மைத்திரி, ரணிலுடன் வெளிநாட்டு இராஜதந்திரிகள் தனித்தனியே பேச்சு - நெருக்கடிகளை முடிக்க அழுத்தம்


சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலர், நேற்று இருதரப்புகளுடனும் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.


வெளிநாட்டு இராஜதந்திரிகள் குழுவொன்று நேற்று முற்பகல், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, அவரது செயலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியது.


பின்னர், நேற்று மாலை அந்த வெளிநாட்டு இராஜதந்திரிகள், அலரி மாளிகைக்குச் சென்று ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.


இரண்டு தரப்புகளுக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியாக- தற்போதைய அரசியல் நெருக்கடிகளை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருமாறு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.