Breaking

Thursday, February 14, 2019

சிரியா மீது வான் தாக்குதல்: முதன்முறை இஸ்ரேல் ஒப்புதல்





சிரியாவில் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, “நாங்கள் ஒவ்வொரு நாளும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம். ஈரானை ஒட்டிய சிரிய பகுதிகளில் நாங்கள் வான்வழித் தாக்குதலை நடத்தினோம். நேற்றுக் கூட வான்வழித் தாக்குதலை நடத்தினோம்” என்று தெரிவித்துள்ளார்.





முன்னதாக, இஸ்ரேல் படைகள் சிரியா மீது தாக்குதல் நடத்தியதாக சிரியப் படைகள் கடந்த திங்கட்கிழமை தெரிவித்தன.

இதற்கு முன்னரும் இஸ்ரேல் தங்கள் பகுதிகளில் வான்வழித் தாக்குதலை நடத்தியதாக சிரியா கடந்த டிசம்பர் மாதம் குற்றம் சாட்டியிருந்தது. இந் நிலையில் தற்போது முதல் முறையாக வான்வழித் தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.