மாகந்துரே மதூஷ் சி.ஐ.டி.யின் பொறுப்பில்மாகந்துரே மதூஷ் டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்டு இன்று (05) அதிகாலை 5.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இவரை கட்டுநாயக்க விமானநிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள பிரிவு பொறுப்பேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சமரசிங்க ஆராச்சிலாகே மதூஷ் எனும் மாகந்துரே மதூஷ் இன்று அதிகாலை 5 மணியளவில் யு.எல். 226 ஆம் இலக்க விமானத்தில் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.

கடந்த பெப்ரவரி 5 ஆம் திகதி டுபாய் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது மதூஷ் உட்பட 31 பேர் டுபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். ஏனைய அனைவரும் டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், இறுதியாக இன்று மதூஷ் நாடு கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (மு

No comments