இலங்கை மீதான தாக்குதலுக்கு காரணம் இதுதான்! ஐ.எஸ் அமைப்பின் தலைவர் வெளியிட்டுள்ள காணொளி - WeligamaNews

Breaking

திங்கள், 29 ஏப்ரல், 2019

இலங்கை மீதான தாக்குதலுக்கு காரணம் இதுதான்! ஐ.எஸ் அமைப்பின் தலைவர் வெளியிட்டுள்ள காணொளி

சிரியாவின் நகரமொன்றான அமைப்பின் கோட்டையாக இருந்த பிரதேசத்தை இழந்தமைக்கு பழி தீர்க்கவே, இலங்கை மீது தாக்குதல்​களை மேற்​கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி வெளியிட்டுள்ள காணொளியொன்றின் மூலம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

2014ம் ஆண்டில், வடக்கு ஈராக்கிலுள்ள மொசூலில் முன்னெடுத்த பிரசாரத்தின் பின்னர், ஐ.எஸ் அமைப்பின் தலைவரால் வெளியிடப்பட்ட முதல் காணொளி இதுவாகும்.

கடந்த ஐந்து வருடங்களுக்குப் பின்னர் முதற்றடவையாக ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி காணொளியொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி 18 நிமிடங்களை கொண்டுள்ளது.

இந்தக் காணொளியில், ஈராக் மற்றும் சிரியாவில், பிரிட்டன் அளவில் தங்கள் வசமிருந்த பிரதேசத்தை, அந்நாட்டுடன் இடம்பெற்ற போரின் போது இழந்ததாகவும் இது, நீண்டநாள் போராட்டமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

இறுதிப் போரின் போது, தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பாரிய பிரதேசம், தங்களது கையை விட்டுச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிராளிகளை அழிப்பது குறித்துச் சிலருடன் கலந்துரையாடும் அவர், எதிரிகளை அழிக்கும் நடவடிக்கை தொடரும் எனவும், அந்தக் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில், தங்கள் வசமிருந்து பாகூஸ் பிர​தேசம், அமெரிக்க மற்றும் சிரிய படையினரின் கூட்டுப் படை நடவடிக்கையின் போது, தங்களிடமிருந்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் பறிக்கப்பட்டது.

இதற்கு பழி தீர்ப்பதற்காகவே, இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை முன்னெடுத்ததாகவும், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பே காரணம் என்றும் அதை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Post Bottom Ad

Pages