தென் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் 314 ஆசிரியர் வெற்றிடங்கள் - WeligamaNews

Breaking

புதன், 15 மே, 2019

தென் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் 314 ஆசிரியர் வெற்றிடங்கள்

தென் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் நிலவும் 314 ஆசிரியர்கள் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு தென் மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நீண்டகாலமாக தென் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் நிலவிவந்த ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்திசெய்யும் முகமாக இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
இந்நியமனங்களை இரண்டு மாதகாலத்தினுள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தென் மாகாண ஆளுநர் கீர்த்திதென்னகோன் தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி தென் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு போட்டிப் பரீட்சைகள் நடாத்தப்பட்டாலும் அதில் சித்தியடைந்த தமிழ் மொழி மூல பட்டதாரிகளுக்கு இதுவரைநியமனம் வழங்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்ததின் காரணமாக நீதிமன்றத்தினால் 2016.08.30தொடக்கம் தென் மாகாண தமிழ் மொழி ஆசிரிய நியமனங்களுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நியமனம் வழங்குவதற்கு தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலைமையினை கருத்திற் கொண்டு பாதிக்கப்பட்ட பட்டதாரிகளுடன் கலந்துரையாடிய தென் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கு புதிதாக 314 ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பங்களை கோரியுள்ளது. (Thinakaran)

Post Bottom Ad

Pages