ஐ.எஸ் பெண் உறுப்பினருக்கு ஈராக்கில் 15 ஆண்டுகள் சிறை


ஈராக்கில் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஐ.எஸ் பெண் உறுப்பினருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஐ.எஸ்ஸில் உறுப்பினராக உள்ளவரை திருமணம் செய்துள்ளார். இதில் அந்த நபர் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். அப்பெண் குறித்த கூடுதல் தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஈராக் நீதிமன்றம் அப்பெண்ணுக்கு 15 ஆண்டுக்கு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

ஈராக் நீதிமன்றம் இந்த வாரம் பத்திற்கும் மேற்பட்ட ஐ.எஸ் உறுப்பினர்களுக்கு மரணத் தண்டனை விதித்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈராக் ஐ.எஸ் இயக்கம் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்புடைய சுமார் 19,000 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இதில் சுமார் 3,000 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக ஏ.பி செய்தி நிறுவனம் கடந்த ஆண்டு செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments