பிய 15 மில்லியன் டொலர் பணத்தை அங்கு செல்ல அனுமதித்தது குறித்தே அவர் குறிப்பிட்டு கூறினார்.