Breaking

Friday, April 12, 2019

*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*




காலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிபெற்று சிகிச்சை பெறுகின்றனர்.




கடந்த வாரம் ஒரு சிறுமியின் மரணத்தை அடுத்து ஊரில் பதற்ற நிலை ஆரம்பித்தது. இன்று வெள்ளிக்கிழமை அதே குடும்பத்தை சேர்ந்த 8ஆம் ஆண்டு மாணவன் ஒருவன் மரணமானதை அடுத்து பதற்ற நிலை உக்கிரமடைந்துள்ளது.




இந்த கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் தனியார் வைத்தியசாலையொன்றை கடந்த புதன்கிழமை முற்றுகையிட்ட கிராம மக்களும் பொது சுகாதார அதிகாரிகளும் அங்கு காணப்பட்ட ஏராளமான நீர் தேங்கி நிற்கும் குழிகளை கண்டுபிடித்ததுடன் இலட்சக்கணக்கான டெங்கு நுளம்புகளையும், நுளம்புக் குடம்பிகளையும் கண்டுபிடித்துள்ளனர்.




காலி/ஹிரும்புற சுலைமானியா மகா வித்தியாலயத்தின் அருகில் கட்டப்படும் இந்த தனியார் மருத்துவமனையின் பாதிப்பால் சுமார் 20க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.




பாடசாலையின் அதிபரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது முக்கிய விடயமாகும்.




சமூகத்தை காப்பதே வைத்தியசாலைகளின் நோக்கம். ஆனால் இந்த வைத்தியசாலையில் தற்போது இரண்டு உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.




கிட்டத்தட்ட மேலும் ஐந்து பேர் டெங்கு நோயினால் கராப்பிட்டிய வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமையும் கவலைக்கிடமாக காணப்படுகிறது.




இன்னும் பல உயிர்களை காவுகொள்ள முன்னர் உடனடியாக இந்த கட்டிடத்தை தடை செய்து இதன் நிர்மாணிப்பு முகாமையாளர்களை கைது செய்யும்படி ஊர்மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.




தன்னுடைய இரண்டு பிள்ளைகளை இழந்த அந்த பெற்றோருக்கு அல்லாஹ் அருள் புரிந்து பொறுமையை கொடுப்பானாக..




நோயாளிகளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மக்களை சீக்கிரம் குணப்படுத்துவானாக.