அமெரிக்காவில் பல்கலைக்கழகத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூடு, 2 பேர் பலி - WeligamaNews

Breaking

post above

சனி, 17 ஆகஸ்ட், 2019

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூடு, 2 பேர் பலி


அமெரிக்காவின் தெற்கு பகுதியிலுள்ள அலபாமா மாகாண தலைநகரான மாட்கோமரி நகரில் அமைந்துள்ள பல்கலைகழகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

மர்ம நபர் ஒருவர் பொதுமக்களின் மீது திடீரென துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இந்த தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பி சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடிவருவதாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. (மு)

Post Bottom Ad

Pages