தென்மாகாண பாடசாலைகள் இன்று முதல் 2.30 மணி வரை இடம்பெறும் . தென் மாகாண ஆளுனர் - WeligamaNews

Breaking

செவ்வாய், 2 ஜூலை, 2019

தென்மாகாண பாடசாலைகள் இன்று முதல் 2.30 மணி வரை இடம்பெறும் . தென் மாகாண ஆளுனர்

தென் மாகாண பாடசாலைகள் அனைத்தும் இன்று ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் 2.30 மணி வரை நடத்துமாறு
தென் மாகாண ஆளுனர்
கீர்த்தி தென்னக்கோன் அறிவித்துள்ளார்.

கடந்த 28 ஆம் திகதி ஆளுநர் அலுவலகத்தில் இருந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டாலும் அதற்கான காரணம் தெறிவிக்கப்படவில்லை.

என்றாலும் தென் மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கு இந்த அறிவிப்பு வழங்கப்படவில்லை. தேசிய பாடசாலைகள் வழமை போன்று 1.30 மணி வரை இடம்பெறும்.

மாகாண பாடசாலைகளில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக பல தரப்புக்களால் செய்த முறைப்பாட்டை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுனர் தெரிவிததார்.

இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து பாடசாலை கல்வி நடவடிக்கைகை அனைத்தும் பாதிக்க பட்டதாகவும் குறிப்பிட்ட காலத்தில் பாட அலகுகளை முடிவு செய்ய முடியாமல் போனமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார் .

112 பாடசாலைகள் இந்த முடிவை எடுக்குமாறு தாமாகவே  அறிவித்ததாகவும்  அவர் குறிப்பிட்டார்.

தென்மாகாண கல்வி நிலையில் பாதிப்புக்கள் ஏற்படாமல் இருக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Post Bottom Ad

Pages