ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலியினால் 2 வர்த்தக நிலையங்களுக்கு சேதம்.

நாவுலவிலுள்ள இராணுவ முகாமில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்து
கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலியினால் எழுந்த அதிக காற்றுக் காரணமாக இரண்டு கடைகள் சேதமடைந்துள்ளன.

குறித்த ஹெலிக்கொப்டர் மேலெழுந்தபோது அதன் விசிறிகளிலிருந்து எழுந்த பலத்த காற்றின் காரணமாகவே சேதம் ஏற்பட்டுள்ளது.
நாவுல பொத விளையாட்டு மைதானத்துக்கு அருகிலிருந்த இரண்டு வர்த்தக நிலையங்களே இவ்வாறு சேதமடைந்துள்ளன.

இன்று (16) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது ஒரு வர்த்தக நிலையத்தின் கூரைப் பகுதி முற்றாக உடைந்து கீழே வீழ்ந்துள்ளது. Metro
Read more »

காணாமல் போய், தானாக திரும்பி வந்த கப்பல்! 90 வருடங்களுக்கு பின்னர் அதிசயம்

1925 ஆம் ஆண்டு, நவம்பர் 29 ஆம் திகதி, தெற்கு கரோலினாவின் சார்ள்ஸ்டனில் இருந்து கியூபாவின் ஹவானாவை நோக்கி பயணிக்கத் தொடங்கியது -எஸ்.எஸ்.கொடபக்சி (SS Cotopaxi) என்ற கப்பல். அதாவது 'சாத்தான் முக்கோணம்' என்று அழைக்கப்படும் பெர்முடா முக்கோணத்தின் வழியாகச் சென்றது எஸ்.எஸ் கொடபக்சி.

பெர்முடாவில் இருந்து மியாமி, பின் ஃப்ளோரிடாவில் இருந்து புவேர்ட்டோ, ரிக்கோவின் சாண் ஜுவன் ஆகிய பிரதேசங்களை இணைத்தால் உண்டாகும் பகுதி தான் பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle). மர்மமான சாத்தான் முக்கோணத்தின் ஒரு புள்ளியான ஃப்ளோரிடாவை கடந்துதான் எஸ்.எஸ். கொடபக்சி ஹவானாவை அடைய முடியும்.

ஆனால், அந்தக் கப்பல் ஹவானாவை சென்றடையவில்லை. புறப்பட்ட இரண்டாவது நாளிலேயே எஸ்.எஸ். கொடபக்சி காணமல் போனது, அதன் பின்பு அந்தக் கப்பல் பற்றிய தகவலே இல்லை.அக்கப்பல் மட்டுமன்றி, 2340 தொன் எடையுள்ள நிலக்கரியுடன் கப்டன் டபிள்யூ.ஜே.மெயர் தலைமையில் பயணித்த 32 மாலுமிகள் பற்றிய எந்த விதமான தகவலும் இல்லை.

சமீபத்தில் கியூபா கடலோர காவல் படையினர், தடை செய்யப்பட்ட இராணுவ பகுதியின் வழியாக ஒரு கப்பல் தீவை நோக்கி வருவதைக் கண்டுள்ளனர். அதைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்து, பயன் அளிக்காததைத் தொடர்ந்து, அதன் அருகே சென்று பார்த்த போதுதான் அது 90 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன எஸ்.எஸ். கொடபக்சி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து பெர்முடா முக்கோணத்தில் காணாமல் போன மிகப் பெரிய கப்பல்களில் ஒன்றான எஸ்.எஸ். கொடபக்சி, ஒரு நாடோடி போல இத்தனை ஆண்டுகளாக பெர்முடா முக்கோணத்துடன் இணைந்தே கிடந்துள்ளது என்றும் திரும்பி வந்த கப்பலில் ஒருவரும் இல்லை என்றும், அந்தக் கப்பல் கைவிடப்பட்ட நிலையில்தான் இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அக்கப்பலை ஆராய்ந்து பார்த்ததில் கப்டனின் ​ெலாக் புக் (Log book) எனப்படும் குறிப்பு எழுதும் நோட்டுப் புத்தகம் கிடைத்துள்ளது. ஆனால், அந்த குறிப்புப் புத்தகத்தில் கடந்த 90 ஆண்டுகளாக எஸ்.எஸ். கொடபக்சி கப்பலுக்கும், அதில் பயணித்த 33 பேருக்கும் என்ன நடந்தது என்பது பற்றிய ஒரு தகவலும் கிடைக்கப் பெறவில்லை.கப்டனின் குறிப்புப் புத்தகம் உண்மையானது தான் என்றும், சரியாக 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் திகதி முதல் கப்டன் கப்பல் பயணம் பற்றிய குறிப்பு எழுதுவதை நிறுத்திக் கொண்டுள்ளார் என்றும் கியூபா நாட்டு வல்லுநரான ரோடோல்போ சல்வடோர் க்ருஸ் நம்புகிறார்.

க்யூபா நாட்டு அரசாங்கம்,இக்கப்பல் காணமல் போனது ஏன்?திரும்பி கிடைக்கப் பெற்றது எப்படி? என்பது பற்றிய விசாரணையை தொடங்கியுள்ளது.

இதுபோன்று கப்பல்கள் காணமல்போகும் நிகழ்வுகள் வணிக ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க இக்கப்பல் மீதான ஆய்வு மிகவும் அவசியமென்று கியூபா நாட்டு அதிகாரிகள் கருத்துக் கூறியுள்ளனர்.

பெர்முடா முக்கோணத்தில் உள்ள மர்மங்களும், அங்கு ஏன் அறிவியலும் தொழில்நுட்பமும் செயலிழந்து போகின்றன என்பதும் இதுவரை கண்டறியப்படாதவையாகவே உள்ளன.
Read more »

233 பயணிகளுடன் விமானம் வானில் பறக்கும் போது பறவை மோதியதால் விமானத்தில் ஏற்பட்ட தொழிநுற்ப கோளாறு . சோள பயிர்செய்கையில் தரையிறக்கி ஏற்பட இருந்த பாரிய விபத்து தடுக்கபட்டது

ரஷ்யாவின் சுகோவ்ஸ்கி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 233 பேருடன் பயணித்த போயிங் 321 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன்  என்ஜினில் பறவை மோதியதில் கடுமையான தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

 விமானம் ஜுகோவ்ஸ்கி சர்வதேச விமான நிலையத்திற்கு விமானத்தை திரும்பப் பெற முயன்றார், ஆனால் அவசரநிலை ஏற்பட்டதால், அவர் அருகிலுள்ள சோள பண்ணையில் அவசர அவசரமாக தரையிறக்கியுள்ளார்.

 இந்த விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர், மற்றவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று அந்த நாட்டு செய்தி ஊடகம்  தெரிவித்துள்ளது.

 அவசர தரையிறக்கம் செய்யாவிட்டால் விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கக்கூடும், மேலும் விமானியின் புத்தி கூர்மை ஒரு பெரிய உயிர் இழப்பைத் தடுத்திருந்தது

 2009 ஆம் ஆண்டில் ஒரு விமானம் அமெரிக்க ஒரு விமானம்  பறவை  இயந்திரத்துடன் மோதிய பின்னர் விமானத்துடன் ஹட்சன் ஆற்றில்  தரையிறக்கப்பட்டது இந்த சம்பவத்திற்கு ஒத்தான  சம்பவம் இதுதான் என்று சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read more »

மக்களை குழப்புகின்ற கேள்வி

இலங்கையின் தேசிய அரசியல் களம் தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இவ்வருட இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தலும் ஜனாதிபதித் தேர்தலும் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

ஆனாலும் எந்தத் தேர்தல் முதலில் நடத்தப்படும் என்பது தொடர்பில் அபிப்பிராய பேதங்கள் நிலவுகின்றன. பிரதான தேசியக் கட்சிகளில் சில ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து காய்களை நகர்த்திக் கொண்டிருக்கும் அதேவேளையில், இன்னும் சில கட்சிகள் மாகாண சபைத் தேர்தலை எதிர்பார்த்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற கட்சிகள் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றன.

ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் அதிக அக்கறை செலுத்தியுள்ளார். அதாவது இலங்கையிலுள்ள 9 மாகாணங்களில் ஊவா மாகாணத்தைத் தவிர ஏனைய மாகாண சபைகளின் பதவிக் காலம் நிறைவுற்று பல மாதங்கள் கடந்து விட்ட போதிலும், இன்னும் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாதுள்ளன.

'மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படாதிருப்பது மக்களின் ஜனநாயக உரிமையை மீறும் செயலென ஜனாதிபதி ஏற்கனவே சுட்டிக்காட்டியிருப்பதோடு மாகாண சபைத் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாகவுள்ளார்.

இதனை அடிப்படையாகக் கொண்டுதான், மாகாண சபைகளுக்கான தேர்தலை மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வர முன்னர் நடத்தமுடியுமா என்பது தொடர்பில் உச்ச நீதிமன்றத்திடம் வினவி ஜனாதிபதி 'பொருள் கோடல் மனுவொன்றை (Refrence of Application – ஆற்றுப்படுத்துகை விண்ணப்பம்) அரசியலமைப்பின் 129(1) ஷரத்தின் பிரகாரம் சமர்ப்பித்திருக்கின்றார். இது தொடர்பில் ஓகஸ்ட் மாதம் 23ம் திகதி முழுமையான நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணை நடாத்தப்பட்டு இம் மாதம் 30ஆம் திகதிக்குள் உச்சநீதிமன்றத்தின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவிருக்கிறது.

இதேவேளை, சுதந்திர தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, 'சட்டத்திற்கமைய மாகாண சபைகளுக்கான தேர்தல் தான் முதலில் நடாத்தப்பட வேண்டும். அதற்குத் தேர்தல் ஆணைக்குழு தயாராகவுள்ளது. அதேநேரம் செப்டம்பர் மாதம் மூன்றாம் வாரமளவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்புக்கு தயாராக வேண்டும். அதுவரையில் ஜனாதிபதித் தேர்தல்தான் நடத்தப்படும் என்று உறுதியாகக் கூற முடியாது. ஆனால் ஜனாதிபதித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தவும் நாம் தயாராகவுள்ளோம். அதேபோன்று பொதுத் தேர்தல் நடத்தவும் தயாராகவே இருக்கின்றோம்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தேர்தல் ஆணையாளரின் இந்த அறிவிப்பும் எந்தத் தேர்தல் முதலில் நடத்தப்படும் என்பதை உறுதியாக கூற முடியாத நிலையையே வெளிப்படுத்தி நிற்கிறது.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மக்கள் விடுதலை முன்னணி போன்ற தேசியக் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஏனெனில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுமாயின் அத்தேர்தல் முடிவுகள் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் தாக்கம் செலுத்தும். அதனைத் தவிர்ப்பதற்காகவே பிரதான தேசிய அரசியல் கட்சிகள் சில ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடாத்தப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுகின்றன.ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து அரசியல் கூட்டணிகளை அமைப்பதற்கான முயற்சிகளிலும் தீவிரம் காட்டுகின்றன.

அந்தடிப்படையில் ஐ.தே.க தம்முடன் ஏற்கனவே கூட்டணி அமைத்துள்ள கட்சிகளுடனும் ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளையும் சந்திப்புக்களையும் நடாத்தி வருகின்றது. இந்தச் சூழலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 'இம்மாத இறுதிக்குள் ஐ.தே.க. தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அமைக்கப்படும்' என்றும் 'அதனைத் தொடர்ந்து இம்முன்னணியின் ஜனாதிபதி அபேட்சகர் அறிவிக்கப்படுவார்' என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் ஐ.தே.க. பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச பதுளையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு 'ஐ.தே.கவின் ஜனாதிபதி அபேட்சகர் தானேயென்றும், தான் இத்தேர்தலில் போட்டியிடுவது உறுதியென்றும் அறிவித்திருக்கிறார்.

இவை இவ்வாறிருக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த 11 ஆம் திகதி சுகததாஸ விளையாட்டரங்கில் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்தி ஜனாதிபதித் தேர்தலுக்கான தமது அபேட்சகரை அறிவித்திருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணி எதிர்வரும் 18 ஆம் திகதி காலிமுகத்திடலில் நடத்தும் பொதுக்கூட்டத்தில் தங்களது ஜனாதிபதி அபேட்சகரை அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு இலங்கையின் அரசியல் களம் தேர்தல்களை நோக்கி மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது. அதனால் இவ்வருட இறுதிக்குள் நிச்சயம் தேர்தல் நடாத்தப்படும். ஆனால் அது- எந்தத் தேர்தல் என்பதுதான் தற்போது மக்களை குடைந்தெடுக்கும் வினாவாக உள்ளது. அதற்கான பதிலை அடுத்துவரும் சில தினங்களில் தெரிந்து கொள்ள முடியும்.

இலங்கையின் தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்து நாட்டு மக்கள் மாத்திரமல்லாமல் வெளிநாடுகளும் கூட அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
Read more »

கிராண்ட்பாஸ் கத்திக்குத்து; பாதாள குழு உறுப்பினர் பலி

மாதம்பிட்டி மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (15) பிற்பகல் 4.00 மணியளவில் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறித்த பகுதியில் முச்சக்கரவண்டியில் வந்த நபர்களினால் இருவர் மீது கூரிய ஆயுதம் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, படுகாயமடைந்த குறித்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில், 'ஆனமாலு ரங்க' எனும் 39 வயது பாதாள குழு உறுப்பினர் ஒருவரும் 22 வயதான மற்றொருவருமேமரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
Read more »

தமிழர்களின் ஆதரவின்றியே தேர்தலில் வெல்லுவேன் - கோத்தா உறுதியான நம்பிக்கை

தமிழ் மக்களின் ஆதரவு தேவையில்லை. அவர்களின் வாக்குகள் இல்லாமலேயே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவேன் எனத் தெரிவித்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, தமிழ்க் கூட்டமைப்பை சந்திக்க ஆர்வமாக உள்ளதாகவும் 13 ஆவது திருத்தமே தீர்வு எனவும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படும் கோத்தாபய ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தனை கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்து 40 நிமிடங்கள் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பு கோத்தாபய ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்றது. கோத்தாபய மற்றும் சித்தார்த்தனைத் தவிர வேறு எவரும் இதில் பங்கேற்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வது கஷ்டமாக இருக்கும் என்றும், மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக்கொண்ட 75 ஆயிரம் வாக்குகளை அண்மித்தே உங்களுக்கும் (கோத்தாபாய ) வாக்குகள் கிடைக்கும் என்று சித்தார்த்தன் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தொடர்பில் கோத்தாபய இதன்போது கருத்து வெளியிட்டுள்ளார். கட்சி தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்துடனேயே கதைக்கவேண்டும் என்று சித்தார்த்தன் பதிலளித்துள்ளார். அவரைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகக் கோத்தாபய குறிப்பிட்டதுடன், அவர் சந்திப்பாரா? என்று கேள்வி எழுப்பியதாகவும் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 4 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார் என்பதைச் சுட்டிக்காட்டும் கோத்தாபய, அந்த வாக்குகளை சிங்களப் பகுதியிலேயே பெற்று விடுவேன் என்று தெரிவித்தாகவும், தமிழ் மக்களின் வாக்குகள் தனது வெற்றிக்குத் தேவையில்லை என்று குறிப்பிட்டதாகவும் சித்தார்த்தன் தெரிவித்தார்.

ஆனாலும், இலங்கை முழுவதிலிருந்தும் தனக்கு வாக்குகள் கிடைக்கப்பெற்றால்தான் சர்வதேச சமூகம் இலங்கையின் ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ளும் என்றும் கோத்தாபய இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 80 சதவீதமான மக்கள் வாக்களித்திருந்தாலும் இப்போது அதே எண்ணிக்கையிலான மக்கள் வாக்களிப்பது சந்தேகம் என்றும், மக்கள் எல்லோரிலும் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்றும் கோத்தாபயவுக்கு எடுத்துரைத்தாக சித்தார்த்தன் தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு உருவாக்கப்படாது என்று கோத்தாபய தெரிவித்தார். புதிய அரசமைப்பை யாரும் நிறைவேற்றுவார்கள் என்று நம்பவில்லை என கோத்தாபயவுக்குச் சுட்டிக்காட்டினேன் என்று கூறினார் சித்தார்த்தன்.

13 ஆவது திருத்தத்தில் பல விடயங்கள் இருக்கின்றன எனவும், பொலிஸ் அதிகாரம் வழங்கினாலும் முழுமையான பொலிஸ் அதிகாரம் வழங்க முடியாது எனவும் கோத்தாபய கூறியதாக சித்தார்த்தன் தெரிவித்தார்.

காணி அதிகாரத்தை மாகாணங்களுக்கு வழங்க முடியாது என்பதில் கோத்தாபய உறுதியாக இருப்பது அவரது பேச்சில் தெரிந்தது. அதற்கு அவர் கடந்த காலத்தில் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன் பெரிய முதலீடு ஒன்றைத் தடுத்ததை உதாரணமாகச் சுட்டிக்காட்டியதாகவும் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.

மேலும், அரசியல் விடயங்களை எம்.ஆர். (மஹிந்த ராஜபக்ஷ ) பார்த்துக் கொள்ளுவார் என்று கோத்தபாய தனது சந்திப்பில் கூறியதாக சித்தார்த்தன் தெரிவித்தார்.

தமிழ் அமைச்சர்களும் வரவேண்டும், முஸ்லிம்கள் அமைச்சுப் பதவிகளை எடுத்து எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கின்றார்கள். அதனைப்போன்று தமிழ் மக்களும் முன்னேற வேண்டும் என்று கோத்தாபய கூறியதாகவும் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உற்பட 19 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதல் வருட மாணவியை ருஹுனு பல்கலைக்கழகத்தில்  பாலியல் வன்கொடுமை செய்த ரூஹுனு பல்கலைக்கழகத்தின் 19 சந்தேக நபர்களை மாத்தறை தலைமை நீதவான் இசுரு நேதிகுமாரா எதிர்வரும் 19 திகதிவரை ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டார்

பாலியல் பலாத்காரம் என்ற சந்தேகத்தின் பேரில் சந்தேக நபர்களை மாத்தறை தலைமையக போலீசார் ஆஜர்படுத்தினர்.
சந்தேக நபர்கள் ரிமாண்ட் செய்யப்பட்ட பின்னர், சிறைச்சாலைக்குள் செல்ல முன்பு சிறைச்சாலையில் இருந்த ஒரு மாணவர் நோய்வாய்ப்பட்டிருந்ததால் சிறை அதிகாரிகள்
உடனடியாக 1990 ல் ஆம்புலன்சில் மாணவரை மாத்தறை பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சிறை அதிகாரிகளின் பாதுகாப்பில் மாணவர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கம்பாஹா பிரதேசத்தை சேர்ந்த சபராகமுவகே பல்கலைக்கழக மாணவர் உதயங்கா (22), தமது ரூஹுனு பல்கலைக்கழக நண்பரின் விடுதியில் தங்கி இருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

மாணவர் விடுதிக்குள் பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதால் சந்தேக நபர்களை ரிமாண்ட் செய்ய வேண்டும் என்றும் காவல்துறை கோரியது.

அதன்படி மாத்தறை தலைமை நீதவான் இசுரு நெத்திகுமாரா 19 சந்தேக நபர்களையும் ரிமாண்ட் செய்தார்.
சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் மாணவர், முதலில் தனது துன்புறுத்தல் குறித்து ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டு பின்னர் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைத்தார்.

அதன்படி, மாணவர்களை கைது செய்ய காவல்துறை சிறப்பு விசாரணையை ஆரம்பித்து வருகின்றனர்

கபீர் மற்றும் சாகல கோத்தாபய ராஜபக்‌ஷவை சந்தித்தது ஏன் ? ஐக்கிய தேசிய கட்சி குழு கூட்டத்தில் நவீன் கேள்வி

ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் மற்றும் பிரதமரின் மிக நெருங்கிய சகா அமைச்சர் சாகல ரத்நாயக ஆகியோர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவை சந்தித்தது ஏன் என இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி குழு கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இன்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி குழு கூட்டத்தில் நவீன் திஸாநாயக இது தொடர்பில் வினவியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் கபீர் தான் சுகயீனமுற்றிருந்த போது கோத்தாபய ராஜபக்‌ஷ தன்னை வந்து நலம் விசாரித்ததாகவும். அவர் சுகயீனமுற்று தற்போது நாடு திரும்பியுள்ள நிலையில் அவரின் நலம் விசாரிக்கவே அங்கு சென்றதாக கூறியுள்ளார்.

அப்போது அங்கு சாகல ரத்நாயகவும் வந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதன் போது குறுக்கிட்ட சாகல “ என்ன இருந்தாலும் நாம் அனைவரும் மனிதர்கள் தானே” என கோத்தாபயவை சந்தித்ததை நியாயப்படுத்தி கருத்து வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மலையகத் தமிழர் வென்ற சர்வதேசப் பதக்கம்: டீ கோப்பை பரிசளித்த இலங்கை அரசு

Image captionமாதவன் ராஜகுமாரன்

இலங்கையிலுள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளி மகனான மாதவன் ராஜகுமாரன் சர்வதேச உடற்கட்டழகுப் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார்.

சீனாவில் நடைபெற்ற 53ஆவது ஆசிய உடற்கட்டழகர் போட்டியில் பங்கு பெற்று வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார் இவர்.

நுவரெலியா மாவட்டத்தின் லபுக்கலை பகுதியைச் சேர்ந்த இவர், தனது 15ஆவது வயது முதல் உடற்கட்டழகர் போட்டிக்காக தன்னை தயார்படுத்தியுள்ளார்.

பல்வேறு உடற்கட்டழகர் போட்டிகளில் பங்கேற்ற மாதவன் ராஜகுமாரன், இதுவரை 10 பதக்கங்களை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

இதில் இரண்டு சர்வதேச பதக்கங்களும் உள்ளடங்குகின்றன.
2015 - மத்திய மாகாண உடற்கட்டழகர் போட்டி - வெள்ளிப்பதக்கம்
2015 - அகில இலங்கை பாடசாலை மட்ட உடற்கட்டழகர் போட்டி - தங்கப்பதக்கம்
2015 - மத்திய மாகாண 55 கிலோகிராம் எடை பிரிவின் கீழ் உடற்கட்டழகர் போட்டி - தங்கப்பதக்கம்
2016 - அகில இலங்கை பாடசாலை மட்ட உடற்கட்டழகர் போட்டி - தங்கப்பதக்கம்
2016 - அகில இலங்கை 23 வயதுக்கு உட்பட்ட உடற்கட்டழகர் போட்டி - தங்கப்பதக்கம்
2016 - தேசிய மட்ட 55 கிலோகிராம் எடை பிரிவின் கீழ் உடற்கட்டழகர் போட்டி - தங்கப்பதக்கம்
2017 - அகில இலங்கை 23 வயதுக்கு உட்பட்ட உடற்கட்டழகர் போட்டி - தங்கப்பதக்கம்
2017 - தேசிய மட்ட 60 கிலோகிராம் எடை பிரிவின் கீழ் உடற்கட்டழகர் போட்டி - தங்கப்பதக்கம்
2018 - தெற்காசிய உடற்கட்டழகர் போட்டி (நேபாளம்) - தங்கப்பதக்கம்
2019 - ஆசிய உடற்கட்டழகர் போட்டி (சீனா) - வெண்கலப் பதக்கம்

உடற்கட்டழகர் விளையாட்டை தேர்வு செய்வதற்கான காரணம் என்ன என பிபிசி தமிழ், மாதவன் ராஜகுமாரனிடம் கேட்டது. ''நான் அதிகளவில் எல்லா விளையாட்டும் விளையாடுவேன். அதற்கு உடல் பலம் தேவைப்பட்டது. அதை செய்ய ஜிம் சென்றேன். அப்படியே உடல் பலமாகியது. மத்திய மாகாண ஆணழகன் போட்டியில் முதலாவதாக வெற்றி பெற்றேன். அதில் இருந்தே நான் இதே விளையாட்டை எடுத்துக்கொண்டேன்" என்று அவர் தெரிவித்தார்.

சர்வதேச உடற்கட்டழகர் போட்டியில் பங்கு பெற வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என கூறிய அவர், அந்த போட்டிகளிலும் வெற்றி பெற்று நாட்டிற்கும், மலையகத்திற்கும் பெருமை சேர்ப்பதாக நம்பிக்கை வெளியிட்டார்.

மலையகத்தில் மரக்கறி தோட்டமொன்றில் நாள் சம்பளத்தில் ராஜகுமாரனின் பெற்றோர் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சர்வதேச உடற்கட்டழகர் போட்டியில் பங்குபெற்று வெற்றிக் கொள்வதற்கான நம்பிக்கை தனக்கு காணப்படுகின்ற போதிலும், அதற்கான பண வசதிகள் தன்னிடம் கிடையாது என அவர் கவலை தெரிவிக்கின்றார்.

சர்வதேச போட்டிகளில் பங்கு பெறுவதற்கு யாரேனும் உதவிகளை வழங்க முன்வந்தால், தான் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறுவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
விளையாட்டுத்துறை அமைச்சின் தேநீர் கோப்பை பரிசு

சீனாவில் நடைபெற்ற 53ஆவது ஆசிய உடற்கட்டழகர் போட்டியில் பங்கு பெற்று இலங்கைக்கு பெருமை சேர்ந்த மாதவன் ராஜகுமாரனுக்கு விளையாட்டுத்துறை அமைச்சு தேநீர் அருந்தும் கோப்பையொன்றை பரிசாக வழங்கியுள்ளது.

இந்த விடயம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரியொருவர் தன்னை அமைச்சுக்கு அழைத்து இந்த தேநீர் அருந்தும் கிண்ணத்தை வழங்கியதாக மாதவன் ராஜகுமாரன் தெரிவித்தார்.