சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்க, தனியான பொலிஸ் பிரிவு


சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்கவென தனியான பொலிஸ் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.


இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் கருத்துகளையும் பதிவுகளையும் மேற்கொண்டால், அவசரகால சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.


அதேநேரம், சமூக வலைத்தளங்கள் மீதான தடை நாட்டின் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தளர்த்தப்படுமென அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவேவா நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார்.


இத்துடன் நான்காவது தடவையாக இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடைசெய்யப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர் அனைத்தும் நாட்டின் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு எடுக்கப்பட்ட குறுகிய காலத்துக்கான தற்காலிக முடிவு என்றும் அவர் கூறினார். சமூக வலைத்தளங்கள் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடிக்கப்படுமா? என்பது தொடர்பில் தினகரன் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டதற்கே அவர் இவ்வாறு விளக்கமளித்தார்.


"நாட்டு நிலைமை அடிப்படையிலேயே உடனடி அமுலுக்கு வரும் வகையில் சமூக வலைத்தளங்களை தடை செய்துள்ளோம். அசாதாரண சூழ்நிலைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கம். கண்டியில் இடம்பெற்ற கலவரத்தின்போது முதற் தடவையும் ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து மூன்று தடவைகளுமென இதுவரை நான்கு தடவைகளுக்கு சமூக வலைத்தளங்கள் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளன. அனைத்தும் குறுகிய காலத்துக்கு மேற்கொள்ளப்பட்ட தற்காலிகத் தடை," என்றும் அவர் கூறினார்.


அடுத்த கட்டமாக நாட்டின் நிலவரம் தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது. அனைத்து பிரதேசங்களிலும் அமைதியும் சுமுக நிலையும் ஏற்படுமாயின் சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


இலங்கையில் பேஸ்புக் மீதான தடையை அந்நிறுவனம் கண்டித்துள்ளதா? என்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது உத்தியோகப்பூர்வமாக எமக்கு அதுபற்றி எதுவும் அறியத்தரப்படவில்லையென்றும் அவர் தெரிவித்தார்.
Read more »

வாளுடன் வந்து சபைக்குள் பரபரப்பை ஏற்படுத்திய பெண் அரசியல்வாதி - காலியில் சம்பவம்

காலியில் பிரதேச சபைக்குள் வாளுடன் வந்த பெண் அரசியல்வாதியினால் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. இமதுவ பிரதேச சபை இன்று கூடிய வேளையில், பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த ரேணுகா சஞ்ஜீவனி என்ற பெண் உறுப்பினர் வாள் ஒன்றுடன் உள்நுழைந்தார்.


வாளுடன் உரையாற்ற முயற்சித்த போது, அதற்கு ஏனைய கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


பெண்களை பாதுகாத்துக்கொள்ள வாள்கள் வைத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தனது பாதுகாப்பிற்காக வாளுடன் வந்ததாக அவர் குறிப்பிட்டார்.


இந்த சந்தர்ப்பத்தில் சபையில் இருந்து ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டமையினால் சபையில் குழப்ப நிலை ஏற்பட்டது.


இதனையடுத்து சபைத் தலைவர் அந்த வாளை பெற்று வெளியில் எடுத்துச் செல்ல பணித்தார். இதனையடுத்து சபை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற்றன.
Read more »

நவ சிங்களே அமைப்பின் தேசிய அமைப்பாளர் டான் பிரியசாத் கைது

நவ சிங்களே அமைப்பின் தேசிய அமைப்பாளர் டான் பிரியசாத் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


குற்றத்தடுப்பு பிரிவினர், மீதொட்டமுல்லையில் அமைந்துள்ள அவரது வீட்டுக்குச் சென்றிருந்த போது, அவர் அங்கு இல்லாத நிலையில், வழக்கறிஞர் ஒருவர் மூலமாக டான் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை, மகசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க இன்று காலை கைது செய்யப்பட்டிருந்ததுடன், நாமல் குமார குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
Read more »

கல்முனையில் ஏற்பட்ட குழப்பநிலை! பெருமளவான இராணுவம் குவிப்பு

கல்முனையில் சற்று முன்னர் மௌலவி ஒருவர் அப்பகுதி இளைஞர்களால் தாக்கப்பட்டதை அங்கு பதற்றமான சூழல் தோன்றியுள்ளது.


இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.


இராணுவத்தினர் கல்முனையில் உள்ள அனைத்து வீதிகளிலும் தற்போது ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


இன்று மாலை கல்முனையில் இளைஞர்கள் தங்களது பிரதேசத்தில் பிரதேசத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வீதியால் வந்த மௌலவி அந்த இளைஞர்களை விசாரித்துவிட்டுச் சென்றுள்ளார்.


அதன் பின்னர் சற்று தொலைவில் சென்று ஏன் அந்த இளைஞர்கள் அங்கு நிற்கின்றனர் என பிறரிடத்தில் வினவிய போதே மௌலவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனைத்தொடர்ந்து கல்முனையில் பல வீதிகளிலும் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Read more »

நாளை திகன நகரில் நடத்த ஏற்பாடு செய்திருந்த ஆர்பாட்டத்திற்கு நீதி மன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

நாளை சனிக்கிழமை திகன நகரில் இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கு எதிரான ஆர்ப்பட்டம் என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்பாட்டத்திற்கு நீதி மன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் நீதிமன்றுக்கு முன்வைத்த கோரிக்கையை அடுத்து  அமித் வீரசிங்கவின் தலைமையில்  நாளை திகன நகரில்  நடத்த ஏற்பாடு செய்திருந்த ஆர்பாட்டத்திற்கு நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த தடையுத்தரவு அமித் வீரசிங்கவுக்கு பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ளது.                     
Read more »

பள்ளிவாயல்களில் இடம்பெறும் சகல பயான்களையும் பதிவு செய்து அனுப்பவும்- அமைச்சர் ஹலீம்


குரோதம் மற்றும் அடிப்படைவாதத்துக்கு துணைபோகும் விதமாக பள்ளிவாயல்களில் எந்தவொரு பிரச்சார நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டாம் எனவும், அவ்வாறு இடம்பெற்றதாக கண்டறியப்பட்டால் அதற்கு பள்ளிவாயல் பரிபாலன சபை பொறுப்புக் கூற வேண்டும் எனவும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் விசேட அறிவித்தல் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முஸ்லிம் பள்ளிவாயல்களில் இடம்பெறும் ஜும்ஆ நிகழ்வுகளையும், வேறு பயான் நிகழ்ச்சிகளையும் சீ.டீ.களில் பதிவு செய்து முஸ்லிம் கலாசார அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறும் அந்த நீண்ட அறிவித்தலில் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். (மு)


Read more »

சந்தேகத்திற்கு இடமான ஆயுதங்கள் இருப்பதாக வெலிகம வெலிபிடிய பிரதேசத்தில் அடக்கப்பட்ட ஜனாஸா கபுருகள் தோண்டப்பட்டு சோதனை.

வெலிகம வெலிபிடிய பிரதேசத்தில் மலே பள்ளிவாசல் மையவாடியில் அடக்கப்பட்டிருக்கும் கப்ர் இல் ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸ் ற்கு கிடைத்த  முறைப்பாட்டை அடுத்து
 காவற்துறையினர் , விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணவத்தினர் இணைந்து வெலிகம வெலிபிடிய பிரதேசத்தில்  மையவாடியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்

அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸா கபுருகள் சில தோண்டப்பட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக பிரதேசவசிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பிட்ட பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான பொருற்கள் எதுவும் கண்டெடுக்க படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் பொருட்கள் தொடர்பில்  கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
Read more »

ஹம்பாந்தோட்டயிலும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி ?


காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஏழுபேருக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத குழு ஹம்பாந்தோட்டை பிரதேசத்திலும் ஆயுதப் பயிற்சி வழங்கியுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதி ஸஹ்ரானின் நெருங்கியவர்கள் என சந்தேகிக்கப்படும் இக்குழுவினர் ஹம்பாந்தோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஸஹ்ரானின் சகோதரரினால் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும், பொலிஸ் பரிசோதகருமான என்.பி. கஸ்தூரி ஆராச்சி உட்பட பொலிஸ் குழுவினரால் இந்த சந்தேகநபர்கள் ஏழு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 21 ஆம் திகதி தாக்குதலுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கின்றதா என்பது குறித்து இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சகோதர தேசிய ஊடகமொன்றிடம்
Read more »

புவக்பிட்டி பாடசாலையிலிருந்து 10 முஸ்லிம் ஆசிரியைகள் இடமாற்றம்


அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பாடசாலையில் கடமையாற்றும் 10 ஆசிரியைகள் உட்பட 12 முஸ்லிம் ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

வலயக் கல்விப் பணிப்பாளர் தலையிட்டும் கூட ஹிஜாப் அணிந்த ஆசிரியைகள் அங்கு வரத்தேவையில்லையென குறித்த குழுவினர் அடம் பிடித்த நிலையில், இரு ஆசிரியைகள் களுத்துறைக்கும் மற்றும் பாத்திமா கல்லூரி, சேர் ராசிக் பரீட் கல்லூரி, பதியுதீன் முஸ்லிம் பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு மாற்றங்களைப் பெற்றுள்ளனர்.

புவக்பிட்டி தமிழ் பாடசாலையின் நிர்வாகமும் இது தொடர்பில் சர்ச்சைக்குழுவுக்கு சார்பாக நடந்து கொண்ட நிலையிலேயே இவ்விவகாரம் ஆளுனர் அசாத் சாலியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு இவ்வாறு தீர்வு காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஆளுனர் ஆசாத் சாலி, இச்சம்பவம் கவலை தருவதாகவும் ஏலவே தெளிவான அறிவுறுத்தல்கள் இருந்தும் கூட இனரீதியிலான அடக்குமுறை உபயோகிக்கப்படுவது எதிர்காலத்தில் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் எனவும் சுட்டிக்காட்டியதுடன், சந்தர்ப்ப சூழ்நிலையை கருத்திற்கொண்டும் மேலதிக சர்ச்சைகளை தவிர்க்கும் முகமாகவும் இவ்வழியில் தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
Read more »

ஐஎஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்தது ஏன்? சிறிசேன விளக்கம்

ஐஎஸ் அமைப்பு தனது இருப்பை வெளிப்படுத்துவதற்காக இலங்கையில் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிபிசியின் பிராந்திய மொழிச்சேவையொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நான் அதிர்ச்சியடைந்துள்ளேன் அவர்கள் ஏன் இலங்கையில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்தார்கள் என்பது எனக்கு தெரியவில்லை என சிறிசேன தெரிவித்துள்ளார்.

உலகின் வலுவான நாடுகளுடன் நேரடியாக மோதுவதற்கான திறன் இல்லாத காரணத்தினாலா ஐஎஸ் அமைப்பு அமைதி நிலவும் நாடொன்றில் தாக்குதலை மேற்கொள்வதற்கு தீர்மானித்தது என நான் கேள்வி எழுப்பவிரும்புகின்றேன் என சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் அமைப்பு தான் இன்னமும் அழிந்துவிடவில்லை என்பதை சொல்வதற்காக தனது இருப்பை வெளிப்படுத்துவதற்காக இலங்கையில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்ததா எனவும் சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.

புலனாய்வு பிரிவின் உயர் மட்டத்தில்உள்ளவர்களிற்கு தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற தகவல் கிடைத்தது எனினும் அவர்கள் அதனை எனக்கு தெரியப்படுத்தவில்லை எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவர்கள் தங்கள் கடமையை புறக்கணித்தனர் அதன் காரணமாகவே நான் நடவடிக்கை எடுத்தேன் என தெரிவித்துள்ள சிறிசேன இவர்களை பதவியிலிருந்து நீக்கியுள்ளேன், விசாரணைகளிற்காக குழுவொன்றை நியமித்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் எந்த நாட்டிலும் குண்டுவெடிப்பினை தொடர்ந்து ஜனாதிபதி பதவிவிலகுவதில்லை எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த சவாலை எதிர்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதே எனது பணி என நான் கருதுகின்றேன் என சிறிசேன தெரிவித்துள்ளார்
Read more »