தென் மாகாண பாடசாலைகள் 2.30 வரை நடைபெற வேண்டும் - தென் மாகாண ஆளுனர் காரியாலயம் அறிவிப்பு - WeligamaNews

Breaking

வெள்ளி, 28 ஜூன், 2019

தென் மாகாண பாடசாலைகள் 2.30 வரை நடைபெற வேண்டும் - தென் மாகாண ஆளுனர் காரியாலயம் அறிவிப்பு


தென்மாகாணப் பாடசாலைகள் முடிவடையும் நேரத்தை நீடித்துள்ளதாக தென் மாகாண ஆளுனர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அதன் படி தென்மாகாணத்திற்குட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் மாலை 2.30 மணிவரை நடைபெற வேண்டும் என ஆளுனர் அலுவலகம் அறிவித்துள்ளது.

தென் மாகாணத்தில் இயங்கும் தேசிய பாடசாலைகளுக்கு இந்த நேர மாற்றம் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 12.30 மணியளவில் ஆளுனர் அலுவலகம் மாகாணப் பாடசாலைகள் அனைத்திற்கும் தொலைபேசியினூடாக இவ்வறிவித்தல் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இதற்கான காரணத்தை ஆளுனர் அலுவலகம் தெரிவிக்க வில்லை.

இவ்வறிவித்தல் காரணமாக பெற்றார், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை வாகன சாரதிகள் உட்பட பலர் பல்வேறு முறைப்பாடுகளை தெரிவித்துவருகின்றனர்.

Post Bottom Ad

Pages