வெலிகம பகுதி முஸ்லிம் நபரொருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி 56 லட்சம் ரூபா பணம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது! - WeligamaNews

Breaking

post above

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

வெலிகம பகுதி முஸ்லிம் நபரொருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி 56 லட்சம் ரூபா பணம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது!

இவ்வளவு தொகைப்பணம் எங்கிருந்து வந்தது எனும் கேள்விக்கு உரிய விடை கிடைக்காததால் அங்கிருந்த ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தான் ஒரு பட்டதாரி என்றும் சவூதியில் கணனி நிறுவனமொன்றில் தொழில்புரிந்து விட்டு கடந்த டிசம்பர் மாதம் தன் மனைவியுடன் இலங்கை வந்ததாகவும் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் நாளை மாத்தறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

வீடுகளில் அதிக எண்ணிக்கையில் சிம் கார்ட், மொபைல் போன்ஸ்,போன்ஸ் பெற்றரி, பணம் என்பவற்றை வைத்திருந்த பலர் கடந்த சில நாட்களாக கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது!

-அல்மசூறா பிறேக்கிங் நியூஸ்

Post Bottom Ad

Pages