Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சவூதியில் ஆண் இரகசிய விவாகரத்து முறை முடிவு





சவூதி அரேபிய பெண்கள் தமது சொந்த விவாகரத்து தொடர்பில் தெரிந்து கொள்வதற்கு புதிய ஒழுங்குமுறை ஒன்றை செயல்படுத்தியுள்ளது.

பெண்கள் தமது விவாகரத்து பற்றி உறுதி செய்துகொள்வதற்கு நீதிமன்றங்கள் தீர்ப்பு தொடர்பில் குறித்த பெண்களுக்கு குறுந்தகவல் அனுப்ப கோரப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமுலுக்கு வந்தது.





இந்த நடவடிக்கை மூலம் தமது மனைவிக்கு தெரியாமல் அவர்களை ஆண்கள் விவாகரத்துச் செய்யும் இரகசிய விவாகரத்து என்று அறியப்படும் நடைமுறை முடிவுக்கு வருவதாக பெண் வழக்கறிஞர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவு, பெண்கள் தங்களின் திருமண நிலை குறித்த முழு விவரத்தை அறிந்திருக்க உதவுவதோடு, ஜீவனாம்சத்திற்கான தங்களின் உரிமைகளை காத்துக்கொள்ளவும் உதவும். உள்நாட்டு பத்திரிகையான ஒக்காஸிற்கு பேட்டியளித்துள்ள வழக்கறிஞர் சமியா அல்-ஹிந்தி, தங்களுக்கு தெரியாமலேயே விவாகரத்து வழங்கப்பட்டுவிட்டதாகக் கூறி, பல பெண்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

0 Comments:

Post a Comment