களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி 6 பேர் பலி!

இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி 6 பேர் பலி!
களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 56 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் காயமடைந்த 56 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.
இவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று காலை 5.15 மணியளவில் எல்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் 3 பெண்களும் 3 ஆண்களும் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரியவருகிறது.
-Almashoora Breaking New
Read more »

தென் மாகாண ஆளுனருக்கு ஜனாதிபதி செயலாளரிடமிருந்து இராஜினாமா செய்யுமாறு கடிதம்

1963739951NISHANTHA-MUTHUHETTIGAMA

தென் மாகாண ஆளுனருக்கு இராஜினாமா செய்யுமாறு கோரி ஜனாதிபதியின் செயலாளர் கடிதம் ஒன்றை ஒப்படைத்துள்ளதாகவும், அவரை மாற்ற வேண்டாம் என ஜனாதிபதியிடம் தாம் கோரிக்கை விடுப்பதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
தென் மாகாணத்துக்கு பல ஆளுனர்கள் வந்துள்ளனர். ஆனால், இவரைப் போன்று தியாகத்துடன் இரவு பகலாக உழைத்த ஒருவரை நான் காணவில்லை. அவ்வாறான ஒருவரை ஆசிரியர் நியமனத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டொன்றின் பேரில் இடமாற்றம் செய்வது நியாயமான ஒன்றல்ல எனவும் முதுஹெட்டிகம எம்.பி. தெரிவித்துள்ளார்.  (மு)

சஜித்துக்கு கல்தா…..? ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக களம் குதிக்கிறார் கரு ஜெயசூரிய!!

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முட்டிமோதுகையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையைத் தானே முன்னின்று ஒழிப்பார் என்ற உறுதிப்பாட்டுடன் அந்தப் பணிக்கான பொது வேட்பாளராகத் தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரியவை இறக்குவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீட வட்டாரங்களில் ஓர் பொது இணக்க நிலை ஏற்பட்டிப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளன.இந்த சமரசத் திட்டத்துக்குச் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பச்சை சமிக்ஞையும் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவா அல்லது சஜித் பிரேமதாஸவா அல்லது கரு ஜயசூரியவா என்ற இழுபறி நீடிக்கும் நிலையில் – இந்தச் சர்சையை முடிவுக்குக் கொண்டுவரும் இணக்க ஏற்பாடாக கரு ஜயசூரியவின் பெயர் பிரேரிக்கப்பட்டிருக்கின்றது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையைக் குறுகிய காலத்தில் ஒழித்தல் என்ற கோட்பாட்டுடன் அதற்கான பொது வேட்பாளராகக் கரு ஜயசூரியவை இறக்குவது குறித்தே கட்சியின் உயர்மட்டத்தில் ஆராயப்படுகின்றது.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கும்போது நாட்டின் பிரதமருக்கே அதிக அதிகாரங்கள் கிட்டும். அப்படியான சூழலில் பிரதமராகப் பதவியில் இருப்பது நாட்டின் அரச தலைவர் பதவிக்கு ஒப்பானது என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.இதைக் கவனத்தில் எடுத்தே இந்தத் திட்டத்துக்குப் பிரதமர் ரணில் விக்கிரசிங்க பச்சை சமிக்ஞை காட்டியிருக்கின்றார் என்று கூறப்படுகின்றது.கரு ஜயசூரிய ஒரு வாக்குறுதியை அளிப்பாராயின், அரசியல் நிலைப்பாட்டுக்காக அதை அவர் மாற்றமாட்டார் என்ற பொது அபிப்பிராயம் பரவலாக இருப்பதாலும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான பொது வேட்பாளராக கரு ஜயசூரிய நிறுத்தப்படுவதற்கு சாதகமான நிலை, கட்சிக்குள் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகின்றது.ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுடன் எதிர்வரும் 5ஆம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட்டவுடன் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நேற்றுத் தெரிவித்திருந்தார். இந்தநிலையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான கரு ஜயசூரிய பொது வேட்பாளராகக் களமிறக்கப்படவுள்ளார் என்ற செய்தி கசிந்துள்ளது.இதேவேளை, புதிய அரசியல் கூட்டணி, ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் உட்பட, மேலும் சில விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக கட்சியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

உண்மையான தகவல்களை மறைத்து முறையற்ற வகையில் அரச நியமனம் பெறவிருந்த 104 பட்டதாரிகளுக்கு ஆப்பு

யாழ் அரச அதிபர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்..!
ஏற்கனவே அரச உத்தியோகத்தர்களாக கடமையாற்றிக் கொண்டு, வேலையற்ற பட்டதாரிகளிற்கான அரச நியமனத்திலும் உள்வாங்கப்பட்ட 104 பேர் சிக்கியுள்ளனர். ஏற்கனவே அரச பணியிலுள்ள விபரத்தை மறைத்து, பட்டதாரிகள் நியமனத்திலும் அவர்கள் அரச பணி பெற முயற்சித்துள்ளனர்.நாடு முழுவதிலுமுள்ள வேலையற்ற பட்டதாரிகள் 16 ஆயிரம் பேருக்கு இன்று (1) அரச நியமனம் வழங்கப்படுகிறது. யாழ் மாவட்டத்தில் 1,250 பட்டதாரிகள் இதில் நியமனம் வழங்கப்படுகிறது. இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளவர்கள் 104 பேர் ஏற்கனவே அரச உத்தியோகத்தர்களாக புரிவது கண்டறியப்பட்டுள்ளது என யாழ் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.யாழ் மாவட்டத்தில் 4ஆயிரத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். அவர்களில் 1250 பேருக்கே இன்று நியமனம் வழங்கப்படுகிறது.அரச உத்தியோகத்தர் ஒருவர், கடமையிலிருந்து கொண்டு இன்னொரு அரச நியமனத்தை பெறுவது தண்டனைக்குரிய குற்றம். முன்பு பணியாற்றும் அரச தொழிலை மறைத்து புதிய தொழிலை பெற்றமை கண்டறியப்பட்டால் அவர் உடனடியாக பதவியிழப்பார். இரு அரச பதவிகளுமே இழக்கப்படும். முதல் அரச பணியாற்றிய காலத்தில் பெற்ற சம்பளம் முழுவதும் மீளச் செலுத்தப்பட வேண்டும் என யாழ் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.ஏற்கனவே பதவியில் இருந்து கொண்டு, இன்று நியமனம் பெற முயற்சித்த 104 பேரும், இன்றைய நியமன பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

புர்கா ஆடைகளுக்கு நிரந்தரத் தடை

முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா ஆடைகளை  நிரந்தரமாக தடை செய்யக் கோரும் அமைச்சரவைப்பத்திரம் ஒன்று அமைச்சரவையில் இன்றுசமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள இதற்கான பத்திரத்தைக் இன்று (செவ்வாய்க்கிழமை) கையளித்துள்ள நிலையில், அடுத்த கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலையடுத்து முகம் மூடும் வகையிலான ஆடைகள் அணிவதற்கு தடை விதிப்பதாக தெரிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த தடையை தற்போது நிரந்தரமாக்கும் முயற்சியின் அடிப்படையாக இவ் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் விமான விபத்து; 18 பேர் உயிரிழப்

பாகிஸ்தானில் இராணுவத்தினருக்கு சொந்தமான சிறிய ரக விமானமொன்று விபத்திற்குள்ளானதில், 18 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான், ராவல்பிண்டிக்கு அருகில் மக்கள் குடியிருப்பு பகுதியிலேயே குறித்த விமானம் இன்று அதிகாலை விபத்திற்குள்ளானதாக, வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்விமானம் விபத்திற்குள்ளாக முன்னதாக வெடித்துள்ளதாக, சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 05 விமானப் பணியாளர்கள் மற்றும் 13 பொதுமக்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

பாறையில் மோதி விபத்துக்குள்ளான கப்பலை பிரித்து அகற்ற தீர்மானம்

காலி றூமஸ்ஸல்ல பிரதேசத்தில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கடலில் பாறையில் மோதி விபத்துக்குள்ளான கப்பலை பாகங்களாக பிரித்து அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் தர்ணி பிரதீப்குமார தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பலை சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து அகற்றுவதற்கு ஒரே ஒரு வழி இந்த நடைமுறையே ஆகும் என குறிப்பிட்டுள்ள அவர், கப்பலை அகற்றிக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி கடல் பிரதேசங்களில் நிலவும் இயற்கை தன்மையினால் கப்பலை அங்கிருந்து அகற்ற முடியாதிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட நிறுவனம் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் அந்த கடல் பிரதேசத்தின் பௌதீக அமைப்பு மற்றும் கடல் தன்மையின் அடிப்படையில் கப்பலை அகற்றுவது சிக்கலான விடயமாகவுள்ளது. இதற்கு திட்டமிட்ட நடவடிக்கையினை மேற்கொள்வது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)
Read more »