புனித ரமழானை வரவேற்போம்


"புனித ரமழான் மாதமே உன் வரவு நல்வரவாகட்டும்.

பாவமன்னிப்பு, ஷபா அத்துடைய மாதமே உன் வரவு நல்வரவாகட்டும்.

குர்ஆனுடைய மாதமே உன்வரவு நல்வரவாகட்டும்.

கொடை கொடுக்கும் மாதமே உன் வரவு நல்வரவாகட்டும்.

ஈடேற்றம் தரும் மாதமே உன்வரவு நல்வரவாகட்டும்."

இஸ்லாத்தின் மூன்றாம் கடமையாம் புனித நோன்பு வருடத்தில் ஒரு மாதம் நோன்பு நோற்பது முஸ்லிமான ஆண், பெண் அகிய இரு பாலார் மீதும் கடமையாகும். ரமழான் என்ற அறபுச் சொல் பாவங்களை சுட்டெரித்தல் என்று பொருள் தருகிறது. எனவே பாவவிடுதலை, விமோசனம் பெற இந்த நோன்பை சுபசோபனம் கூறி வரவேற்போம்.

அல்லாஹ் கூறுகிறான், - விசுவாசிகளே! நீங்கள் இறையச்சமுடையோராக மாறுவதற்கு உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. (அல் குர்ஆன் 2:185)

ரமழான் மாதம் நோன்பு நோற்பது கட்டாய கடமை என்று இவ்விரு வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன. மனித சமுதாயத்திற்கு நல்வழி காட்டும் திருக்குர்ஆன் இம்மாதத்தில் அருளப்பட்டதால் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந் நோன்பு கடமையாக்கப்பட்டதாகவும் இவ்வாறு நோன்பு நோற்பதால் இறையச்சமுடையோராக ஆகமுடியும் என்றும் இவ்வசனங்கள் எடுத்தியம்புகின்றன.

நாம் பக்குவப்படுவதும் இறையச்சமுடையோராக ஆக முடியும் என்றும் இவ்வசனங்கள் எடுத்தியம்புகின்றன.

உடல் ஆரோக்கியம் பேணப்படுகிறது. பசி எத்தகையது என்பது உணரப்படுகிறது.

இவ்வாறு சிலர் காரணம் கூறுவர்.

நோன்பினால் இந்தப் பயன்களெல்லாம் இருக்கலாம். இருந்தபோதிலும் நபி (ஸல்) அவர்களும் இந்த நோக்கத்தை விளக்கியுள்ளார்கள். யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ அவர் உண்ணுவதையும் பருகுவதையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத்தேவையுமில்லை.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல்கள்: புஹாரி, அஹ்மத், அபூதாவூத், திர்மிதி

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும்போது யாரேனும் அவரிடம் முட்டால்தனமாக நடந்தால் நான் நோன்பாளி என்று கூறிவிடட்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் திர்மிதி எனவே, எம்மை அண்மித்துள்ள புனிதமான றமழான் மாதத்தில் பயன்களை உணர்ந்து நல்ல முறையில் நோன்பை நோற்க வல்ல இறைவன் அனைவருக்கும் கிருபை செய்வானாக.கலாபூசணம் எம். எஸ். எம். ஹாரிஸ் (கபூரி)

No comments