Breaking

Wednesday, April 17, 2019

மஹியங்கண-பதுளை விபத்தில் 12 பேரில் 10 பேர் ஸ்தலத்தில் பலியாகினர்.

(10 பேர் பலி)
இன்று அதிகாலை 1:30 மணியளவில் மஹியங்கண-பதுளை வீதியில் வேன் ஒன்றின் மீது தனியார் பஸ் வண்டி மோதியதில் வேனில் பயணித்த 12 பேரில் 10 பேர் ஸ்தலத்தில் பலியாகினர்.

3 குழந்தைகள், 3 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் அடங்கலாக இதுவரை மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 2 பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த வேனில் பயணித்தவர்கள் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-அல்மசூறா நியூஸ்