Tata வாகன உரிமையாளர்களுக்கு உலகளாவிய சேவை நடவடிக்கை





- நவம்பர் 26 முதல் 28 ஆம் வரை
- DIMO மற்றும் Tata Motors Limited ஏற்பாடு

Tata Motors நிறுவனம் தனது வர்த்தகப் பாவனை வகுப்பு வாகன உற்பத்தி வரிசையில் மிகச் சிறந்த வாடிக்கையாளர்கள் அனுபவத்தை நோக்கிய, வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயற்பாடுகளின் தொடர்ச்சியாக, Diesel & Motor Engineering PLC (DIMO) மற்றும் Tata Motors Limited ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து 2018 நவம்பர் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை உலகளாவிய சேவை நடவடிக்கையொன்றை (Service Campaign) ஏற்பாடு செய்துள்ளன.

உலகளாவில் முன்னெடுக்கப்படுகின்ற Tata உலகளாவிய சேவைப் நடவடிக்கைக்கு அமைவாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சியம்பலாபே, அனுராதபுரம், குருணாகல், கண்டி, புத்தளம், இரத்தினபுரி, மாத்தறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், திஸ்ஸமஹராம, மட்டக்களப்பு, இரத்மலானை மற்றும் மத்துகம உள்ளிட்ட நாட்டின் பிரதான நகரங்களை உள்ளடக்கிய 13 இடங்களில் வாடிக்கையாளர்களை எட்டும் இத்தனித்துவமான நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.



மூன்று தினங்களாக இடம்பெறவுள்ள இச்சேவையின் மூலமாக DIMO நிறுவனத்தின் Tata Motors வர்த்தகப் பாவனை வகுப்பு வாடிக்கையாளர்கள் முழுமையான வாகன நிலைமை சோதனைகள், இலவச Tata அசல் ஓயில் மாற்றங்கள், மற்றும் பல்வேறுபட்ட பெறுமதி சேர் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும். மூன்று தினங்களாக இடம்பெறவுள்ள இச்சேவையின் மூலமாக Tata அசல் உதிரிப்பாகங்களுக்கு கவர்ச்சியான தள்ளுபடிகளை DIMO வழங்கவுள்ளதுடன், சேவைப் நடவடிக்கைக்கு வருகை தரவுள்ள சாரதிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு வியப்பூட்டும் வெகுமதிகளையும் அளிக்கவுள்ளது. ‘அதிக தூரம்’ (High Mileage) வாகனத்தைச் செலுத்தியுள்ள சாரதிகளுக்கான வெகுமதிகளும் இச்சேவையில் வழங்கப்படவுள்ளன. மேலும், சேவைக்கு கொண்டு வரப்படுகின்ற அனைத்து வாகனங்களும் புகை வெளியீடு தொடர்பான சோதனைகளுக்கும் உள்ளாக்கப்படும். Tata வாகனங்களின் உரிமையாளர்கள் என்ற வகையில், வாடிக்கையாளர்களுக்கான ஒரு பெறுமதி சேர் அம்சமாக வாடிக்கையாளர்களின் இடங்களுக்கு சென்று வாகன சோதனைகளையும் DIMO முன்னெடுக்கவுள்ளது.

மேலும், மூன்று தினங்களாக இடம்பெறுகின்ற இந்த சேவை முகாமில் தனது வர்த்தகப் பாவனை வகுப்பு வாகனங்களுக்கு விசேட விலையையும் DIMO வழங்கவுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் Tata Motors இன் புதிய சில வாகனங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் பரீட்சார்த்த செலுத்தல் அனுபவங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான பல்வேறுபட்ட சாரதி பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களும் மற்றும் விசேட கண் பரிசோதனைகளும் இச்சேவை நடவடிக்கையில் உள்ளடங்கியுள்ளன. வாகனங்களின் பாதுகாப்பான இயக்கம் மற்றும் செயற்திறன் தொடர்பான வீடியோக்களும், வாடிக்கையாளர்கள் ஓய்வெடுக்கும் கூடத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.





Tata வாகனங்களின் உரிமையாளர்கள் மாற்றும் சாரதிகளின் பிள்ளைகள் DIMO ஏற்பாடு செய்துள்ள ஓவியப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர். இப்போட்டியில் பங்குபற்றுபவர்கள் Tata வாகனம் ஒன்றை வரைந்து வாகன சேவை நடவடிக்கையில் பங்குபற்றுகின்ற சமயத்தில் தாங்கள் வரைந்த ஓவியங்களை சமர்ப்பிக்க முடியும்.

இச்சேவை தொடர்பில் DIMO நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே அவர்கள் கருத்து வெளியிடுகையில், ““TATA Motors மற்றும் DIMO ஆகியன 1961 ஆம் ஆண்டு முதல் தமக்கிடையில் வலுவான பங்குடமையொன்றைப் பேணி வந்துள்ளதுடன், பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஒருங்கிணைப்புக்களை தெளிவாகக் கொண்டுள்ள Tata குழுமத்தின் நிலைபேற்றியல் கொள்கை, DIMO நிறுவனத்தின் மரபணுவுடன் எப்போதும் ஒத்திசைந்துள்ளதுடன், பிணைப்பினை மேலும் வலுப்படுத்தியுள்ளது. Tata Motors உலகளாவிய சேவை ஊக்குவிப்பானது Tata Motors இன் உலகளாவிய நிலைபேற்றியல் கொண்ட வாடிக்கையாளர் கவனிப்பு செயற்திட்டமாகும். இச்சேவைப் ஊக்குவிப்பில் பங்குபற்றி, நத்தார் மற்றும் புத்தாண்டு பருவகாலத்தில் வாகனங்களின் சோதனை மற்றும் திருத்த வேலைகளை மேற்கொள்ள முன்வருமாறு பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். மேலும், உலகளாவிய சேவைப் ஊக்குவிப்பின் மூலமாக நாம் வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ள எமது நன்மைகள் மற்றும் எமது வசதிகளை எமது பங்காளர்கள் அனுபவிப்பதற்கு இது பொருத்தமான ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “DIMO நிறுவனம் தனது உற்பத்தி வரிசைகள் மற்றும் பல்வேறுபட்ட ஊக்குவிப்புகள் மூலமாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரினதும் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு எப்போதும் தனது ஆதரவை வழங்கி வந்துள்ளது. பொறுப்புணர்வுமிக்க ஒரு நிறுவனம் என்ற வகையில், நாட்டின் பொருளாதாரத்தை முன்கொண்டு செல்வதில் சமூகப் பொறுப்புணர்வின் மீது கொண்டுள்ள அர்ப்பணிப்பிற்கு அது பெயர் பெற்றுள்ளதுடன், மூன்று தினங்களாக இடம்பெறும் இந்த உலகளாவிய சேவை ஊக்குவிப்பை ஏற்பாடு செய்வது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது,” என்று குறிப்பிட்டார்.

Tata Motors நிறுவனத்தின் வர்த்தகப் பாவனை வாகனங்களுக்கான சர்வதேச வர்த்தகத்தின் தலைமை அதிகாரியான ருத்ராரப் மைத்ரா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட உலகளாவிய சேவை முகாமானது Tata Motors இனைப் பொறுத்தவரையில் மகத்தான வெற்றியளித்துள்ள ஒரு நடவடிக்கையாகும். இதற்கு முதல் இடம்பெற்ற இரு சேவை நிகழ்வுகளின் போது பரிமாணம் மற்றும் வாடிக்கையாளர்களை எட்டுதல் ஆகியவற்றில் நாம் புதிய தரஒப்பீட்டு நியமங்களை ஏற்படுத்தியுள்ளோம். இந்த முகாமானது எமது வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு உரிய சேவைகளை வழங்குவதற்கு எமக்கு இடமளித்துள்ளது மட்டுமன்றி, எம்முடன் தொடர்புபட்ட முக்கிய தரப்பாக அமைந்துள்ள வாடிக்கையாளர்களின் கருத்துக்களையும் செவிமடுக்கும் வாய்ப்பினை எமக்கு வழங்கியுள்ளதுடன், அவர்கள் எம்முடன் பேணி வருகின்ற உறவுமுறைக்கு எமது நன்றிகளைக் காண்பிக்கவும் இடமளித்துள்ளது. மூன்றாவது தடவையாக இம்முறை 2018 ஆம் ஆண்டில் இந்த முகாமை ஏற்பாடு செய்வதை அறிவிப்பதில் நாம் மிக்க மகிழ்ச்சியளித்துள்ளதுடன், வாடிக்கையாளர்களை செவிமடுத்து எமது வர்த்தகநாமத்தை மேலும் வலுப்படுத்தும் ஈடுபாட்டுடன் உள்ளதுடன், வாடிக்கையாளர்களின் வர்த்தக முயற்சிகளுக்கு பெறுமதியைச் சேர்ப்பிக்கும் உற்பத்திகளையும், சேவைகளையும் வழங்க இடமளித்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.

இலங்கையில் முதற் தர வர்த்தகப் பாவனை வாகனங்களுள் ஒன்றாக Tata Motors திகழ்வதுடன், இலங்கை மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதற்கு மிகவும் விரிவான வர்த்தகப் பாவனை வாகன வரிசையைக் கொண்டுள்ளது. அதன் விசாலமான சர்வதேச அனுபவத்துடன், பல்வேறுபட்ட சந்தைகளில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்களை அது ஆழமாக விளங்கிக் கொள்வதுடன், உலகளாவில் எப்போதும் மாற்றம் கண்டு வருகின்ற வாகன நியமங்கள் மற்றும் வர்த்தகப் பாவனை வாகனப் போக்குகளை நிறைவேற்றி வருகின்றது. தனது உற்பத்திகள், விற்பனை மற்றும் சேவை வலையமைப்பு மீது Tata Motors தொடர்ந்தும் முதலீடு செய்து வருவதுடன், வாடிக்கையாளர்களின் தேவைப்பாடுகளை எதிர்பார்த்து வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டுள்ள அணுகுமுறையை தீவிரமாக பின்பற்றி வருகின்றது.