Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

இந்தோனேசியாவின் பப்புவாவில் 24 தொழிலாளர் சுட்டுக் கொலைஇந்தோனேசியாவின் கிழக்கு பப்புவா மாகாணத்தில் துப்பாக்கிதாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 24 கட்டட தொழிலாளர்கள் பலியாகினர்.
Read more »

சவூதி முடிக்குரிய இளவரசருக்கு எதிராக செனட்டர்கள் கருத்து
பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலையில் சவூதி முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் கூறி உள்ளார்.

குடியரசு கட்சியைச்
Read more »

அமெரிக்காவுடனான உடன்பாட்டை அமுல்படுத்துவதற்கு சீனா உறுதி
அமெரிக்காவுடன் எட்டப்பட்ட வர்த்தக உடன்பாடுகளை கூடிய விரைவில் அமுல்படுத்த முடியும் என சீன அதிகாரிகள் உறுதி அளித்துள்ளர். எனினும் அதனை அமுல்படுத்துவது எவ்வாறு என்பது பற்றி எந்த விபரமும் வெளியிடப்படவில்லை.
Read more »

ஈரானில் தற்கொலை தாக்குதல்: மூவர் பலி; 24 பேருக்கு காயம்
ஈரானின் தென்கிழக்கு துறைமுக நகரான சபஹாரில் பொலிஸ் தலைமையக கட்டிடத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 24 பேர்
Read more »

அமெரிக்க இராணுவ விமானங்கள் விபத்து: ஆறு பேரை காணவில்லை

தெற்கு ஜப்பானில் இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் மாயமாகி உள்ளனர். ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். மீட்புப் பணியில் ஜப்பான் கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க மற்றும் ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமான பயற்சிக்காக 2 பேருடன் சென்ற எப் –18 பைட்டர், 5 பேருடன் சென்ற கேசி–130 டேங்கர் ஆகிய இரண்டு விமானங்களும், தெற்கு ஜப்பான் கடற்கரையில் உள்ள எண்ணைய் நிரப்பும் நிலையத்துக்கு சென்று எண்ணைய் நிரப்பிக் கொண்டு புறப்பட்டபோது ஜப்பான் கடற்கரையின் மியோட்டோவில் இருந்து சுமார் 200 மைல் தொலைவில் விபத்துக்குள்ளானது.

இதில், ஒரு விமானி மட்டும் மீட்கப்பட்டுள்ளார். ஏனைய 6 பேரின் நிலைமை குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. அவர்களை மீட்கும் பணியில், ஜப்பான் கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஜப்பான் பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவத்துள்ளதுடன், விபத்துக்கான சூழல் மற்றும் காரணம் பற்றி விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
Read more »

ஐ.நாவின் மத்தியஸ்தத்தில் யெமன் அமைதிப் பேச்சு சுவீடனில் ஆரம்பம்
யெமனில் நான்கு ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் ஐ.நா மத்தியஸ்தத்திலான அமைதிப் பேச்சுவார்த்தை சுவீடனில் நேற்று ஆரம்பமானது.

ஸ்டொக்ஹோமுக்கு வெளியில் உள்ள ஜொஹனஸ்பேர்க் கோட்டையில் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மற்றும் யெமன் அரசு பிரதிநிதிகளுடன் தீர்வு ஒன்றை எட்டுவதற்காக ஐ.நா குழு முயற்சிக்கவுள்ளது.

யெமன் யுத்தம் அண்மைய ஆண்டுகளில் உலகின் மிக மோசமான மனிதாபிமாக நெருக்கடியை ஏற்படுத்திய யுத்தமாக மாறியுள்ளது. இந்த மோதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதோடு மில்லியன் கணக்கான மக்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்நிலையில் 2016 ஆம் ஆண்டுக்கு பின்னரே இரு தரப்புக்கும் இடையில் முதல் முறையாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கடைசியாக இடம்பெற்ற அமைதி முயற்சி ஜெனிவாவுக்கு ஹூத்திக்கள் வருகைதர தவறியதால் கடந்த செப்டெம்பரில் முறிந்தது.

தற்போதைய பேச்சு திருப்பத்தை ஏற்படுத்தும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. யெமன் எதிர்பார்க்கும் எதிர்கால அரசியல் தீர்வு குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் அவதானம் செலுத்தப்படுவதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

சவூதி அரேபியா தலைமையிலான இராணுவ கூட்டணி ஆதரவளிக்கும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற யெமன் அரச பிரதிநிதிகள் கடந்த புதன்கிழமை சுவீடனை வந்தடைந்தனர். இதற்கு ஒருநாள் முன்னதாக யெமனுக்கான ஐ.நா விசேட தூதுவர் மார்டின் கிரிப்பிட் மற்றும் ஈரான் ஆதரவு ஹூத்திக்களின் பிரதிநிதிகள் ஸ்டொக்ஹோமை அடைந்தனர்.

இது அமைதிக்கான உண்மையான சந்தர்ப்பம் என்று அரசு பிரதிநிதி அப்துல்லாஹ் அல் அலிமி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். மறுபுறம் பேச்சுவார்த்தையின் வெற்றிக்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று ஹூத்தி தூதுக்குழுவின் தலைவர் முஹமது அப்தல்சலாம் உறுதி அளித்துள்ளார். எனினும் தமது போராளிகள் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

இந்த அமைதி முயற்சியின் முன்னெற்றமாக, காயமடைந்த 50 ஹூத்திக்களை சிகிச்சைக்கு ஓமானுக்கு அழைத்துச் செல்ல கிரிப்பிட்டினால் முடிந்தது.

இது சுவீடன் பேச்சுவார்த்தையில் நம்பிக்கையை அதிகரித்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஷியா ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மேற்கு யெமனின் கணிசமான பகுதியை கைப்பற்றியதை அடுத்து நாட்டு ஜனாதிபதி அப்துத்ரப்பு மன்சூர் ஹதி வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிலையில் 2015 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இந்த யுத்தம் ஆரம்பமானது.

ஹுத்திக்களின் பின்னால் ஈரான் இருப்பது குறித்து குற்றம் சுமத்திய ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சவூதி அரேபியா மற்றும் ஏழு அரபு நாடுகள் யெமன் அரசை மீட்கும் முயற்சியில் தலையிட்டதை அடுத்து நிலைமை மோசமடைந்தது.

மோதல் காரணமாக குறைந்து 6,600 பொதுமக்கள் கொல்லப்பட்டு 12,560 பேர் காயமடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் தடுக்க முடியுமான போசாக்கின்மை, நோய் மற்றும் மோசமான சுகாதாரம் காரணமாக மரணமடைந்தனர்.
Read more »

அம்மு முதல் அம்மா வரை...
ஜெயலலிதாவின் இரண்டாம் நினைவுநாள் நேற்றாகும். அவர் மரணமடையும் போது 68 வயது. (1948-_2016)

'அம்மா' என்று அ.தி.மு.க தொண்டர்களால் அழைக்கப்படும் ஜெயலலிதா, 1948ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 24ம் திகதி மாண்டியா மாவட்டத்தில் உள்ள மெலுகோடேவில் பிறந்தார். அப்போது அந்த பகுதி மைசூர் மாகாணத்தில் இருந்தது.

அவருடைய பாட்டியின் பெயரான 'கோமலவல்லி' என்ற பெயர் முதலில் சூட்டப்பட்டது. அவருடைய ஒரு வயதில் அவருக்கு ஜெயலலிதா என்ற பெயரும் சூட்டப்பட்டது. மைசூரில் ஜெயலலிதா குடும்பத்தினர் இரண்டு வீடுகளில் தங்கி இருந்தனர். ஒரு வீட்டின் பெயர் 'ஜெயவிலாஸ்' மற்றொரு வீட்டின் பெயர் 'லலிதா விலாஸ்'. இதனை சேர்த்துதான் ஜெயலலிதா என்று பெயர் சூட்டினர்.

ஜெயலலிதா புனித வளனார் பாடசாலையில் படித்தார். பத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களை பெற்று மாநில அளவில் இடம்பிடித்தார்.அவர் சரளமாக தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளைப் பேசுவார்.

நான்கு வயதில் ஜெயலலிதா கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்தார். மே மாதம் 1960ஆம் ஆண்டு, மைலாப்பூர் ரசிக ரஞ்சினி சபாவில் அவரது நடன அரங்கேற்றம் நடைபெற்றது. இந்த அரங்கேற்றத்தில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவாஜி கணேசன் பங்கேற்றார். ஜெயலலிதாவின் நடனத்தைப் பார்த்து வியந்த சிவாஜி, ஜெயலலிதாவுக்கு திரைப்படத்துறையில் நல்ல எதிர்காலம் இருப்பதாக ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவிடம் கூறினார். ஆனால், அப்போது அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

நடனம் மட்டுமல்ல இசையிலும் தேர்ச்சி பெற்றவர் ஜெயலலிதா. சாஸ்திரிய சங்கீதம், மேற்கத்திய இசை தெரியும். பியானோ வாசிக்கவும் பயின்றிருக்கிறார்.

தொடக்கத்தில் ஜெயலலிதாவுக்கு சினிமாவில் விருப்பம் இல்லாமல் இருந்தாலும், திரைப்படத்துறை அவரை விடுவதாக இல்லை. ஆம், ஒரு முறை சந்தியா தன்னுடன் ஜெயலலிதாவை திரைப்படத் தளத்துக்கு அழைத்துச் சென்றபோது இறைவி பார்வதியின் சிறு வயது வேடத்தில் நடிக்க நேரிட்டது.

ஜெயலலிதா தன்னுடைய 15 வயதில் கன்னடப் படமான 'சின்னட கொம்பே' திரைப்படத்தில் அறிமுகமானார். அவருக்கு வழக்கறிஞர் ஆக வேண்டும், கல்லூரி பேராசிரியர் ஆக வேண்டும் என பல சமயங்களில் பல கனவுகள் இருந்திருக்கின்றன.

ஜெயலலிதா பிரெஞ்சுப் பெண்ணாக வேடமேற்று நடித்த ஓர் ஆங்கில நாடகத்தில் அவருக்கு வில்லனாக நடித்தவர் சோ.அவர் 1965-_ - 1980 இடையேயான காலகட்டத்தில் தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தார்.

இந்த காலகட்டத்தில்தான் அவர் நூற்றுக்கும் மேற்பட்ட திடைப்படங்களில் நடித்தார். அதில் பெரும்பாலான படங்கள் நூறு நாட்களுக்கும் மேலாக ஓடின. தமிழக அரசின் கலைமாமணி விருதினை 1972ஆம் ஆண்டு பெற்றார். அவர் தன்னுடைய முதல் திரைப்படத்திற்கு சம்பளமாக பெற்ற தொகை ரூபாய் மூவாயிரம்.

அரசியலில் தனக்கு சிறு வயது முதலே ஆர்வம் இருந்ததாக பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.ஜெயலலிதா அசாத்திய தைரியம் கொண்டவர் என்பதற்கு உதாராணம், திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய காலத்தில் அவர் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியொன்றில் "என் பூர்வீகம் தமிழகம். நான் தமிழச்சி" என்றார். இந்தப் பேட்டி சில தீவிர கன்னட அமைப்புகளை கோபமடைய செய்தது. ஜெயலலிதா கர்நாடகாவுக்கு படப்பிடிப்புக்கு வரும்போது நூற்றுக்கணக்கானோர் அவரை முற்றுகை இட்டு அந்தப் பேட்டிக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார்கள். ஆனால், ஜெயலலிதா மறுத்து விட்டார். "நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? நான் தமிழச்சிதான்" என்று கூறினார்.

அரசியலில் உச்சம் தொட்டப்பின் அவரை 'அம்மா' என்று அனைவரும் அழைத்தாலும், இறுதிவரை அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை 'அம்மு' என்றே அழைத்தனர்.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் 1982ம் ஆண்டு இணைந்தார் ஜெயலலிதா.அ.தி.மு.கவின் கொள்கை பரப்புச் செயலாளராக 1983ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

உள்ளூர் அரசியல் மட்டுமல்ல, உலக அரசியல் நி​ைலவரங்களையும் தொடக்கம் முதலே கூர்ந்து கவனித்தவர் ஜெயலலிதா. "ஜெயலலிதாவிடம் அயர்லாந்து தேர்தல் பற்றியும் உரையாடலாம். மாசேதுங் பற்றியும் விவாதிக்கலாம்" எனறார், 1970-களில் ஜெயலலிதாவை அதிகமுறை பேட்டி கண்ட திரைஞானி.

ராஜ்ய சபா உறுப்பினராக 1984இல் தேர்வானார் ஜெயலலிதா.ராஜ்ய சபாவில் அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 185. இதே இருக்கைதான் சி.என். அண்ணாதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த 1963 காலகட்டத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்டது.

எங்கு இருந்தாலும் தன்னைச் சுற்றி இருப்பவர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியவர் ஜெயலலிதா. ராஜ்ய சபாவில் அவருடைய கன்னிப் பேச்சு அனைவரையும் ஈர்த்தது. சக உறுப்பினரான குஷ்வந்த் சிங், 'அறிவுடைய அழகான பெண்' என்று ஜெயலலிதாவை புகழ்ந்தார். பிரதமராக இருந்த இந்திரா காந்தியும் ஜெயலலிதாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டார்.

எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தில் அவமானப்படுத்தப்பட்டார் ஜெயலலிதா. அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. ஓர் அணிக்கு ஜெயலலிதா தலைவராகவும், இன்னொரு அணிக்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி தலைவராகவும் செயல்பட்டனர்.

ஜானகி சிறிது காலம் தமிழக முதல்வராக இருந்தார். ஆனால், மூன்று வாரங்களில் ஆட்சி கலைக்கப்பட்டது. இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலில் ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டை புறா சின்னத்திலும் போட்டியிட்டனர்.

ஜெயலலிதா அணி 27 இடங்களைக் கைப்பற்றியது. ஜானகி அணி 2 இடங்களை மட்டுமே பிடித்து படுதோல்வி அடைந்தது. பின், ஜானகி அணி ஜெயலலிதா அணியுடன் இணைந்தது. இரட்டை இலை சின்னமும் மீண்டும் கிடைத்தது.

1991_ -1996 ஆட்சிக் காலத்தின் போது ஜெயலலிதா ஈட்டிய சொத்துகளுக்காக பின்னர் சிறைத் தண்டனை அனுபவித்தார். இந்த வழக்கில்தான் இப்போது சசிகலா சிறையில் இருக்கிறார்.

ஜெயலலிதாவின் பெயர் 'கின்னஸ் புக் ஒஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில்' இடம்பிடித்திருக்கிறது. ஆம், 1995-ஆம் ஆண்டு தன்னுடைய வளர்ப்பு மகனுக்கு மிக பிரம்மாண்டமாக 1.5 இலட்சம் பேரை அழைத்து திருமணம் நடத்தினார். இதுதான் கின்னஸில் இடம்பிடித்தது.

2016- ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் அ.தி.மு.கவே மீண்டும் வென்றது. ஜெயலலிதா முதல்வர் ஆனார். அவர் நன்கு எழுதக் கூடியவரும் கூட. தாய் இதழில் தொடர் எழுதி இருக்கிறார்.

எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை தொடங்கியபோது அதற்கு அதிக நிதி அளித்தவர்களில் ஜெயலலிதாவும் ஒருவர். நிதி அளித்ததோடு மட்டுமல்லாமல் சத்துணவு கூடங்களை அவ்வப்போது பார்வையிட்டார்.

"இந்த உலகத்தின், மிகவும் கடினமான வேலை எனக்குப் பணிக்கப்பட்டாலும், நான் அதற்கு என்னைத் தயார் செய்து கொள்வேன்." - இது ஜெயலலிதா அடிக்கடி தம் நண்பர்களிடம் சொல்லும் வரிகள்.

சிறு வயது முதலே அன்பிற்காக மிகவும் ஏங்கி இருக்கிறார் ஜெயலலிதா. ஒரு பேட்டியில் ஜெயலலிதா, "நான் இதுவரை நிபந்தனையற்ற அன்பை உணர்ந்ததே இல்லை. கதைகளில், இலக்கியங்களில், திரைப்படங்களில் வேண்டுமானால் அத்தகைய நிபந்தனையற்ற அன்பு இருக்கலாம். ஆனால், அத்தகைய அன்பு நிஜவாழ்க்கையில் இருப்பதாக நான் கருதவில்லை" என்று கூறியுள்ளார்.

அதிமுகவின் நிறுவனத் தலைவரான எம்ஜிஆர் 'புரட்சித் தலைவர்' என்றே அவரது கட்சியின் தொண்டர்களால் அழைக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து கட்சியை வழிநடத்தியவரும் , கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை 'புரட்சித் தலைவி' என்ற அழைக்க ஆரம்பித்தனர்.

'தங்க தாரகை' , 'ஜான்சி ராணி' - இவையெல்லாம் அதிமுகவினரும், அவரின் நலன் விரும்பிகளும் ஜெயலலிதாவுக்கு அளித்த பட்டங்களாகும்.

பின் வந்த ஆண்டுகளில், ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஜெயலலிதாவுக்கு அவரின் செயல்பாடுகளால், அவரது கட்சியினர் மற்றும் பிற கட்சியினர், சமூக இயக்கத்தினர் 'சமூக நீதி காத்த வீராங்கனை' , 'காவிரி தந்த கலைச்செல்வி' என்று பல அடைமொழிகளை வழங்கினர்.

ஆனால், இவற்றை எல்லாம் விட அவருக்கு நிலைத்து நின்ற அடைமொழி அல்லது பெயர் 'அம்மா' என்பது மட்டுமே. ஆரம்பத்தில் அதிமுகவினரால் மட்டும் 'அம்மா' என்றழைக்கப்பட்ட ஜெயலலிதா, பிற்காலங்களில் கூட்டணிக் கட்சிகள், மாற்றுக் கட்சியினர், திரையுலகினர் என்று பலராலும் அவ்வாறே அழைக்கப்பட்டார்.

'அம்மா' என்பது ஜெயலலிதாவின் சொந்தப் பெயர் போல பலரின் மனதில் தங்கிவிட்டது.

பல்கலைக் கழகங்களின் வேந்தர் பதவியில் இனி ஆளுநருக்குப் பதிலாக முதல்வரே இருப்பார் என்பதற்கான சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர முயற்சி செய்தார். அந்த அளவுக்கு ஆளுநர் விவகாரத்தில் போர்க்குணத்துடன் செயல்பட்டவர் ஜெயலலிதா. ஆனால் அவருடைய வழியில் ஆட்சி நடத்துவதாகச் சொல்லும் அ.தி.மு.க அரசு ஆளுநருக்குத் துளியளவு எதிர்ப்பையும் காட்டவில்லை.
Read more »

ஒரு நல்ல மனிதர்; சிறந்த தந்தை
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான காலம் சென்ற ​ேஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ்ஷின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. அரசு மரியாதையுடன் வாஷிங்டனில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி ​ேஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ்ஷின் இறுதிச் சடங்கில், அவரது மகனும் முன்னாள் ஜனாதிபதியுமான ​ேஜார்ஜ் புஷ் அஞ்சலி செலுத்தினார்

புதன்கிழமையன்று நடைபெற்ற இறுதிச் சடங்கில் உரையாற்றிய புஷ் ஜூனியர், தனது தந்தையை "ஒரு நல்ல மனிதர்,சிறந்த தந்தை" என்று விபரித்தார்.

இந்த நிகழ்வில் தற்போதைய ஜனாதிபதியும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளும் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவின் 41வது ஜனாதிபதியாக 1989 முதல் 1993 வரை பணியாற்றிய ​​ேஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ், தனது 94வது வயதில் கடந்த வெள்ளியன்று காலமானார். அவரது சொந்த மாகாணமான டெக்ஸாசில், அவரது மனைவி பார்பராவிற்கு அருகில் அவரது உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதி மரியாதை சடங்கில் உரையாற்றிய மகன் ​ேஜார்ஜ் டபுள்யூ புஷ், "பொது சேவை என்பது சிறந்தது மற்றும் அவசியமானது" என தனது தந்தை தனக்கு சொல்லிக் கொடுத்ததாக குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், "தோல்வி நம் வாழ்க்கையின் ஒரு பகுதி என்று என் தந்தை ஒப்புக் கொண்டார். ஆனால், தோல்வியால் எதையும் வரையறுக்கக் கூடாது என எங்களுக்கு கற்றுக் கொடுத்தார். பின்னடைவுகள் நம்மை எப்படி பலமாக்கும் என்பதை அவர் எங்களுக்கு உணர்த்தினார்" என்று குறிப்பிட்டார்.

பேசும்போது உணர்ச்சிவசப்பட்ட அவர், "உங்களை எவ்வளவு நேசிக்கிறோம், புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதை எங்களின் கண்ணீர் வழியாக உணரலாம். என் தந்தை ஒரு தலைசிறந்த மனிதர். மகனுக்கும் மகளுக்கும் சிறந்த தந்தையாக விளங்கினார்" என்றார்.

தேசிய கதீட்ரலில் நடந்த மேற்படி இறுதிச் சடங்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதிகள் பராக் ஒபாமா, பில் கிளின்டன், ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வேல்ஸ் இளவரசர், ஜெர்மன் சேன்சலர் ஏங்கலா மெர்கல், ஜோர்டான் அரசர் அப்துல்லா_ II உள்ளிட்ட உலகத் தலைவர்களும் முன்னாள் ஜனாதிபதி ​ேஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

புதன்கிழமையன்று நாடு முழுவதும் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு - பல அரசு நிறுவனங்களும், அமெரிக்க பங்கு பரிவர்த்தனைகளும் மூடப்பட்டன.

பொதுமக்களின் அஞ்சலிக்காக அன்னாரின் பூதவுடல் நேற்று வியாழக்கிழமை காலை வரை புனித மார்ட்டின் எபிஸ்கோபல் தேவாலயத்தில் வைக்கப்பட்டது. இந்நிலையில், அவரது செய்தித் தொடர்பாளராக பணியாற்றிய ஜிம் மெக் க்ராத் கூறுகையில், தன் இறுதிச்சடங்கிற்கு யாரேனும் வருவார்களா என ​ேஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் ஒருமுறை வியந்து கேட்டதாகக் குறிப்பிட்டார்.

இதேவேளை சீனியர் புஷ்ஷின் மரணத்தால் கலங்கி தவிக்கும் வளர்ப்பு நாய் 'சுல்லி'யை பலரும் பரிதாபத்துடன் பார்க்கின்றனர்.

​ேஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ்ஷின் மறைவை தாங்கிக் கொள்ள முடியாத சோகத்தில் தவிக்கும் அவரது செல்ல நாய் சுல்லி, சோகத்துடன் காணப்படுகிறது.

முன்னதாக, புஷ்ஷின் மரணத்தை தாங்க முடியாமல் சோகத்தில் படுத்திருக்கும் அவரது வளர்ப்பு நாயின் நெகிழ்ச்சியான புகைப்படத்தை, 'பணி முடிந்தது'என்ற பதிவுடன் புஷ்ஷின் செய்தித் தொடர்பாளர் ஜிம் மெக் க்ராத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

2009ஆம் ஆண்டு பயணிகள் விமானம் ஒன்றை ஹுண்ட்சன் ஆற்றில் இறக்கி, விமானத்தில் இருந்த 155 பயணிகள் மற்றும் பணியாளர்களை காப்பாற்றிய விமானி செல்ஸி சுல்லி சுலென்பெர்கர் நினைவாக சீனியர் புஷ்ஷின் ​ெலாப்ரெடர் நாய்க்கு 'சுல்லி' என்று பெயரிடப்பட்டது.

உயர்தர பயிற்சியளிக்கப்பட்ட 'சுல்லி' பல்வேறு கட்டளைகளை புரிந்து கொண்டு செயல்படக் கூடியது. சீனியர் புஷ்ஷுக்கு பொருட்களை கொண்டு வந்து கொடுப்பது, கதவை திறந்து விடுவது, தொலைபேசி ஒலித்தால் எடுத்துக் கொடுப்பது என பல்வேறு உதவிகளை செய்து வந்தது.

தற்போது ​ேஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் காலமாகிவிட்ட நிலையில், காயமடைந்த சிப்பாய்களுக்கு சிகிச்சையளிக்கும் போது உதவி செய்யும் பணியில் 'சுல்லி' ஈடுபடுத்தப்படும்.

தனக்கென பிரத்தியேக இன்ஸ்ட்ராக்ராம் கணக்கை வைத்துள்ள 'சுல்லி', சீனியர் புஷ் கடந்த மாதம் நடைபெற்ற அமெரிக்காவின் இடைக்கால தேர்தலில் 'வாக்களிப்பதற்கு உதவி' செய்தது.

அமெரிக்க ஜனாதிபதிகள் அனைவருக்கும் நாய்கள் பிடித்தமானதாக இருந்ததில்லை என்பதும், ​ேஜான் எஃப்.கென்னடிக்கு நாய்கள் என்றாலே பிடிக்காது என்பதும், தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் ஒரு நாய் கூட இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்த சீனியர் புஷ், இரத்தத்தில் தொற்று ஏற்பட்டதால் ஏப்ரம் மாதம் முதல் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
Read more »

1978 அரசியலமைப்பில் இன்னுமே திருத்தம் செய்யப்படாத விடயம்

பிரித்தானியரிடமிருந்து 1948 இல் சுதந்திரம் கிடைத்ததையடுத்து இலங்கையில் மூன்று அரசியலமைப்புகள் இருந்துள்ளன. அவை சோல்பரி அரசியலமைப்பு (1946), முதலாவது குடியரசு அரசியலமைப்பு(1972),இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு (1978).

இந்த மூன்று அரசியலமைப்புகளும் ஒன்றுக்கொன்று வேறுபட்டன.

சோல்பரி அரசியலமைப்பு 'வெஸ்ட் மின்ஸ்டர்' முறையிலான அரசாங்கத்தைப் பின்பற்றியது. அதன்படி பிரிட்டனின் ஆறாவது ஜோர்ஜ் மன்னர் நாட்டின் தலைவராவார். இந்த அரசியலமைப்பை வரைந்தவர் சேர் ஐவர் ஜென்னிங்ஸ்.

சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காக அவர் 29(2) என்ற பிரிவை அரசியலமைப்பில் சேர்ந்திருந்தார். இது அயர்லாந்தின் அரசியலமைப்பில் இருந்து எடுக்கப்பட்டு சோல்பரி அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.

1972 இல் உருவாக்கப்பட்ட முதலாவது குடியரசு அரசியலமைப்பு இலங்கையை முடியாட்சியில் இருந்து குடியாட்சிக்கு மாற்றியது. பிரிட்டிஷ் மகாராணி தொடர்ந்து நாட்டின் தலைமையாக இந்த அரசியலமைப்பில் இருக்கவில்லை. அதற்குப் பதிலாக இந்த அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் என்ற ஒரு ஜனாதிபதி நாட்டின் தலைவராக இருந்தார்.

அடிப்படை உரிமைகள் மற்றும் அரச கொள்கையின் பொதுக் கட்டளை தத்துவங்களும் இதில் சேர்க்கப்பட்டன. பௌத்தத்துக்கு முன்னணி இடம் இந்த அரசியலமைப்பில் வடிக்கப்பட்டது.

இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு 1978 இல் கொண்டுவரப்பட்டது. இது இலங்கையை நிறைவேற்று அதிகாரத்துடன் கூடிய ஜனாதிபதியின் கீழ் கொண்டு வந்தது. இது வெஸ்ட் மின்ஸ்டர் முறையை விட பெரிதும் மாறுபட்டது.

‘ஜனாதிபதியின் கீழான அரசாங்க முறை’ என்று இது அழைக்கப்பட்டது. எனினும் இது தொடர்பாக செய்யப்பட்ட 19வது திருத்த சட்டத்தின்படி அரசியலமைப்பு பேரவையின் அறிவுரை மற்றும் சிபாரிசின்படி ஜனாதிபதி செயற்பட வேண்டும் என்ற வகையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் இந்த அரசியலமைப்பின்படி குறைக்கப்பட்டன.

இதனால் சர்வஜன வாக்கெடுப்பு இன்றி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 17 வது திருத்தச் சட்டம் செயற்பட வழிவகுக்கப்பட்டது.

19வது திருத்தச் சட்டம் ஜனாதிபதி முறையை பாராளுமன்ற முறையிலான அரசாங்கமாக மாற்றவில்லை. எனினும் 18வது திருத்தச் சட்டத்தில் இருந்த சில முன்னேற்பாடுகள் நீக்கப்பட்டு தகவல் உரிமை அடிப்படை உரிமையாக சேர்க்கப்பட்டது. இது 17ம் திருத்தச் சட்டத்தின் சில முன்னேற்பாடுகளை விஸ்தரித்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தின்படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டபூர்வமானதா என்பதைப் பார்ப்போம். இந்த விடயத்தை ஆராயுமுன்னர் அரசியலமைப்பு சட்டம் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

அரசியலமைப்பு சட்டம் என்பது சட்டம் மற்றும் அரசியலின் கலவையாகும்.

1978 அரசியலமைப்பில் ஒரு சிக்கல் நிலை இருந்ததை அமரர் என்.எம்.பெரேரா சுட்டிக்காட்டியிருந்தார். ஜனாதிபதியும் பிரதமரும் இருவேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பின் ஒரு பாரதூரமான அல்லது இக்கட்டான நிலை ஏற்படலாம் என்பதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். எனினும் 19வது திருத்தச் சட்டத்திலும் அது திருத்தப்படவில்லை. எனினும் 19 வது திருத்தச் சட்டத்தின் வெஸ்ட்மின்ட்டர் முறையிலான அரசாங்கத்தின் சில அம்சங்கள் இடம்பெற்றிருப்பதை மறுப்பதற்கில்லை.
Read more »

"ஜனாதிபதிக்கு பிடிக்குமா, இல்லையா என்பது முக்கியமில்லை"


ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதனைத் தவிர வேறு மாற்று வழிகள் ஜனாதிபதிக்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.


அலரி மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,


அரசியல் அமைப்பின் பிரகாரம் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதனைத் தவிர வேறு மாற்று வழிகள் கிடையாது.


ஜனாதிபதிக்கு பிடிக்குமா இல்லையா என்பது இங்கு முக்கியமில்லை, அரசியல் அமைப்பிற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.


நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம் யாருக்கு உண்டோ அவரே பிரதமராக நியமிக்கப்பட வேண்டும். தனிப்பட்ட விரோதங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் பிரதமர் நியமிக்கப்பட முடியாது.


மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய நாடாளுமன்றம் எடுத்த தீர்மானங்கள் சரியானது என்பது புலனாகின்றது.


நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இன்று நாட்டில் பிரதமர் எவரும் கிடையாது. தற்பொழுது நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் ஒரே சமநிலையானவர்கள் அமைச்சர்களோ, பிரதமரோ கிடையாது.


இதேவேளை, நாம் இந்த அரசாங்கத்தை ஆறு தடவைகள் நாடாளுமன்றில் தோற்கடித்துள்ளோம், மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியக் கடதாசி மூலமும் ரணிலுக்கான ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளோம் என ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
Read more »

சர்வதேச கச்சா எண்ணெய், அமைப்பிலிருந்து விலகுகிறது கத்தார்


கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் சர்வதேச அமைப்பான ஒபெக்கின் கூட்டம் அடுத்த சில நாட்களில் வியன்னாவில் நடைபெறவுள்ள நிலையில் அந்த அமைப்பிலிருந்து வெளியேறவுள்ளதாக கத்தார் அறிவித்துள்ளது.


கடந்த 1961ஆம் ஆண்டிலிருந்து ஒபெக்கில் அங்கம் வகித்து வரும் வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார், தனது இயற்கை எரிவாயு உற்பத்தியில் கவனம் செலுத்தும் வகையில் வரும் ஜனவரி மாதம் அந்த அமைப்பிலிருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளது.


திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் உலகளவில் முன்னணியில் இருக்கும் கத்தார், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்வதாக கூறி அருகிலுள்ள சில அரபு நாடுகள் கத்தாரை ஒதுக்க ஆரம்பித்தன.


இந்த வாரம் நடைபெறவுள்ள கூட்டத்தில் எண்ணெய் ஏற்றுமதியை குறைப்பது குறித்த செய்தியை ஒபெக் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கத்தாரில் இந்த திடீர் நிலைப்பாடு குறித்து பேசிய அந்நாட்டின் எரிசக்தித்துறை அமைச்சர் சாட் அல்-காபி, "கச்சா எண்ணெய்யில் உள்ளதை விட எங்களுக்கு இயற்கை எரிவாயுவில் சாத்தியமான ஆற்றல் வளம் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.


அதுமட்டுமன்றி, தங்களது பிராந்தியத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைக்கும் இந்த முடிவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கத்தார் தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டிய சௌதி அரேபியா உள்ளிட்ட அருகிலுள்ள வலிமைமிக்க அரபு நாடுகள் கத்தாருடனான தொடர்பை முற்றிலும் துண்டித்தன.


உலகளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் கத்தாரின் பங்களிப்பு மிகவும் குறைவு என்பதால், அந்நாட்டின் இந்த முடிவால் சர்வதேச எண்ணெய் சந்தையில் பெரிய பாதிப்பேதும் இருக்காது.


சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலையில் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து கடும் சரிவு காணப்படுவதால், உற்பத்தி குறைப்பு குறித்த அறிவிப்பை இந்த வாரம் நடைபெறவுள்ள கூட்டத்தில் ஒபெக் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read more »

மகிந்தவுக்கும், அமைச்சரவைக்கும் நீதிமன்றம் தக்க பாடம் புகட்டியுள்ளது - சம்பந்தன்


“122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கும் அவர் தலைமையிலான அமைச்சரவைக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தக்க பாடம் புகட்டியுள்ளது.


இனியாவது அவர்கள் திருந்த வேண்டும். தங்கள் பதவிகளை அவர்கள் உடன் துறந்து ஜனநாயக ஆட்சிக்கு இடமளிக்க வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில்,


“தற்போதைய அரசு சட்டவிரோத அரசாகும். இதை நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு மூலம் நிரூபித்துள்ளது. இறுதித் தீர்ப்பும் இந்தச் சட்டவிரோத அரசுக்கு எதிராகவே அமையும்.


அரசியல் சதித் திட்டத்தால் உருவான இந்த அரசில் உள்ளவர்கள் பிரதமர் பதவி, அமைச்சுப் பதவிகளை உடன் துறக்க வேண்டும்.


நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இவர்கள் மதிப்பளிக்க வேண்டும். ஜனநாயகத்தை நிலைநாட்ட இடமளிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளா
Read more »

மகிந்த மேன்முறையீடு செய்தாலும், இடைக்கால தடையுத்தரவு வரும்வரை பிரதமராக தொடரமுடியாது

சிறிலங்கா பிரதமராகச் செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று விதித்துள்ள இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் நாளை மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளதாக, மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது தீர்ப்பளிக்கப்படும் வரையில், மகிந்த ராஜபக்ச பிரதமராகவும், ஏனைய 48 பேர் அமைச்சர்களாகவும் செயற்பட தடை விதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று மாலை உத்தரவிட்டிருந்தது.


இதனால், மகிந்த ராஜபக்சவும், ஏனைய அமைச்சர்களும் பதவியிழந்ததாக கருதப்படுகின்றன.


அமைச்சரவைகளின் செயற்பாட்டை இடைநிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை உத்தரவில் நாங்கள் உடன்படவில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.


நீதிமன்ற உத்தரவு வெளியாகிய பின்னர், அவர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதனிடையே, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டாலும், அந்த உத்தரவுக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று, சட்ட நிபுணர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
Read more »

உதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.

மகேந்திரன் மனோகரராஜ் (199315410010) என்பவர், 2009 ஆண்டு நாட்டில் இடம் பெற்ற இறுதி யுத்தத்தின் போது முள்ளந்தண்டு பாதிப்படைந்து இடுப்பிட்க்கு கீழ் இயங்காத நிலையில் தாயரின் குறுகிய கூலி வேலை வருமானத்தில்.A, பிரிவு. தேவிபுரம். முல்லைதீவு மாவட்டத்தில். அன்றாட வாழ்வில் மிகவும் சிரமப்பட்டு அத்தியாவசிய வசதிகள் எதுவும் இன்றி 9 வருடமாக சக்கர நாட்கலியில் படுக்கை புண்ணுடன் வாழ்ந்து வருகிறார். பின்வரும் காணோளி, மற்றும் தகவல்களை தங்களின் தயவனா கருத்தில் கொண்டு இந்த தமிழ் இளைஞனுக்கு அன்றட வாழ்க்கையை சிரமம் இன்றி கொண்டு செல்வதற்கு இலங்கையில் மற்றும் எம் புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகள் தங்களிடம் தயவனா உதவியை எதிர்பார்த்து இருக்கின்றார்…

தொலைப்பேசி இலக்கம் (0774020126), (0770024326)()

கணக்கு இலக்கம்

இலங்கை வங்கி முல்லைதீவு பிரிவு (80188749)

ஹட்டன் நேசனல் வங்கி (032020531569)

Read more »