உலகக்கோப்பையில் இலங்கைக்கு அரையிறுதி வாய்ப்பு எப்படி? இந்த அணி தோற்கனுமே!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு அரையிறுதி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மே மாதம் 30-ஆம் திகதி துவங்கிய உலகக்கோப்பை தொடர் இப்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
கிட்டத்தட்ட அனைத்து அணிகளும், இந்தியாவைத் தவிர 6 போட்டிகளில் விளையாடிவிட்டன.இதில் இலங்கை அணி விளையாடிய 6 போட்டிகளில் 2-ல் வெற்றி 2-ல் தோல்வி, இரண்டு போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டது என மொத்தம் 6 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளன.

இன்னும் இலங்கை அணிக்கு 3 போட்டிகள் தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவு, இந்தியாவுடன் உள்ளன. இந்த மூன்று போட்டிகளில் இலங்கை கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
இதில் மூன்றிலும் வெற்றி பெற்றுவிட்டால் இலங்கை அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். அதே சமயம் ஒன்றில் தோல்வியடைந்துவிட்டால் 10 புள்ளிகளுடன் இருக்கும்.அப்போது இங்கிலாந்து அணி அனைத்து போட்டிகளிலும் தோற்க வேண்டும், வங்கதேசம் அணி இரண்டு போட்டிகளுக்கு மேல் ஜெயிக்க கூடாது, பாகிஸ்தான் மீதம் விளையாடும் போட்டிகளில் ஒரு போட்டியிலாவது தோற்க வேண்டும்.

இது நடந்தால் மட்டுமே இலங்கை அணியால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும்.
Read more »

தனிமையடைவதை விட இலங்கையர்களாகப் பயணிப்பதே எங்களுக்குப் பாதகாப்பானதாகும்


1948ல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த போது பேராசிரியர் குணபால மலலசேகர தலைமையிலான வலதுசாரி குழுவினர் தேசபிதா டீ.எஸ் சேனாநாயக்கவை சந்தித்து இலங்கை சிங்கள பௌத்த அரசாக (Sinhala Buddhist State) பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். பிரதமர் டீ.எஸ் சேனாநாயக்க அவர்கள் இந்தக் கோரிக்கையை சாதுரியமான முறையில் நிகாரித்தார்.

''நாட்டை சிங்கள பௌத்த அரசாக ஏற்றுக்கொள்ள முடியாது: இந்தக் கோரிக்கை சிங்கள பௌத்த மக்களின் நலனுக்கு எதிரானதும், ஆபத்தானதும் " ஆகும் என்று கூறினார்.

நாங்கள் 60 இலட்சம் பேர் மாத்திரமே இங்கு வசித்துவருகிறோம். நாங்கள் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை புறந்தள்ளி, சிங்கள பௌத்தர்கள் என்று எம்மை அடையாளப்படுத்திக்கொள்வோம் எனில் நாம் உண்மையாகவே தோல்வியடைந்துவிடுவோம்.

சிங்கள பௌத்தர்களுடன் வசிக்கும் ஏனைய சிறுபான்மையினர் இங்கு சிறுதொகையாக இருந்தாலும், பிராந்தியத்திலும் உலகநாடுகளிலும் அவர்கள் எங்களை விட சனத்தொகையில் அதிகானவர்களாக உள்ளார்கள். எனவே நாங்கள் தனிமையடைவதை விட இலங்கையர்களாகப் பயணிப்பதே எங்களுக்குப் பாதகாப்பானதாகும்.
இதனையே உண்மையான நாட்டுப் பற்றி என்கிறோம். அதனால் தான் டீ.எஸ் சேனாநாயக்கவை தேச பிதா என்று இன்றும் அழைக்கிறோம்.

புகழ்பெற்ற ராஜதந்திரியும், ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவருமான கலாநிதி தயான் ஜயதிலக அவர்களின் பதிவில் இருந்து.
Read more »

வெலிகம பிரதேசத்தில் புத்தர் சிலைக்கு கல் வீச்சு தாக்குதல்

வெலிகம ரெஸ்ட் ஹௌஸ் சந்தியில் காணப்படும் புத்தர் சிலைக்கு கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள இதனால் புத்தர் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது
இன்று 21 அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெறிவிக்கப்படுகின்றது
இரண்டு கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகா தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் யாரால் மேற்கொள்ளபட்டது எக் காரணத்தற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பாக  இதுவரை கண்டறியப்படவில்லை

குறித்த இடத்தின் உரிமை தொடர்பில் பல தரப்பினருக்கிடையில் நீண்டகாலமாக கருத்து முரண்பாடு இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக வெலிகம போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more »

முஸ்லிம்களே இல்லாத தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள வெலிகம கப்தரை பள்ளிவாசல்


மூன்று நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த வெலிகம கப்தரை பள்ளிவாசல் பல சிறப்பம்சங்களை கொண்டு தென் மாகாணத்திலே அல்லது இலங்கையிலேயே ஒரு சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள ஒரே ஒரு முஸ்லீம் பள்ளிவாசல் ஆகும் .கொழும்பு மாத்தறை பிரதான வீதியில் வெலிகமைக்கு அருகாமையில் காணலாம்.
தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள இந்த பள்ளிவாசல் அமையப்பெற்றமைக்கான காரணம் ஒரு வரலாறாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
1993 தினகரன், மற்றும் 2010 சிங்கள பத்திரிகையில் வெளியாகிய கட்டுரை பள்ளிவாசல் பதாதையில் ஒட்டப்பட்டுள்ளது.

அதனை அடிப்படையாக கொண்டு இந்த பதிவு

இந்த பள்ளிவாசல் அமையப்பெற்ற வரலாறு முஸ்லீகளை மாத்திரம் அல்லாது அப்பிரதேச சிங்கள மக்களை கூட ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒரு சம்பவமாகவே உள்ளது சிங்கள மக்கள் அப்பளிவாசல் விடயத்தில் மிகவும் பயபக்தியோடும் கண்ணியமாகவும் அன்று தொடக்கம் இன்றுவரை நடந்துக்கொள்கின்றார்கள் என்பதும் நோக்கத்தக்கது. இன்றும் கடலுக்கு செல்லும் மீனவர்கள் இப்பள்ளிவாசலுக்கு காணிக்கையாக பணத்தை போட்டுவிட்டு செல்வதை வழக்கமாக அவதானிக்கலாம்.


அப்பள்ளிவாசல் மீது இவ்வளவு பக்தி ஏற்பட என்ன காரணம்.??
(1993 பத்திரிகையில் சுமார் 300 வருடம் என குறிப்பிடப்பட்டுள்ளது.)

சுமார் 300 வருடம் மூன்று நூற்றாண்டுக்கு முன் சிங்கள மீனவர் குழு ஒன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்று இருந்த போது அந்த நேரம் கடலில் ஒரு பெட்டி மிதந்து வருவதைகண்டு அந்த பெட்டியை எடுக்க முயற்சி செய்து இருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் அதனை நெருங்க நெருங்க அந்த பேட்டி ஆழ்கடலை நோக்கி செல்வதை அவதானித்தார்கள்   அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது அவர்கள் மீண்டும் கடலில் இருந்து கரைக்கு வரும்போது அந்த பெட்டி கரையை நோக்கி வந்து இருப்பதை அவதானிதார்கள் மீண்டு அந்த பெட்டியை நெருங்கும்போது அந்த பெட்டி ஆழ்கடலை நோக்கி சென்றதை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்

அதில் அரபு எழுத்துக்களால் எழுதப்பட்டு இருப்பதை கண்டு
எதற்கும் நாம் பக்கத்து ஊரில் உள்ள முஸ்லீகளை அழைத்து வந்து இந்த பெட்டியை எடுப்போம் என்ற எண்ணத்துடன் பக்கத்து கிராம முஸ்லீம்களுக்கு இது தொடர்பாக அறிவிக்கின்றார்கள்

முஸ்லீம்கள் கடற்கரையை நோக்கி சென்று கரையை நோக்கி வந்த அந்த பெட்டியை கரைக்கு கொண்டுவந்து முஸ்லீம்களும் சிங்களவர்களும் ஏதோ புதையல் கிடைத்துவிட்டது என்று அந்த பெட்டியை திறந்து பார்க்கின்றார்கள்அவர்களுக்கு ஏமாற்றமே இருந்தது

அந்த பெட்டியில் குங்குமம் வாசனையுடன் ஒரு கபன் இடப்பட்ட ஜனாஸா,மிஸ்வாக் குச்சி, குத்து விளக்கு மற்றும் ஷெய்ஹ் Inaayatullah என்று எழுதிய ஒரு அட்டை இருந்தன
கோபத்துடன் சிங்கள மக்கள் உங்கள் ஊருக்கே கொண்டு போய் இதை அடக்கம் செய்துவிடுங்கள் என வேண்டிக்கொண்டார்கள்
கரைக்கு எடுத்து வந்த அந்த பெட்டியை
அப்பிரதேசத்தில் இருந்து தூக்கி செல்ல முயன்றபோது அவர்களால் அந்த பெட்டியை அசைக்க முடியவில்லை.

சிங்கள மக்களும் சேர்ந்து செய்த முயற்சியாலும் அந்த பெட்டியை அசைக்க முடியாமல் போனது பின்னர்
இந்த ஜனாஸா ஒரு மாபெரும் மகான் ஒன்றின் ஜனாசாவாக இருக்கலாம் என ஊகிக்கின்றார்கள்.இந்த ஜனாஸா இந்த இடத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டுமாக இருக்கும் என கூற சிறு இடம் கேற்கின்றார்கள்

ஆனாலும் சிங்கள மக்கள் இந்த ஜனாஸா வை இந்த பிரதேசத்தில் அடக்கம் செய்ய ஒரு அங்குலம் கூட இடம் தர மாட்டோம் என காணி உரிமையாளர் கூற முஸ்லீம்கள் நாளை நாம் எமது ஊரு ஜமாத்தினர்களிடமும் கலந்து ஆலோசனை செய்து வருகிறோம் என கூறி

ஊர் முஸ்லீம்கள் கலந்து ஆலோசித்து அந்த ஜனாஸாவை முஸ்லீம் கிராமத்திற்கு கொண்டு வந்து அடக்கம் செய்வோம் என முடிவு செய்கின்றார்ள்.

என்ன அதிசயம் அதிகாலையிலேயே காணி உரிமையாளர் இன்னும் சிலரும் முஸ்லீம் கிராமத்திற்கு வந்து என்னை காப்பாற்றுங்கள் உடனே வந்து அந்த ஜனாஸாவை எனது காணியில் அடக்கம் செய்யுங்கள் இதற்காக நான் இந்த நான்கு ஏக்கர் காணியை தருகிறேன் என கதறினார் .
உங்களுக்கு என்ன நடந்தது என முஸ்லீம்கள் கேற்க அதற்கு அவர் நேற்று அந்த பெரியார் என் கனவில் வந்து என்னை உனது காணியில் அடக்க செய்ய மறுத்து விட்டாயா என கூறி எனது முதுகில் அடித்தார் என தன் முதுகை காட்டினார்.
பின்னர் முஸ்லீம்கள் அவருக்கு ஆறுதல் கூறி அந்த ஜனாஸாவை அந்த பிரதேசத்தியிலேயே அடக்கம் செய்கின்றார்கள்


இந்த சம்பவம் முஸ்லீம் சிங்கள உறவை மேலும் வலுப்படுத்தியதாக கூறப்படுகின்றது பின்னர்
முஸ்லீம்கள் அவரின் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே ஒரு சிறிய பள்ளிவாசலையும் நிர்மானிதார்கள் காலப்போக்கில் பள்ளிவாசல் புணர்நிர்மானம் செய்யப்பட்டு ஒரு கேந்திர இஸ்தானமாக இன்றும் இப்பளிவாசல் காட்சியலிக்கின்றது. இன்றும் இந்த சியாரம் அந்த பள்ளிவாசலில் காணக்கூடியதாக உள்ளது

பள்ளிவாசலில் முன்பக்க காணியில் புதைத்த மிசவாக் துண்டு ஒரு நிழல் தரும் மிஷ்வாக் மரமாக இருந்தது.
1914 ஆம் ஆண்டு முஸ்லீம் சிங்கள கலவரத்தில் இப்பள்ளிவாசலுக்கு அநியாயம் செய்யவந்தவர்களுக்கு பல ஆச்சரியம் தரும் சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாகவும் பின்னர் அவர்கள் திரும்பி சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

வெலிகம பிரதேசத்தில் சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட முஸ்லீம் சிங்கள கலவரங்களின் போதும் எந்த சந்தர்ப்பத்திலும் இப்பளிவாசளுக்கு எந்த சேதமும் சிங்களவர்களால் செய்ய வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை பொலிஸ் அதிகாரிகள் கலவரங்கலின் போது இப்பள்ளிவாசளுக்கு பாதுகாப்பு கடமைக்கு செல்லும் போது சிங்களவர்களால் போலீஸ் அதிகாரிகளுக்கு நீங்கள் இந்த பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு வழங்க தேவையில்லை இந்த பள்ளிவாசளை நாங்களே பாதுகாப்பு வழங்குவோம் எனவும் கூறப்பட்டுள்ளது

இந்த சம்பவங்களினால் இப்பளிவாசல் மிக பிரசித்தி பெற்ற கேந்திர இஸ்தானமாக வெலிகாமத்தில் திகழ்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

இவ்வாறாக பல அற்புதமான வரலாற்று சம்பவத்தை கொண்டு வெலிகம கப்தரை பள்ளிவாசல் இன்றும் அப்பிரதேச சிங்கள மக்களாலும் கண்ணியமான முறையில் பாதுகாக்ப்பட்டு வருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.









WeligamaNews
www.weligamanews.com


Read more »

தென் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் 15 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது

தென் மாகாண பட்டதாரி ஆசிரிய நியமனங்களுக்கான விண்ணப்பங்கள்
தென் மாகாண மற்றும் ஏனைய மாகாணங்களில் இருந்தும்  கோரப்பட்டிருந்தன
தென் மாகாண பாடசாலைகளில் காணப்படும் 314 ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கான
 விண்ணப்பம் கடந்த மாதம் கோரப்பட்டது

இதில் நேர்முக பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனம் எதிர்வரும் 15 ஆம் திகதி தென்மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வழங்கப்படவுள்ளது.

தமிழ் ,ஆரம்பக்கல்வி ,கணிதம்,விஞ்ஞானம்,வரலாறு பாடங்களுக்கான நியமனங்களே 15 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

ஏனைய பாடங்களுக்கான பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால் போட்டி பரீட்சை மூலம் அதிக புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Read more »

வெலிகம கொலெதண்ட பள்ளிவாசலை சோதனையிட வந்ததாக கூறிய பாதுகாப்பு படையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ள படைவீரர் போலீஸாரால் கைது

இன்று பிற்பகல் 1.45 மணி அளவில் 5 பேர் முச்சக்கர வண்டியில் வெலிகம கொலெதண்ட பள்ளிவாசலுக்கு வந்து அங்கு பள்ளிவாசல் இமாமை சந்திக்க வேண்டும் என்பதாகவும் அவரை தாம் முன் கூட்டியே அறிந்து இருப்பதாகவும் கூறியுள்ளார்கள். பின்னர் அங்கு சென்ற அப்பிரதேச வாலிபர் அவரின் அடையாள அட்டையை கேட்ட போது அவர் கொடுக்க மறுத்துள்ளார் பின்னர் ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அப்பிரதேச மக்கள் பள்ளிவாசலை நோக்கி விரைந்தனர்.   உடனடியாக பொலிஸ் இற்கு தொலைபேசி மூலம் அறிவித்ததை அடுத்து போலீஸ் அப்பிரதேசத்திற்கு வந்த 5 பேரில் 2 பேரை கைது செய்துள்ளனர்.

அடுத்த மூவரும் முச்சக்கர வண்டியுடன் தப்பி ஓடி உள்ளனர் முச்சக்கர வண்டியின் இலக்கம் போலீசார்கு வழங்கப்பட்டுள்ளது.
 ஆரம்ப கட்ட விசாரணையில் அவர் பாதுகாப்பு துறையில் இருந்து நீக்கப்பட்ட ஒரு படை வீரர் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை வெலிகம போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்
Read more »

வெலிகம தெனிப்பிடிய பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து இராணுவ படை வீரர் தற்கொலை.


வெலிகம தெனிப்பிடிய பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து இராணுவவீரர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இன்று காலை  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

வெலிகம தெலிஜ்ஜிவில பிரதேசத்தை சேர்த்த 28 வயது மதிக்கத்தக்க இராணுவ வீரரே இவ்வாறு ஆற்றில் குதித்து  தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குடும்ப தகராறு காரணமாகவே தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 கடற்படை மற்றும் ஊரு மக்கள் இணைந்து  சடலத்தை தேடும் பணியில்
ஈடுபட்டு வருகின்றனர். பொலிஸார் மேலதிக விசாரணை நடாத்தி வருகின்றனர்

Read more »

இஸ்ரேல் வழியில் செல்லும் ஞானசார தன் செயற்பாட்டை இஸ்ரேல் வழியில் நடத்தப்போவதாக சூளுரைத்துள்ளார் என்ற செய்தி தற் போது வெளியாகியுள்ளது

 இஸ்ரேலில் எவ்வாறு முஸ்லிம்களை அடிமைப்படுத்தி அடக்கி ஒடுக்கி அவர்களுக்கு சித்திரைவதை கொடுக்கிறார்களோ அதே வழியில் இலங்கையில் உள்ள  முஸ்லிம்களையும் நடத்தப்போவதாக கூறியதுடன் அதற்கான ஏற்பாடுகளையும் தான் செய்து வருவதாக மேலும் தெரிவித்துள்ளார்.
        இஸ்ரேலில் ஆயுதங்களைக் கொண்டு அவர்களை அடக்குகின்றனர் நான் எனது ஊடகங்களைக் கொண்டே இந்த முஸ்லிம்களை அடக்குவேன் என்றும் அதற்காக எனக்கு  ஆதரவாக தயாரான நிலையில் எமக்கு சார்பான ஊடகங்கள் இருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.
           இதற்கு உதாரணமாக ஒரு தொலைக்காட்சியில் நடத்தப்படுகின்ற ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளர் மற்றைய முஸ்லிம் அமைச்சர் மதகுரு மாரை பாய்ந்து பாய்ந்து கேள்விகளைத் தொடுத்தார்.  நானும் அதே நிகழ்ச்சியில் பங்கு கொண்டேன் ஒரு கேள்வியை கடினமாக  என்னிடம் அவர் கேட்கவில்லை நான் என்ன கதைத்தேனோ அதனையே  அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.  இப்படி பல ஊடகங்களும் அரசாங்கமும் எனக்கு உதவியாக இருக்கும் பொழுது இந்த முஸ்லிம்களை அடிமட்டத்துக்கு கொண்டு போய் விடுவேன் என்றும் அவர் கர்வத்துடன் கூறியுள்ளார்.
    இஸ்ரவேலருக்கு அந்நாட்டு முஸ்லிம்களின் சொத்து உடைமைகளையும் கல்வி அறிவினையும் முடக்கியது போல் இந்நாட்டு முஸ்லிம்களின்  சொத்து பொருளாதாரம் கல்வி உள்ளிட்ட அத்தனையையும் முடக்கி அவர்களை இந்நாட்டின் அடிமைகளாக வைப்பதே எனது நோக்கம் என்றும் கூறியுள்ளார்.  இதற்காக வேண்டி எனக்கு  தேவையான அத்தனையையும் தருவதாக பல பெரும்புள்ளிகள் எனக்கு உறுதி அளித்துள்ளனர்.
#ஆதங்கம்.
Read more »

தளபதியின் 63’வது படத்தில் 16 நடிகைகள்?


‘தளபதி விஜெயின் 63’ படத்தை இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார். இவ் வருட தீபாவளியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த படத்திற்காக விஜய் மற்றும் அட்லீ இணைந்துள்ளனர். சென்னையில் இந்த படத்திற்காக பிரமாண்ட அரங்குகள் அமைக்க்ப்பட்டு பல கோடி செலவில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது நான்காம் கட்ட படப்பிடிப்பிற்காக டெல்லி விரைகிறது படக்குழு.

இந்த படத்தின் கதை பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா வில்லு படத்திற்கு பின் நடிக்கிறார். யோகி பாபு, கதிர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நடிகர்களும் இதில் நடிக்கின்றனர்.

சமீபத்தில்தான் தளபதி 63கதை என்னுடைய குறும்பட கதையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டு வந்து சர்ச்சை எழுந்தது. அப்போது படக்குழு தொடர்ந்து 70நாட்கள் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தது. அட்லி தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இப்படத்தில் நடிக்கும் இந்துஜா, “நான் நடிகர் விஜயை பார்த்தேன்” என்று ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்துஜாவுடன் ரெபோ மோனிகாஜான், அத்மிகா மற்றும் வர்ஷா பொல்லம்மா என மொத்தம் 16 நடிகைகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read more »

ஹுவாய் நிர்வாணம் அமெரிக்கா மீது வழக்கு

ஹுவாவி உற்பத்திகளை பயன்படுத்துவதற்கு அமேரிக்கா விதித்திருக்கும் தடைக்கு எதிராக அந்த தகவல் தொடர்பாடல் நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது.

மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருக்கும் ஹுவாவி, தனது உற்பத்திகள் மீது கட்டுப்பாடு கொண்டுவருவதற்கு அமெரிக்க பாராளுமன்றம் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

சுருக்கமான தீர்ப்பு ஒன்றுக்காக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த ஹுவாவி, இந்த வழக்கை தொடர தகுதியுள்ளதா என்று நீதிமன்றத்திடம் வரைவான தீர்ப்பு ஒன்றைக் கேட்டுள்ளது. “ஹுவாவி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்பதற்கு அமெரிக்க அரசு எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. இங்கு துப்பாக்கியும் இல்லை புகையும் இல்லை.

ஊகங்கள் மாத்திரமே உள்ளன” என்று ஹுவாவியின் தலைமை சட்ட அதிகாரி சொங் லியுபிங் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.


அமெரிக்க அரசியல்வாதிகள் எம்மை வர்த்தகத்தில் இருந்து வெளியேற்ற விரும்புகின்றனர் என்று தெற்கு சீன நகரான சென்சனில் உள்ள ஹுவாவி தலைமையகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது லியுபிங் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்குள் தனது உற்பத்திகளை தடுக்கும் நிறைவேற்று உத்தரவு ஒன்றுக்கும் ஹுவாவி நிறுவனம் முகம்கொடுத்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்தின் ஸ்மாபார்ட்போர்ன் ஆண்ட்ரோய்ட் இயங்குதளத்தின் வசதிகளை கூகுள் நிறுவனம் நிறுத்தியது. எனினும் இந்தத் தடை 90 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வலையமைப்பு உபகரண வழங்குநராகவும் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போர்ன் உற்பத்தியாளராகவும் இருக்கும் ஹுவாவி, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போரில் மையப் புள்ளியாக மாறியுள்ளது.

ஹுவாவி அமைப்புகளை சீனா வேவுபார்க்க பயன்படுத்தப்படலாம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டுவதோடு அதனை ஹுவாவி தொடர்ந்து மறுத்து வருகிறது.
Read more »

வெலிகம நகரசபை தலைவரின் கட்சி உறுப்புரிமை நீக்கம்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஒழுக்க பண்பாட்டை மீறிய குற்றச்சாட்டில்  வெலிகம நகரசபை தலைவர் ரொஹான் ஜயவிக்ரம் வின் கட்சி உறுப்புரிமை நீக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரை விமர்சித்து ஊடகங்களுக்கு அறிக்கை விட்டது தொடர்பிலேயே வெலிகம நகரசபை தலைவர் விஜயவிக்ரம வின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

 கடந்த சில நாட்களுக்கு முன் வெலிகம நகரசபை தலைவர் கட்சி தலைமையகத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டதாகவும் அதில் அவர் இனிமேல் இவ்வாறு இடம்பெறாது பார்துகொள்வதாகவும் உறுதி அளித்தும் மீண்டும் கட்சி தலைமையை விமர்சித்தது
தொடர்பில் கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுத்ததாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்
Read more »

வெலிகம கபுவத்தை பிரதேசத்தில் புர்கா அணிந்து சென்ற முஸ்லீம் பெண் பாதுகாப்பு படையினரால் கைது

நாடில் புர்கா அணிவது சட்ட ரீதியாக தடைசெய்யப்பட்ட நிலையில் வெலிகம கபுவத்தை பிரதேசத்தில் புர்கா அணிந்து ஜனாஸா    வீடொன்றுக்கு சென்ற முஸ்லீம் பெண் ஒருவர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உற்படுத்தப்பட்டுள்ளார்

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து  இலங்கையில் அவசரகால நிலையை அறிவிக்கப்பட்டது இதன் அடிப்படையில் புர்கா தடைசெய்யப்பட்ட நிலையில்  புர்கா அணிந்து செல்வது நாட்டு சட்டத்தை மீறியவராக இந்த பெண் விசாரணைக்கு உற்படுத்த பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள் கவர்துறையினரால்
மேற்கொள்ளப்பட்டு வருகின்ரன.

அகாசர கால நிலையில் நாட்டு சட்டத்தை மீறி செயற்படுவோர் விசாரணை இன்றி தடுப்பு காவலில் வைக்கப்படுவீர்கள் என்பதையும் கருத்திற்கொள்ளுங்கள்.

நீங்கள் எவ்வாறான உடையுடன் தடுப்பு காவலில் இருப்பீர்கள் என்பதையும் கருத்திற்கொள்ளுமாறும்
 முஸ்லீம் பெண்கள் நாட்டின் நிலைமையை மறந்து செயற்பட வேண்டாம் எனவும்  இது தொடர்பாக ஆண்கள் பெண்களுக்கு அறிவுறுத்தல்களை வழக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்
Read more »

வெலிகம நகரசபை தலைவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் மீது குற்றச்சாட்டு சுமத்தி எழுதிய கடிதம் தொடர்பாக
வெலிகம நகரசபை தலைவர் ரொஹான் விஜ்ஜயவிக்ரம மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு நகரசபை உறுப்பினர்களிடம் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம தெரிவித்துள்ளார்.
    பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைவர் பதவியிலிருந்தி பதவி விலக வேண்டும் என்றும் தமைப்பதவியில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது இதற்கு எதிராக நாட்டில் உள்ள வேறுபகுதிகளில் ஐக்கிய தேசிய கட்சி நகரசபை உறுப்பினர்கள் வெலிகம நகரசபை தலைவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள். விடுத்துள்ளதாக மேலும் அவர் குறிப்பிட்டார்.

    வெலிகம நகரசபை தலைவர் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டிருந்தால்  அவருக்கு எதிராக கட்சியில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்
    Read more »

    இலங்கை வன்முறை சம்பவங்களில் 27 பள்ளிவாயல்களுக்கும் 1 அரபுக்கல்லூரிக்கும் சேதம்

      !

    சில தினங்­க­ளாக முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் குரு­நாகல், புத்­தளம் மற்றும் கம்­பஹா மாவட்­டங்­களில் 27 பள்­ளி­வா­சல்­களும் ஒரு அரபுக் கல்­லூ­ரியும் தாக்­கப்­பட்டு சேதங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளன.

    தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளான பள்­ளி­வா­சலின் புள்ளி விப­ரங்­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் திரட்­டி­யுள்­ளது குரு­நாகல் மாவட்­டத்தில் 23 பள்­ளி­வா­சல்­களும், ஒரு அர­புக்­கல்­லூ­ரியும் புத்­தளம் மாவட்­டத்தில் 3 பள்­ளி­வா­சல்­களும் கம்­பஹா மாவட்­டத்தில் ஒரு பள்­ளி­வா­சலும் தாக்­கப்­பட்­டுள்­ளன. குரு­நாகல் மாவட்­டத்தைச் சேர்ந்த பள்­ளி­வா­சல்கள் பல­வற்­றுக்கு பலத்த சேதம் விளை­விக்­கப்­பட்­டுள்­ளது. பல பள்­ளி­வா­சல்­களில் குர்ஆன் பிர­திகள் எரிக்­கப்­பட்­டுள்­ளன. பள்ளிவாயல்களில் சிறு நீர் கழித்தும் அசுத்தப்படுத்தியும் உள்ளன.

    குரு­நாகல் மாவட்­டத்தில் தாக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்கள்

    *மஸ்­ஜிதுல் ஹுதா– கொட்­டாம்­பிட்­டிய

    * மஸ்­ஜிதுல் லுஹ்லு– மல்­வத்த வீதி, கொட்­டாம்­பிட்­டிய

    *மஸ்­ஜிதுல் தாருஸ்­ஸலாம்– நிக்­க­பிட்­டிய

    *மஸ்­ஜிதுல் அப்ரார்– மடிகே, அனுக்­கென

    *-மஸ்­ஜிதுல் ஆலியா– பூவெல்ல

    *மஸ்­ஜிதுல் நூர் –போகொல்ல பாதை, ஹெடி­பொல

    *மொஹிதீன் ஜும்ஆ பள்­ளி­வாசல்– இஹல கினி­யம – வீர­பொக்­குன

    *அப்ரார் தக்­கியா –இஹல கினி­யம

    *ஆயிஷா தக்­கியா– இஹல கினி­யம

    *மஸ்­ஜிதுல் ஜாமிஆ– ஹொரம்­பாவ

    *மஸ்­ஜிதுல் அக்ஸா தக்­கியா– கரன்­தி­பொல

    *ஹம்­மா­லியா தக்­கி­யா–­பொன்­கொல்ல –பண்­டார கொஸ்­வத்த

    *பிர்ருல் வாலிதைன் தக்­கியா– செம்­பேவ சுனந்­த­புர

    *மஸ்­ஜிதுல் இஸ்லாம் –வீதி­ய­வெல –நாகொல்­லா­கொட

    *ஜமா­லியா அரபுக் கல்­லூரி– கொட்­டம்­பிட்­டிய

    *தோர­கொட்­டுவ ஜும்ஆ பள்­ளி­வாசல்– கொன்­னாவ– தோர­கொட்­டுவ

    *சுவைக் தக்­கியா– கொன்­னாவ

    *தக்­கியா –   பென்­னலி கட­வெர –மொர­கோன்ன

    *கைராத் ஜும்ஆ பள்­ளி­வாசல்– யாய­வத்த –கிரிந்­த­வெவ

    *ஹசனாத் தக்­கியா –கல­பிட்­டி­ய­கம– நிக்­க­வ­ரட்­டிய

    *நிக்­க­வ­ரட்­டிய ஜும்ஆ பள்­ளி­வாசல் –நிக்­க­வ­ரட்­டிய

    *பென­டிக்­வத்த தக்­கியா– எஹத்­த­முல்ல– நாகொல்­லா­கொட

    *மாபா­கம தக்­கியா –பரம்­பொல– ஹல்­மில்­லா­வெவ

    *மொஹிதீன் ஜும்ஆ பள்­ளி­வாசல் –அச­ன­கொட்­டுவ –குறத்­தி­ஹேன

    புத்­தளம் மாவட்டத்தில் தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல்கள்

    *மஸ்ஜிதுன் நூர் –மைகுளம், சிலாபம்

    *நூர்வீதி ஜும்ஆ மஸ்ஜித்– புத்தளம் வீதி, சிலாபம்

    *மலாய் பள்ளிவாசல்– தர்காமாவத்தை, சிலாபம்

    கம்பஹா மாவட்டம்

    *மினுவங்கொட ஜும்ஆ பள்ளிவாசல்

    Read more »

    இலங்கை இனவாத தாக்குதல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அவதானம்

    கடந்த சில நாட்களாக இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அவதானம் செலுத்தியுள்ளன.இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதேவேளை குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்ததை வரவேற்பதாகவும், இலங்கையில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுமாறும் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் இதற்காக சரியான தலைமைத்துவம் அவசியமெனவும் வெறுப்பு, வன்முறைகளை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Read more »

    கையை வைத்ததுமே சொதப்பிய ரிஷாத்தின் பிரேரணை

    கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (16) சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரருக்கு சிறிலங்க சுதந்திர கட்சியின் ஒரு சிலருக்கு மட்டுமே இந்த பிரேரணைக்கான ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

    றித்த பிரேரணையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக 10 காரணிகள் காணப்பட்டதுடன், 64 உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

    இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள திகதி 2018.05.09 ஆகும். இதற்கமைய குறித்த பிரேரணை பெறுமதியற்றதாகும்.

    இதில் என்ன வேடிக்கையான விடயம் என்றால் கையொப்பமிட்ட 64 பேரின் கண்ணுக்கும் இது தெரியாமல் போனதே. இருப்பினும் இதுவும் ஒரு வகையில் நன்மையை அளித்துள்ளது. யார் யாருடைய உண்மையான அரசியல் தன்மை எப்படி என்று நம்மால் பார்வையிட கூடியதாக உள்ளது.

    எமக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் யுத்தம் மேற்கொள்ளவேண்டிய தேவை இல்லை. அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பெயரில் குற்றம் இருந்தாலும் அதற்க்கு இனி ஒன்றும் செய்ய இயலாது. குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை வீசிவிடவேண்டியது தான்.

    சிலவேளை இந்த நாட்டின் அரசியல் ஆட்டத்தில் இது தெரிந்தே விடப்பட்ட பிழையாக கூட இருக்கலாம்.

    இத்தகைய நாட்டிற்கு சஹ்ரான் தாக்குதல் நடத்தவில்லை என்றால் தான் புதுமை.< /p>

    Read more »

    தென் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் 314 ஆசிரியர் வெற்றிடங்கள்

    தென் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் நிலவும் 314 ஆசிரியர்கள் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு தென் மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
    நீண்டகாலமாக தென் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் நிலவிவந்த ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்திசெய்யும் முகமாக இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
    இந்நியமனங்களை இரண்டு மாதகாலத்தினுள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தென் மாகாண ஆளுநர் கீர்த்திதென்னகோன் தெரிவித்தார்.
    2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி தென் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு போட்டிப் பரீட்சைகள் நடாத்தப்பட்டாலும் அதில் சித்தியடைந்த தமிழ் மொழி மூல பட்டதாரிகளுக்கு இதுவரைநியமனம் வழங்கப்படவில்லை.
    இதனால் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்ததின் காரணமாக நீதிமன்றத்தினால் 2016.08.30தொடக்கம் தென் மாகாண தமிழ் மொழி ஆசிரிய நியமனங்களுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நியமனம் வழங்குவதற்கு தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலைமையினை கருத்திற் கொண்டு பாதிக்கப்பட்ட பட்டதாரிகளுடன் கலந்துரையாடிய தென் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கு புதிதாக 314 ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பங்களை கோரியுள்ளது. (Thinakaran)
    Read more »

    தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் கமல் மீது காலணி வீச்சு


    மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் நடிகர் கமல்ஹாசன் மீது செருப்பு வீசப்பட்டுள்ளது. செருப்பு வீசிய நபரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




    Read more »

    நோன்பு துறந்துவிட்டு சஹீத்தாக்கப்பட்ட 4 குழந்தைகளின் தந்தை, அதிர்ச்சியிலிருந்து மீளாத குடும்பம் - நடந்தது என்ன...?


    இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைச்சம்பவங்களின் தொடர்ச்சியாக நேற்று முன்தினமிரவு நாத்தாண்டியா பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டிருந்தார். அவரது ஜனாஸா நேற்று -14- படையினரின் பலத்த பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.


    படுகொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தையான 49 வயதான பௌஸல் அமீனின் குடும்பம் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாதவர்களாகவே உள்ளார்கள் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


    நாத்தாண்டிய கொத்தரமுல்ல பகுதியை சேர்ந்த பௌஸல் அமீன் அப்பிரதேசத்தில் அனைவருக்கும் நன்கு தெரிந்த தளவாடக்கடை உரிமையாளர். அவரது கடையில் ஐந்துக்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் பண ரீதியாக உதவிசெய்துவந்த அளவுக்கு பெருந்தன்மையுடைய வர்த்தகர் அவர் என்று அவருடன் தொடர்புடையவர்கள் கூறுகிறார்கள்.


    சம்பவம் இடம்பெற்ற அன்று திங்கள் மாலை - 6.20 மணியளவில் - நோன்பு துறந்துவிட்டு பௌசல் தனது குடும்பத்தினருடன் வீட்டிலிருந்த சமயம் தீடீரென்று அப்பிரதேசத்தில் தாக்குதல்களை மேற்கொண்டுவந்த இளைஞர் குழு பௌசலின் வீட்டு வளவினுள்ளேயும் புகுந்துள்ளார்கள். கற்களை வீசியும் ஜன்னல்களை உடைத்தும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். என்ன செய்வதென்று தெரியாது தனது நான்கு குழந்தைகளையும் அணைத்தவாறு தனது மனைவியுடன் வீட்டிற்குள்ளேயே இருந்திருக்கிறார் பௌசல்.


    அப்போது, வீட்டு வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பௌசலின் வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தி அதன் கண்ணாடிகளை அடித்து உடைத்திருக்கிறார்கள். வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தவர்கள்.


    அப்போதுதான், வெளியே ஓடிச்சென்ற பௌசல் தயவுசெய்து வாகனத்தை ஒன்றும் செய்துவிடவேண்டாம் என்றும் தங்களை விட்டுவிடும்படியும் கெஞ்சியிருக்கிறார். அச்சமயம், அவர் மீது பாய்ந்த கும்பல் தாம் கொண்டுவந்த வாளால் சரமாரியாக அவரது கழுத்திலும் முகத்திலும் வெட்டியிருக்கிறது. படுகாயமடைந்த பௌசல் நிலத்தில் விழுந்திருக்கிறார்.


    அப்போது அவரது வீட்டு வேலைத்தளத்திலிருந்த turpentine திரவப்பேணியை எடுத்து திறந்து அதிலிருந்து திரவத்தை படுகாயமடைந்து நிலத்தில் விழுந்து கிடந்த பௌசலின் முகத்தில் ஊற்றிவிட்டு அந்தக்கும்பல் அங்கிருந்து வெளியேறியிருக்கிறது.


    குடும்பத்தினர் உடனடியாக அவரை மாறவில வைத்தியசாலைக்கு கொண்டுசென்றார்கள். சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார்.


    தங்களது தந்தையின் இறப்பினை ஜீரணிக்கமுடியாத பௌசலின் நான்கு குழந்தைகளும் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. பௌசலின் நான்கு பிள்ளைகளும் ஆறு வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. SBS
    Read more »

    நேரலை சேவைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பேஸ்புக்

    நியூசிலாந்து – கிறிஸ்ட்சேர்ச் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் அதன் நேரலை சேவைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
    கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் கடந்த மார்ச் 1 ஆம் திகதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டை பயங்கரவாதிகள் பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக வெளியிட்டனர்.
    இதனையடுத்து, இணையத்தில் இதுபோன்ற வன்முறை செயல்கள் தொடர்பான நேரலைகளைக் கட்டுப்படுத்துமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
    இந்நிலையில், பேஸ்புக் பக்கத்தில் ஒருமுறை விதிமீறலில் ஈடுபடுவோருக்கு நேரலை செய்ய தற்காலிகத் தடை விதிக்கப்படும் என்று அந்நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
    மேலும், விதிமீறலின் தன்மைக்கு ஏற்றவாறு தடையின் காலம் நீடிக்கப்படலாம் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
    இந்த புதிய கட்டுப்பாடுகள் விரைவில் எல்லா நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இணையத்தில் பகிரப்படும் வன்முறை தொடர்பான காணொளிகளைத் தடை செய்வது குறித்து பாரிசில் உலகத் தலைவர்கள் சந்தித்துப் பேசவிருக்கும் நிலையில், பேஸ்புக் அதன் நேரலை விதிமீறல் கட்டுப்பாடுகள் குறித்து அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
    Read more »