Breaking

Wednesday, April 10, 2019

மின் வெட்டுக்கு பின்னால் மறைந்திருக்கும் பல உண்மைகள்! திகைக்க வைக்கும் காரணங்கள்!

இலங்கையர்களான நாம் 2-கோடி மக்களும் தற்போது அனுபவிக்கும் மின்சார தடைக்கு பின்னணியில் செயல்படுவது மின்சார மாபியாக்களின் செயல்பாடுகள்தான் என்றால் நீங்கள் நம்புவீர்களா?

ஆம் அதுதான் உண்மை.

பொருளியலாளர்களும், அரசியல் வாதிகளும் அடிக்கடி கூறுவதைப் போன்று நமது வளங்களை கணிப்பிட்டால் நாடு எப்போதோ சிங்கப்பூரைப்போலவோ/ ஜப்பானை போலவோ அபிவிருத்தியில் தன்னிறைவு அடைந்திருக்க வேண்டும்.

ஆனால் இதற்கு பெரும் தடையாக இருப்பவர்களில் முக்கியமான குழுவினர் நமது நாட்டின் பெரும்பாலான துறைகளில் ஊடுருவியுள்ள மாபியாக்கள்தான் காரணமாகும்.

நாட்டின் பல துறைகளிலும் இந்த மாபியாக்கள் உள்ளனர்.

உதாரணத்திற்கு வைத்தியர்களது தொழில் சங்கமான GMOA என்னும் வைத்திய சங்கமும் இன்று மாபியா குழு ஒன்றினால்தான் செயல்படுவதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு அடுத்தபடியான மாபியா குழுதான் இந்த மின்சார மாபியாவாகும். இதன் கிங்குகள் மின்சார சபையிலுள்ள இஞ்சினியர்களாவர். ( பொறியியலாளர்கள்)

மக்களின் வரிப்பணத்தில் இலவச கல்வியை படித்து ஆளாகி பெரிய இஞ்ஞினியர்களாக அதிக சம்பளத்தில் தொழில் புரியும் இவர்களே 2-கோடி இலங்கை மக்களை இருளில் தள்ளியுள்ளதுடன் மின் தடையினால் ஏற்படும் பொருளாதார பின்னடைவுக்கும் காரணமாக உள்ளனர்.

இந்த மின்சார மாபியா எப்படி உருவானது என இன்வெஸ்டிகேசன் செய்தபோது கிடைத்த விடயங்கள் இதோ:-

வழமையாக வருடத்தின் ஒக்டோபர்,நவம்பர், டிசம்பர் மாதங்களில் நீரேந்து பகுதிகளில் தண்ணீரின் அளவு மேலோங்கி நிறைந்திருக்கும்.

இந்த நீர் தேங்கும் அளவு அதன் குறித்த ஒரு மட்டத்திற்கு மேலே எழும்போது விஞ்ஞான ரீதியாக அதனை சற்று குறைக்க வேண்டும்.

ஆனால் இவர்கள் திருட்டுத்தனமாக நம் எல்லோரரதும் கண்களில் மண்ணை தூவிவிட்டு நாட்டுக்கும், மக்களுக்கும் கேடுகெட்ட வேலை ஒன்றை செய்கிறார்கள்.

உதாரணத்திற்கு 1-கன லீற்றர் நீரை வெளியேற்றவேண்டி உள்ளபோது 3-கன லீற்றர் அளவு நீரை வெளியேற்றிவிடுகின்றனர்.
இதை யாரும் கண்டுகொள்வதில்லை.

இதுகுறித்து யாரும் தேடுவதுமில்லை.

இவ்வாறு தேக்கி வைக்க முடிந்த நீரை வேண்டுமென்ற திட்டமிட்டு வெளியேற்றிவிடுகின்றனர்.

இப்படி செய்யும்போது தற்போது போன்ற மழை இல்லாத காலத்தில் நீர்த்தேக்கங்களில் நீர் வற்ற ஆரம்பிக்கின்றது.

இதனால் இந்த மின்னுற்பத்தி நிலையங்களை இயக்க போதுமான தண்ணீர் இல்லாது போய்விடுகிறது. அப்போதுதான் இந்த ' பவர்கட்' பிரச்சினை ஆரம்பிக்கின்றது.

உண்மையில் இவர்கள் மழைக்காலத்தில் போதிய நீரை தேக்கி வைத்திருந்தால் அடுத்த மழைக்காலம் வரைக்கும் மின் உற்பத்தி தடைப்பட வாய்ப்பில்லை.

இச்சந்தர்ப்பத்தில் மின்சாரத்தை வெளியிலிருந்து (Private) பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இல்லையில்லை ஏற்படுத்தப்படுகிறது.

இந்த இடத்தில்தான் கொமிசன் அடித்து மின்சாரத்தை வாங்கும் வியாபாரம் நடக்கிறது.

2013 ம் ஆண்டிலிருந்து இன்றுவரை இருப்பதைவிட 1-% சத வீதம் கூட நாட்டின் மின் உற்பத்தியை பெருக்க எந்வொரு முயற்சியும் இவர்களால் எடுக்கப்படவே இல்லை.

தேசிய மின்சார சபைக்காக 1மெகாவொட் மின்சாரத்தைக்கூட அதிகரிக்க இவர்கள் என்றுமே எண்ணியதே இல்லை. இதுதான் உண்மை.

ரஞ்சித் சியம்பலாபிட்டிய காலத்தில் 1மெகாவோட் உற்பத்தி செய்யக்கூடிய 50 போர்டபிள் ஜெனரேட்டர்களை செலவு செய்து இறக்குமதி செய்தார்கள்.

அதன்மூலம் 50 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

ஆனால் அவை பாவிக்கப்படமல் இருந்த காரணத்தினால் இன்று அவை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

அவை மின்சார சபை காணியில் , பூமிக்கடியில் உள்ள பிரதேசத்தில் பூமிக்கடியில் கிடந்து மரங்கள் வளர்ந்து கெட்டுப்போன நிலையில் நாசமாகிக் கிடக்கின்றன.

அந்த ஜெனரேட்டர்களை செயல்படுத்த இந்த மாபியா குழுவினர் விடவில்லை.

இந்த விசயங்கள் எல்லாமே இவர்களோடு உள்ளே இருப்பவர்கள் தரும் தகவல்கள். இவர்கள் யாரும் ஒற்றுமையாகவும் இல்லை.

எனினும் திருடுவதற்கு மட்டும் ஒற்றுமையாக சேர்ந்து கொள்கிறார்கள். கிடைக்கும் கொமிசனை பிரித்துக்கொள்ள மட்டும் ஒற்றுமைப்படுகிறார்கள்.

ஏனைய நேரங்களில் நீ யாரோ, நான் யாரோ என்ற நிலைதான்.அப்படியான ஒரு மாபியா கூட்டம் இது.

மின்சார சபை செலவுகளை குறைக்க வேண்டும் என்று எதைக் குறைத்துள்ளனர் தெரியுமா?

மின்சார சபையின் அத்தியாவசாய சேவைகளுக்கு பாவிக்கப்படும் வாகனங்களின் ஆண்டு காப்புறுதியில் Full Insurance செய்யும் செலவை குறைத்து 3ஆம் நிலை 3rd party காப்புறுதி எடுத்து செலவை குறைக்கிறார்களாம்.

இதனால் அவசரத்தில் வாகனத்தை எடுத்துச் செல்கையில் வாகனம் சேதமடைந்தால் ட்ரைவரும், அரசாங்கமும்தான் திருத்திக்கொள்ள வேண்டும்.

அதேவேளை விபத்துக்காப்புறுதி நட்டஈடு கிடைக்காமல் போகிறது.

இவ்வாறு குறைக்க கூடாதவற்றுக்கு செலவுகளை குறைக்க, மறுபுறம் திருட்டுக்கள் மின்சார சபைக்கு உள்ளே இதைவிட. பல மடங்கு நடக்கிறது.

மின்சார சபைக்குள் உள்ள சிலர் இணையத்தளமொன்றிற்கு பேசும்போது "தற்போது அறவிடப்படும் கட்டணங்களை விட குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை மக்களுக்கு நிச்சயம் வழங்க முடியும் " என்று அறுதியிட்டு கூறுகிறார்கள்.

ஆனால் " அது முடியாது. இவர்கள் (மாபியாக்கள்) விடவே மாட்டார்கள்." என்கின்றனர்.

வளம் நிறைந்த நம் தாய்நாடு வர்ச்சியடைந்த/ அபிவிருத்தியடைந்த நாடாக இன்றுவரை மாறாமல் இருப்பது ஏன் என்று இப்போது புரிகிறதா?