இல்லற வாழ்வில் பெண்ணுக்குரிய உரிமைகள்


இல்லற வாழ்வில் பெண்ணுக்குரிய அனைத்த உரிமைகளையும் இஸ்லாம் நிறைவாக வழங்கியுள்ளது. ஆரம்பமாக தனது வாழ்க்கைத் துணைவனை தெரிவு செய்யும் உரிமையை அது பெண்ணுக்கு வழங்கியுள்ளது.

'ஒரு விதவையை அவளது முடிவு பெறப்படாமல் திருமணம் செய்து வைத்தலாகாது. கன்னிப் பெண்ணையும் அவளது சம்மதத்தைப் பெறாமல் திருமணம் செய்து வைக்கக் கூடாது' என்பது நபியவர்களின் கட்டளையாகும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியபோது 'அல்லாஹ்வின் தூதரே அவளது சம்மதம் எப்படி பெறப்படல் வேண்டும்' என ஸஹபாக்கள் வினவியபோது நபி (ஸல்) அவர்கள் 'அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்றார்கள்' (புகாரி, அஹ்மத்)

'ஒரு விதவை அவளது பொறுப்புதாரியை (வலி) விட அவளது விவகாரத்தைத் தீர்மானிக்கக் கூடிய அருகதையும் தகுதியும் உடையவளாவாள். ஒரு கன்னிப் பெண்ணைப் பொறுத்த வரையில் அவளது சம்மதம் கோரப்படல் வேண்டும். அவளது மௌனமே அவளது சம்மதமாகும்' (முஸ்லிம், திர்மிதி, நஸாஈ) என்ற நபிமொழியும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஹன்ஸா பின்த கிதாம் அல்அன்ஸாரியா என்ற விதவைப் பெண்ணை அவளின் தந்தை அவளது விருப்பத்திற்கு மாற்றமாக ஒருவருக்கு மணம் முடித்து வைத்தார். அப்பெண் இது பற்றி நபியவர்களிடம் முறைப்பாடு செய்யவே அன்னார் அத்திருமணத்தை செல்லுபடியற்றதாக ஆக்கினார்கள். (புகாரி, திர்மிதி, இப்னு மாஜா)

மற்றொரு சந்தர்ப்பத்தில் ஒரு கன்னிப் பெண் நபியவர்களிடம் வந்து தனது தந்தை தனது விருப்பத்திற்கு மாற்றமாக தன்னை ஒருவருக்கு மணம் முடித்து வைத்துள்ளதாக முறைப்பட்டாள். இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அத்திருமணத்தை அந்தப் பெண்ணின் தெரிவிற்கு விட்டார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா)

மேற்கண்ட ஹதீஸ்கள், தான் விரும்பாத – தனக்கு திருப்தி இல்லாத ஒருவரை மணம் முடித்து வைக்க வலி| முனைகின்ற போது அதனை மறுக்கின்ற – நிராகரிக்கின்ற உரிமை ஒரு பெண்ணுக்கு உண்டு என்பதைக் காட்டுகின்றன. உண்மையில் தகப்பனோ அல்லது வலி| ஆக இருப்பவரோ ஒரு பெண்ணை அவள் விரும்பாத ஓர் ஆணுக்கு நிர்ப்பந்தித்து மணம் முடித்துக் கொடுக்கும் உரிமையைப் பெற்றவர் அல்ல.

ஏலவே திருமணம் முடித்து பின்னர் விதவையான ஒரு பெண்ணைப் பொறுத்தவரையில் அவள் திருப்தி காணாத ஒருவருக்கு அவளை மணம் முடித்து வைப்பதற்கு எவருக்கும் எந்த உரிமையோ அதிகாரமோ இல்லை என்பது இமாம்களின் ஏகோபித்த நிலைப்பாடாகும். வயது வந்த ஒரு கன்னிப் பெண்ணைப் பொறுத்தவரையிலும் அவளையும் குறிப்பிட்ட ஓர் ஆணை மணம் முடிக்க நிர்ப்பந்திக்க முடியாது என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். பருவ வயதை அடைந்த ஒரு கன்னிப் பெண்ணின் செல்வத்தை அவளது அனுமதியின்றி கையாள்வதற்கு அவளது தந்தைக்கோ மற்றொருவருக்கோ அனுமதியில்லை என்பது முடிவான கருத்தாகும்.

Read more »

புவியின் உயிர் வாழ்வை அழித்து விடுமா அமேசன் தீ?


பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் போல்சொனாரோ 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் பதவிக்கு வந்த பின்னர், மரங்களின் அழிவு உச்சத்தை எட்டியது. அமேசன் காடுகள் குறித்து பல்வேறு தகவல்களை நாம் கடந்து வந்திருப்போம். பாடநூல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் வரை அமேசன் தொடர்பான ஏதோ ஒன்று, நம் கண்ணில் தவறாமல் தென்படும். பல்வேறு சிறப்புகளைத் தன்னுள் கொண்டிருக்கும் அமேசன் மழைக் காடுகள் கடந்த 3வாரங்களாகப் பற்றியெரிந்து கொண்டிருக்கின்றன.

கோடை காலங்களில் கூட, அமேசன் மழைக்காடுகளில் அத்தனை எளிதில் தீ விபத்து ஏற்பட்டு விடாது. அங்கு நிலவி வரும் ஈரப்பதம் அதற்கு முக்கியமான காரணம். உலகின் மிகப் பெரிய காடாக அமேசன் அறியப்படுகிறது. சுமார் 5.5மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. லத்தீன் அமெரிக்காவின் சுமார் 40சதவீத பகுதியை இந்தக் காடு கொண்டுள்ளது.

மேலும் இந்த மழைக்காடுகள் சுமார் 9நாடுகளில் பரந்து விரிந்து இயற்கையான பசுமைப் போர்வையாக விரிந்திருக்கின்றன. பொலிவியா, பிரேசில், கொலம்பியா, ஈகுவேடார், பிரெஞ்ச், கயானா, பெரு, சுரிநேம், வெனிசூலா ஆகிய நாடுகளில் அமேசன் காடு படர்ந்து காணப்படுகிறது. 60சதவீத அமேசான் காடு பிரேசில் நாட்டில் இருக்கிறது. பிரேசிலில்தான் தற்போது காட்டுத் தீ கடுமையாகப் பரவி வருகிறது.

அமேசன் மழைக்காடுகளை பல்லுயிர் சரணாலயம் என்றும் அழைக்கிறார்கள். பூமியில் இருக்கும் இனங்களில் 4-இல் ஒரு பங்கை தன்னுள் கொண்டுள்ளது இந்த அமேசன். உலகில் அறியப்பட்ட பத்தில் ஒரு உயிரினம் அமேசன் மழைக்காடுகளில் உள்ளது. சுமார் 30,000வகையான செடிகள், 2,500வகையான மீன்கள், 1,500பறவைகள், 500பாலூட்டிகள், 550ஊர்வன மற்றும் 2.5மில்லியன் பூச்சிகள் இருப்பதாக Amazon Cooperation Treaty Organization அமைப்பு கூறுகிறது. கடந்த 20ஆண்டுகளில் மட்டும் 2,200புதிய தாவர இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று இம்மழைக்காடுகளில் வசிக்கின்றன.

பலரும் அறிந்த அமேசானின் மற்றொரு பெயர் `பூமியின் நுரையீரல்’. உலகின் மொத்த ஒக்சிஜன் உற்பத்தில் சுமார் 20சதவீதத்துக்கும் மேலாக அமேசானில் இருந்து கிடைக்கிறது. மேலும் அதிக அளவில் காபனீரொட்சைட்டை உள்வாங்கிக் கொள்கிறது. அமேசன் ஆறு உலகின் மிக நீளமான ஆறு. இது சுமார் 6,900கிலோமீற்றர் ஓடுகிறது. இந்த அமேசன் நதி மற்றும் அதன் கிளை நதிகள் உலகின் மொத்த நன்னீரில் 20சதவீத நீரைத் தருவதாகப் புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த அடர்ந்த மழைக்காடுகளில் சுமார் 420பழங்குடிகளைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இதில் இந்திய பழங்குடியினரும் அடக்கம். அமேசானில் இருக்கும் இந்திய பழங்குடியினர் சுமார் 86மொழிகளை பேசுவதாக Amazon Cooperation Treaty Organization அமைப்பு கூறுகிறது. அமேசனில் இருகும் பெரிய பழங்குடியின இனமாக `டிகுனா’ இனம் அறியப்படுகிறது. சுமார் 40,000மக்கள் கொண்ட இந்தப் பழங்குடியினர் பிரேசில், பெரு, கொலம்பியா ஆகிய நாடுகளில் வசித்து வருகின்றனர்.

இத்தனை பெரிய அமேசான் மழைக்காடு தற்போது மரங்கள் வெட்டப்படுவதாலும் பெரும் காட்டுத் தீ சம்பவங்களாலும் பெரும் அழிவைச் சந்தித்து வருகிறது. உலகில் இத்தனை உயிர்களை வாழவைக்கும் அமேசன், கடந்த 50ஆண்டுகளில் சுமார் 20சதவீதம் அளவுக்கு அழிக்கப்பட்டுள்ளது என்று சொல்வதற்கு காரணம் பெரும்பாலான காட்டுத்தீ, மனிதர்களால் ஏற்படுத்தப்படுவதுதான்.

தற்போதைய பிரேசிலின் பிரதமர் ஜெயர் போல்சொனாரோ 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் பதவிக்கு வந்த பின்னர், மரங்கள் அழிவு உச்சத்தை எட்டியதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூலையில் மட்டும் பன்மடங்கு அதிகமாகக் காடு அழிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் தரும் தகவலின்படி கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 2,254சதுர கிலோமீற்றர் காடு அழிப்பு அரங்கேறியுள்ளது. அதாவது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 278சதவீதம் அதிகம்.

மேலும், விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தின் புள்ளிவிபரத்தின்படி, பிரேசிலில் இந்த ஆண்டு தற்போது வரை 73,000காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பாலானவை அமேசனில்தான் பதிவாகியுள்ளன. இதுவே 2018-ம் ஆண்டு 39,759ஆக உள்ளது. எத்தனை வேகமாக அமேசான் அழிக்கப்பட்டு வருகிறது என்பதற்கு இது ஒன்றே சான்றாகும்.இதற்குப் பெரும்பாலும் சொல்லப்படும் காரணங்கள், ஒன்று வளர்ச்சி, மற்றொன்று பெரு விவசாயிகள்.

பிரேசில் அரசு தொடர்ச்சியாக வளர்ச்சி என்ற பெயரில் காடழிப்பு சம்பவங்களில் ஈடுபடுவதாக மற்ற நாடுகள் குற்றம்சாட்டி வருவதுடன் பிரேசில் அரசுக்கு வழங்கிய நிதி உதவிகளையும் நிறுத்தப் போவதாக ஜெர்மனி,​ேநார்வே ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

`அமேசன் காட்டில் தீ என்பது பிரேசிலின் பிரச்சினை மட்டும் கிடையாது. ஒட்டுமொத்த உலகின் பிரச்சினை' எனக் கவலைதோய்ந்த குரலில் பேசுகின்றனர் சூழலியல் ஆர்வலர்கள். கடந்த சில நாள்களாகவே உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது அமேசன் காட்டுத்தீ. எவ்வளவு பெரிய காட்டுத்தீயிலிருந்தும் மீண்டு வரும் அபார வலிமை படைத்தவை காடுகள். ஆனால் அரசியல் தீயிலும், தனிமனித பேராசை தீயிலும் எரிந்து கொண்டிருக்கும் இந்த காடுகள் மீண்டுவருமா என்பது சந்தேகம்.

உலகின் மிகப் பெரிய மழைக்காடுகளுக்குள் நடந்து கொண்டிருப்பதைச் சாதாரண இயற்கை நிகழ்வாகவோ விபத்தாகவோ கடந்து விட முடியாது. இதற்குபின் இருக்கும் அரசியல் மிகப் பெரியது. இந்தப் பாதிப்புகளுக்கு பெரும் காரணமாகக் கூறப்படுபவர் தற்போதைய பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சொனாரோ. இப்போது இந்த நெருப்பு அணைக்கப்பட்டு விட்டாலும் கூட இவரது அரசியல் கொள்கைகள் நிச்சயம் அமேசன் காடுகளை ஒருவழி செய்துவிடும் என்கின்றனர் சூழலியலாளர்கள்.

2018ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்திலிருந்தே, அமேசான் காடுகளின் வளங்களை வணிகமாக்கி நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்போம் என்பது அவரது முக்கிய கோஷமாக இருந்தது. அப்போதுதான் பிரேசில் பொருளாதாரம் சரிவிலிருந்து மீளத் தொடங்கியிருந்தது. விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் முதல் எண்ணெய் எடுக்கக் காத்திருக்கும் பெரும் முதலாளிகள் எனப் பலரும் இந்தக் கொள்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். பிரேசிலிருந்து பெருமளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி நடக்கிறது. பெருமளவில் இந்த மாடுகளை வளர்ப்பதற்கான மேய்த்தல் நிலங்களாக அமேசன் அவர்களுக்கு தேவைப்பட்டது. இப்படியான ஆசைகளிலிருந்துதான் பிரச்சினை தொடங்குகிறது.

இது இயற்கையாக நடந்ததுதான் என்கிறார் பிரேசில் நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் ரிகார்டோ சேல்ஸ். ஆனால், இதை முற்றிலுமாக மறுக்கின்றனர் சூழலியலாளர்கள். பொதுவாக இந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம்தான். ஆனால், இது மனித நடவடிக்கைகளால் நடந்ததாகவே தெரிகிறது. எப்போதையும்விட இந்த வருடம் அதிக எண்ணிக்கையில் இந்த காட்டுத்தீ பாதிப்புகள் காணப்படுகின்றன. இதைப் பிரேசில் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையமே (INPE) உறுதிசெய்கிறது. இந்தக் காட்டுத்தீ பாதிப்புகள் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு 84%அதிகம் என்கிறது அந்த அமைப்பு. பொல்சொனாரோ ஆட்சிக்கு வந்த பிறகு பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதையும் இந்த அமைப்பு கடந்த மாதம் சுட்டிக்காட்டியது.

இந்த அமைப்பின் இயக்குநரான ரிக்கார்டோ கால்வோவை பணிநீக்கம் செய்தது பிரேசில் அரசு. இதைப்போன்ற தவறான தகவல்களால் உலக அரங்கில் பிரேசிலுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று இதற்கு விளக்கம் தெரிவித்தார் பொல்சொனேரோ.

முதலில் இந்தத் தீயை அணைக்க போதிய சக்தி எங்களிடம் இல்லை, அமேசான் மீது எங்களுக்கும் அக்கறை இருக்கிறது என கைவிரித்தார் பொல்சொனேரோ. மேலும், தன் மேல் வெறுப்புணர்வு கொண்ட தொண்டர் நிறுவனங்களின் வேலைதான் இது என்றும் குற்றம்சாட்டினார்.

ஆனால், நேரில் களமிறங்கிய ஊடகவியாளர்கள் பெரும்பாலும் பொல்சொனேரோ ஆதரவு விவசாயிகள் மற்றும் முதலாளிகள்தான் இதற்குக் காரணம் என்று தெரிவிக்கின்றனர். சிறிய பகுதிகளை கைவசப்படுத்திக்கொள்ள வைக்கப்பட்ட சிறிய நெருப்புகள் கட்டுக்கடங்காமல் இப்போது பெரும் நெருப்பாக எரிகிறது.
Read more »

அமெரிக்காவில் குடியுரிமை சட்டத்தில் மேலும் கட்டுப்பாடு


அமெரிக்க இராணுவத்துக்காக அயல்நாடுகளில் பணியாற்றுபவர்கள் அந்நாடுகளில் பெற்றுக் கொள்ளும் குழந்தைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்குவதில் பல கட்டுப்பாடுகளை விதிக்க டிரம்பின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவில் குடியுரிமை பெற்று 5 ஆண்டுகள் வசித்தவரின் குழந்தையும், அமெரிக்க அரசு பணியாளர்களும், அமெரிக்க இராணுவத்தினரும் அயல்நாடுகளில் பணியாற்றும்போது அந்த நாட்டில் குழந்தைபெற்றால், அந்தக் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் சிக்கல் இல்லாமல் இருந்தது.

பெற்றோரில் ஒருவரின் அமெரிக்கக் குடியுரிமையைக் காண்பித்து குழந்தைக்கு குடியுரிமை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இந்த நடைமுறையை ஒக்டோபர் 29 முதல் மாற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

கடிதம் மூலம் தானாகவே குடியுரிமை பெறும் வகையில் அல்லாமல் அத்தகைய வெளிநாடுகளில் தங்கியிருக்கும் அமெரிக்க பணியாளர், இராணுவத்தினர், வழக்கமாக பிறர் விண்ணப்பிப்பது போல் குடியுரிமைக்கு விண்ணப்பித்து, காத்திருந்து பெற்றுக் கொள்ளலாம். இது இராணுவ வீரர்கள் ஏற்கனவே சந்தித்து வரும் பல பிரச்சினைகளில், அவர்களுக்கு மேலும் கவலை தரக்கூடிய பிரச்சினை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
Read more »

முஹர்ரம் மாத நோன்பின் சிறப்பு! எம்.வீ. பாத்திமா ஹப்ஸா சலாஹிய்யா சர்வதேச பாடசாலை, வெலிகம.


ரமழான் மாத நோன்புக்கு பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்' என நபிகளார் தெரிவுத்துள்ளார். (ஆதாரம்: முஸ்லிம்)

இந்த ஹதீஸில் முஹர்ரம் மாதத்தில் நோற்கின்ற சுன்னத்தான நோன்புகளுக்கு பல நன்மைகள் உள்ளன என்பதனை 'ரமழானுக்கு பின்னர் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பு' என்ற வரிகளின் மூலம் நபி (ஸல்) அவர்கள் விளக்கிக் கூறியுள்ளார்கள்.

இதனால் வாராந்தம் நோற்கக்கூடிய திங்கள், வியாழன் நோன்புகள், அதே போன்று மாதாந்தம் நோற்கக்கூடிய 13, 14, 15அய்யாமுல் பீழ் (வெள்ளை தினங்கள்), அதே போன்று அய்யாமுஸ்ஸூத் (கருப்புத்தினங்கள்) 27, 28, 29நோற்கக்கூடிய நோன்புகளை நோற்று நபி (ஸல்) அவர்கள் ரமழானுக்குப் பின்னர் சிறந்த நோன்பு என்று சொல்லப்பட்ட சிறப்பை பெற முயலவேண்டும்.

 ஆஷூரா நோன்பின் சிறப்பு!

முஹர்ரம் மாதத்தில் நபிகளார் செய்துவந்த, ஏவியவற்றில் ஆஷூரா நோன்பு முக்கியமானதாகும். ஆஷூரா என்பது பிறை கணிப்பீட்டின் படி முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும். நபிகளார் (ஸல்) மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்வதற்கு முன்னர் மக்காவில் முஹர்ரம் மாத பத்தாவது நாள் ஆஷூரா நோன்பு நோற்று வந்தார்கள்.

குரைஷிகள் (மக்காவில்) ஆஷூரா நோன்பை நோற்று வந்தார்கள், அதனை நபிகளாரும் நோற்று வந்தார்கள். மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்தபோது அதனை நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் அதனை விரும்பியவர்கள் நோற்கலாம் விரும்பியவர்கள் விடலாம் என்றார்கள். (ஆதாரம்: புகாரி)

இந்த ஹதீஸ் ரமழானுக்கு முன்னர் கடமையாக்கப்பட்ட நோன்பு முஹர்ரம் மாத ஆஷூரா நோன்பு என்பதனையும், ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பை விரும்பியவர்கள் நோற்கலாம் என்பதனையும் தெளிவுபடுத்துகின்றது.

பல உபரியான வணக்கங்களுக்கு இஸ்லாம் சில சிறப்புக்களை வைத்திருப்பதை போன்று ஆஷூரா நோன்புக்கு இருக்கக்கூடிய சிறப்பையும் நபிகளார் கூறியிருக்கின்றார்கள். இன்னாளில் நோன்பு நோற்பது முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையுமென்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:





'ஆஷூரா நோன்பு அதற்கு முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று நான் கருதுகின்றேன்'. (ஆதாரம்: முஸ்லிம்)

முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்பதன் பொருள் சிறு பாவங்களையே இங்கு குறிக்கின்றது. மாறாக பெரும் பாவம் செய்தவர்களுக்கு அவர்களது குற்றங்களுக்கு பரிகாரமாக அமைவது தௌபாவாகும்.

முஸ்லிம்கள் அனைத்து விடயங்களிலும் யூதர்களுக்கு மாற்றமாக தங்களது நடவடிக்கைகளை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதனையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. யூதர்களும் ஆஷூரா நோன்பை நோற்று வந்ததனால் அவர்களுக்கு மாற்றமாக ஒன்பதாவது நாளும் நோற்கவேண்டும் என்று நபிகளார் கூறியிருக்கின்றார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'வருகின்ற வருடம் நான் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்' (ஆதாரம்: முஸ்லிம்)

ஆஷூரா நோன்பை நபிகளார் நோற்று வந்தார்கள் அத்தோடு யூதர்களுக்கு மாற்றம் செய்வதற்காக வேண்டி மதீனாவுக்கு வந்ததன் பின்னர் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறினார்கள். இதனடிப்படையில் பத்தாவது நாளோடு ஒன்பதாவது நாளும் சேர்த்து நோன்பு நோற்பதே சிறந்ததாகும். இதற்கே அதிகமான ஆதாரங்களும் உள்ளன. முடியாவிட்டால் பத்தாவது, பதினொறாவது நாட்களுமாக நோன்பு நோற்பது யூதர்களுக்கு மாற்றமாக செய்கின்ற செயலாக மாறும். இவ்விரு முறைகளிலும் ஒருவருக்கு நோன்பு நோற்க முடியாவிட்டால் பத்தாவது நாள் மாத்திரமாவது நோன்பு நோற்றுக் கொள்ள வேண்டும்.

வல்ல அல்லாஹ் புனிதப்படுத்திய இம்மாதத்தின் புனிதத் தன்மையை பேணி, இம்மாதத்தில் அதிகமதிக நன்மைகளை செ;யது, சுன்னத்தான நோன்பாகிய ஆஷூரா நோன்பையும் நோற்று நபிகளார் கூறிய நற்கூலியை அடைய நம் அனைவருக்கும் அருள் புரிவானாகவும். ஹிஜ்ரி புத்தாண்டே உன் வருகை மனிதகுல சுபீட்சத்துக்கும் நாட்டு நலனுக்கும், செழிப்புக்கும் காரணமாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக.

Read more »

வெலிகம கல்பொக்கை ரயில் பாதை கதவு மூடப்பட்ட நிலையில் கடந்து செல்ல முயன்ற 12 சாரதிகளுக்கு எதிராக வழக்கு. 25000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.


வெலிகம கல்பொக்க ரயில் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ரயில் பாதை மூடப்பட்ட நிலையில் அதனை கடந்து சென்ற 12 பேர் நேற்று சிவில் உடையில் இருந்த ரயில் போலீசாரிடம் சிக்கியுள்ளார். நேற்றைய தினம்  விசேடமாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சிவில் போலீசாரிடமே  இந்த 12 பேர் சிக்கியுள்ளார். உடனடியாக அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுபட்ட போலீசார் 12 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சாதாரணமாக ரயில் கதவை மூடப்பட்ட நிலையில் அதனை கடந்தால் இருப்பத்து
ஐயாயிரம் ரூபாய் தண்டப்பனம் விதிக்கப்படும் என்பது இலங்கை நாட்டின் சட்டமாகும்
வெலிகம கல்பொக்க ரயில் பாதை மூடப்பட்டாலும் அதில் ஒரு முச்சக்கரவண்டி செல்வதற்கான இடம் அங்கு காணப்படுகின்றது அவசரமாக செல்ல சிலர் அந்த இடைவெளியால் செல்வது அங்கு வழமையாக அவதானிக்கக்கூடிய ஒன்றாக காணப்படுகின்றது.
சில சந்தர்ப்பங்களில் போலீசார் அப் பிரதேசத்தில் மூடப்பட்ட நிலையில் ரயில் பாதையை கடக்கும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கின்றனர்.

மூடப்பட்ட ரயில் பாதையை கடப்பது தண்டனைக்கு உரிய குற்றம் என உணர்ந்து சில அவசரகாரர்கள் கடந்து செல்கின்றார்கள். என்பது வேதனைக்குரிய விடயமாகும்

இனிமேலாவது இந்த அவசரகாரர்கள் ஒழுங்கு விதிமுறைகளை பேணி நடப்பார்கள???
www.weligamanews.com




Read more »

கோட்டபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலக முடிவு

ஜனாதிபதி வேற்புமனு  முடிவடைவதற்கு முன்னர் தனது அமெரிக்க குடியுரிமையை திரும்பப் பெற முடியாது என்பதால் கோட்டபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக அறியப்படுகிறது.  

கோதபய ராஜபக்ஷவின் அனைத்து சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் கட்அவுட்களையும் அகற்றுமாறு பொதுஜன முன்னணி அரசியல் கட்சியின் அமைப்பாளர்களை நமல் ராஜபக்ஷ ஏற்கனவே கேட்டுக் கொண்டார்.
 ஜனாதிபதித் தேர்தல் பெரும்பாலும் நவம்பர் நடுப்பகுதியில் நடைபெறுவதால், அக்டோபர் மாத தொடக்கத்தில் நியமனக் காலக்கெடு முடிவு செய்யப்படும், 

அதற்கு முன்னர் கோதபய ராஜபக்ஷேவின் அமெரிக்க குடியுரிமை திரும்பப் பெறப்படாத நிலையில் ஜனாதிபதிப் வேற்பலராக பெயரிடப்பட்ட கோடாபயா வின் பெயரை திரும்பப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை.  ராஜபக்ச குடும்பமும், பொதுஜன முன்னணி கட்சித் தலைவர்களும் கடந்த வார இறுதியில் ஒரு கூட்டத்தை நடத்தினர்  கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 ஏப்ரல் மாதம் தனது அமெரிக்க குடியுரிமையை வாபஸ் பெறுவது தொடர்பான ஆவணங்களை அவர் ஒப்படைத்ததாகவும், அமெரிக்க குடியுரிமையை வாபஸ் பெற்றவர்களின் பட்டியல் மார்ச் 30 முதல் ஜூன் 30 வரை கால பகுதிற்கான பெயர் பட்டியல்  வெளியிடப்பட்டது என்றும் கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

 எதிர்பாராத விதமாக, அதற்கு கோதபய ராஜபக்ஷ என்ற பெயர் இல்லை, மேலும் கோதபய ராஜபக்ஷ தனது பெயரை அடுத்த பட்டியலில் சேர்ப்பார்கள்  என்று குறிப்பிட்டுள்ளார் 
 ஆனால் அடுத்த பட்டியல் நவம்பர் 15 ஆம் திகதி  வெளியிடப்படும், வேட்பு மனு முடிவடையும் நேரத்தில், கோட்டபய ராஜபக்ஷவிற்குகட்சித் தலைவர்கள் கோட்டபய ராஜபக்ஷ வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.



 கட்சி தலைவர்கள்  யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றும், கோதபய ராஜபக்சே மீதான கட்சியின் நம்பிக்கையை வளர்ப்பதில் எந்த நன்மையும் செய்யாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.  எதிர்பாராத தருணத்தில் கோதபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடியிடுவதில் பதவியில் இருந்து விலகினால், கட்சியின் மன உறுதியைப் புதுப்பிக்க முடியாது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

ஜனாதிபதி வேற்பலராக கோதபய ராஜபக்ஷ நீக்கப்படுவார் என்று கட்சிக்கு உணர்த்துவது சிறந்தது.  என அவர்கள் சுட்டி காட்டியுள்ளனர்


 அதன்படி, நாடு முழுவதும் கோட்டபய ராஜபக்ஷவின் விளம்பர பலகைகள், சுவரொட்டிகள் மற்றும் சுவரொட்டிகளை உடனடியாக அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதன் விளைவாக, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் கட்அவுட்களை அகற்றுமாறு கட்சி அமைப்பாளர்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு நமல் ராஜபக்ஷ ஏற்கனவே அறிவித்துள்ளார்.


 இதற்கிடையில், கோதபய ராஜபக்ஷ, தனது அமெரிக்க குடியுரிமையில் "தொண்ணூற்றொன்பது சதவிகிதம்" முடிந்துவிட்டதாக பொய்யாக பெருமை பேசுவதாகவும், அவரை "பொதுஜன முன்னணி " ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கும்படி கட்டாயப்படுத்தியதாகவும், முழு பொதுஜன முன்னணி ' கட்சியும் ஒரு இக்கட்டான நிலையில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். 


பல அரசியல் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ள கோதாபயவை  ஜனாதிபதி வேற்பாளராக நியமிப்பது தொடர்பில் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றும் வருகின்றது மேலும்  கட்சியின் மற்ற தலைவர்களை கோதபயாவின் சக்தியால் ஏமாற வேண்டாம் என்று தலைவர் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.


 கோதபய ராஜபக்ஷ 'ஜனாதிபதி பதவியை மட்டுமல்ல, அமெரிக்க குடியுரிமையையும் இழக்க நேரிடும் என்பதால், அமெரிக்க குடியுரிமை விலக்கும் கோரிக்கையை வாபஸ் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு வழக்கறிஞரை கோட்டபய ராஜபக்ஷ ஏற்கனவே கேட்டுக் கேட்டுக்கொண்டுள்ளார்  அவர் ஜனாதிபதி பதவியை மட்டுமல்ல, அமெரிக்க குடியுரிமையையும் இழக்க நேரிடும் என்பதும் தெரிய வந்துள்ளது.
Read more »

பொதுஜன முன்னணி ஜனாதிபதி வேற்பலராக சிறந்தி ராஜபக்ஷ

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதி வேட்பாராக கோத்தபாயவை அறிவித்திருந்தாலும் தேர்தல் நெருங்கியவுடன் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ரஜபக்ஷவே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சந்திமா கமகே தெரிவித்தார்.

அலரிமாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை -20- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ;

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரான சஜித் பிரேமதாசவினதும் பங்கேற்புடனேயே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் களமிறங்குவோம். இந்த விடயத்தில் ஐக்கிய தேசிய முன்னணிக்குள் எந்த முரண்பாடும் கிடையாது.

நிச்சயமாக ஐக்கிய தேசிய கட்சியின் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக இருப்பார். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அந்த வேட்பாளர் சஜித் பிரேமதாசவாகவோ அல்லது வேறு ஒருவாராக இருந்தாலும் அவருக்கு எங்களின் முழு ஆதரவையும் வழங்குவோம். இருப்பினும் இதுவரையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட வில்லை. இவ்வாறானதொரு நிலைமையில் இரண்டு கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சார்பில்  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  ஆகவே இதுவரை காலமும் சுதந்திரமாக கருத்து வெளியிட்ட வந்த ஊடகங்கள் எதிர்வரும் காலங்களில் கோத்தபாய கூறும் விடயங்களை மாத்திரமே வெளியிட வேண்டிவரும் என்பது உறுதி.

தற்போது அவரின் அமெரிக்க குடியுரிமை தொடர்பிலும் பிரச்சினை எழுந்துள்ளது. கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதில் இதுபோன்ற சவால்கள் தோன்றியிருக்கும் நிலையில் யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

எங்களுக்கு கிடைத்துள்ள  தகவல்களுக்கு அமைய  தற்போது கோத்தபாய வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தாலும் இறுதியில் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி  சிராந்தி ராஜபக்ஷவே வேட்பாளராக  களமிறங்குவார் என்று தெரியவருகிறது என்றார்.

Source: JaffnaMuslim

-Almashoora Breaking News
Read more »

கொழும்பு அரசியலில் அதிரடித் திருப்பம்…. ஜனாதிபதியாக சஜித் பிரேமதாஸ…!! பிரதமராக மைத்திரி..!! திரை மறைவில் அரசியல் நகர்வுகள்

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் இணைந்து எதிர்கால அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை விரைவில் தீர்த்துக் கொண்டு ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ அறிவிக்கக்கப்படவுள்ளார். இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பாக தற்போது ஹேமா பிரேமதாஸ மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சஜித்திற்கு ஆதரவாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை செயற்பட வைக்கும் முயற்சியில் அமைச்சர் மங்கள சமரவீர ஈடுபட்டுள்ளார்.


இதனடிப்படையில் சுதந்திரக் கட்சியை சேர்ந்த மஹிந்த சமரசிங்க தலைமையினால் குழு ஒன்று ஐக்கிய தேசிய கட்சியில் இணைவதற்கு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால், அதற்கு சஜித் எதிர்ப்பு வெளியிடாமல் இருப்பதற்கு மைத்திரி மற்றும் சஜித் இணக்கப்பாடு ஒன்றிற்கு வந்துள்ளனர்.இதேவேளை சஜித் ஜனாதிபதியாக தெரிவானால், சுதந்திர கட்சியின் சார்ப்பில் பிரதமர் பதவிக்காக ஜனாதிபதி மைத்திரி போட்டியிடவுள்ளார். அடுத்து வரும் அரசாங்கத்தின் போது இருவரும் இணைந்து செயற்படுவதே நோக்கம் என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது
Read more »

தென் மாகாண தமிழ் மொழி மூல பட்டதாரி ஆசிரியர் நியமனம் 2019 ஆகஸ்ட் 27 ஆம் திகதி வெலிகம நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது

தென் மாகாணத்தில் சுமார் 5 வருடகாலமாக பட்டதாரி ஆசிரியர் நியமனம் புறக்கணிக்கப்பட்ட நிலையில்
முதலாம் கட்ட நியமனத்தில் சுமார் 92
பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் இனைத்துகொள்ளபட்டனர்
இரண்டாம கட்ட நியமனமாக
இம் மாதம் 27 ஆம் திகதி மேலும் தமிழ் மொழி மூலமான 156 பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் இனைத்துகொள்ளபடவுள்ளனர்

 சிங்கள மொழி மற்றும் தமிழ் மொழி  1200  பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் நியமனம் பெறவுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.இன் நிகழ்வு வெலிகம நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது  மைதிரி பால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொள்வார்.
Read more »

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூடு, 2 பேர் பலி


அமெரிக்காவின் தெற்கு பகுதியிலுள்ள அலபாமா மாகாண தலைநகரான மாட்கோமரி நகரில் அமைந்துள்ள பல்கலைகழகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

மர்ம நபர் ஒருவர் பொதுமக்களின் மீது திடீரென துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இந்த தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பி சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடிவருவதாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. (மு)
Read more »

இந்திய இராணுவ மிருகங்கள், செய்த அக்கிரமம்



நிறைமாத கர்ப்பிணியான இன்ஷா அஷ்ரஃப்
என்ற பெண்ணுக்கு கடந்த 12.08.19 அன்று பிரசவ வலி ஏற்பட்டு, ஆட்டோவில் அழைத்துச் சென்ற போது, அதை தடுத்து நிறுத்திய இராணுவ மிருகங்கள் 7 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு நடந்தே செல்லச் சொல்லியுள்ளனர். வலி தாங்க முடியாமல் துடித்த பெண்ணுக்கு ராணுவம் உள்ளிட்ட யாரும் எந்த உதவியும் செய்ய முன் வரவில்லை! அதிகாலை 5:30 மணிக்கு எனக்கு வலி ஏற்பட்டது. ஆனால் நான் மருத்துவமனையை அடையும் போது மணி பிற்பகல் 11 மணி.நாங்கள் நடந்து செல்லும்போது ஒவ்வொரு 500 மீட்டருக்கும் ஒரு சோதனைச் சாவடிகள் அமைத்து எங்களைச் சோதனை செய்தனர்.
மேலும் ஒவ்வொரு சாவடிகளிலும் வேறு வேறு பாதைகள் காண்பித்து அந்த வழியாகச் செல்லும் படி கூறினர்” என பிரசவ வலியால் துடித்த இன்ஷா அஷ்ரஃப் என்ற பெண்மணி கூறியுள்ளார். நாட்டு மக்களை இந்த அளவிற்கு கொடுமைப்படுத்தும் நவீன ஹிட்லர் மோடிக்கு அழிவைத்தர எல்லாம் வல்ல ஏக இறைவனிடமே இரு கையேந்தி பிரார்த்திப்போம்
Read more »

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலியினால் 2 வர்த்தக நிலையங்களுக்கு சேதம்.


நாவுலவிலுள்ள இராணுவ முகாமில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்து
கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலியினால் எழுந்த அதிக காற்றுக் காரணமாக இரண்டு கடைகள் சேதமடைந்துள்ளன.


குறித்த ஹெலிக்கொப்டர் மேலெழுந்தபோது அதன் விசிறிகளிலிருந்து எழுந்த பலத்த காற்றின் காரணமாகவே சேதம் ஏற்பட்டுள்ளது.
நாவுல பொத விளையாட்டு மைதானத்துக்கு அருகிலிருந்த இரண்டு வர்த்தக நிலையங்களே இவ்வாறு சேதமடைந்துள்ளன.

இன்று (16) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது ஒரு வர்த்தக நிலையத்தின் கூரைப் பகுதி முற்றாக உடைந்து கீழே வீழ்ந்துள்ளது. Metro
Read more »

காணாமல் போய், தானாக திரும்பி வந்த கப்பல்! 90 வருடங்களுக்கு பின்னர் அதிசயம்


1925 ஆம் ஆண்டு, நவம்பர் 29 ஆம் திகதி, தெற்கு கரோலினாவின் சார்ள்ஸ்டனில் இருந்து கியூபாவின் ஹவானாவை நோக்கி பயணிக்கத் தொடங்கியது -எஸ்.எஸ்.கொடபக்சி (SS Cotopaxi) என்ற கப்பல். அதாவது 'சாத்தான் முக்கோணம்' என்று அழைக்கப்படும் பெர்முடா முக்கோணத்தின் வழியாகச் சென்றது எஸ்.எஸ் கொடபக்சி.

பெர்முடாவில் இருந்து மியாமி, பின் ஃப்ளோரிடாவில் இருந்து புவேர்ட்டோ, ரிக்கோவின் சாண் ஜுவன் ஆகிய பிரதேசங்களை இணைத்தால் உண்டாகும் பகுதி தான் பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle). மர்மமான சாத்தான் முக்கோணத்தின் ஒரு புள்ளியான ஃப்ளோரிடாவை கடந்துதான் எஸ்.எஸ். கொடபக்சி ஹவானாவை அடைய முடியும்.

ஆனால், அந்தக் கப்பல் ஹவானாவை சென்றடையவில்லை. புறப்பட்ட இரண்டாவது நாளிலேயே எஸ்.எஸ். கொடபக்சி காணமல் போனது, அதன் பின்பு அந்தக் கப்பல் பற்றிய தகவலே இல்லை.அக்கப்பல் மட்டுமன்றி, 2340 தொன் எடையுள்ள நிலக்கரியுடன் கப்டன் டபிள்யூ.ஜே.மெயர் தலைமையில் பயணித்த 32 மாலுமிகள் பற்றிய எந்த விதமான தகவலும் இல்லை.

சமீபத்தில் கியூபா கடலோர காவல் படையினர், தடை செய்யப்பட்ட இராணுவ பகுதியின் வழியாக ஒரு கப்பல் தீவை நோக்கி வருவதைக் கண்டுள்ளனர். அதைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்து, பயன் அளிக்காததைத் தொடர்ந்து, அதன் அருகே சென்று பார்த்த போதுதான் அது 90 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன எஸ்.எஸ். கொடபக்சி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து பெர்முடா முக்கோணத்தில் காணாமல் போன மிகப் பெரிய கப்பல்களில் ஒன்றான எஸ்.எஸ். கொடபக்சி, ஒரு நாடோடி போல இத்தனை ஆண்டுகளாக பெர்முடா முக்கோணத்துடன் இணைந்தே கிடந்துள்ளது என்றும் திரும்பி வந்த கப்பலில் ஒருவரும் இல்லை என்றும், அந்தக் கப்பல் கைவிடப்பட்ட நிலையில்தான் இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அக்கப்பலை ஆராய்ந்து பார்த்ததில் கப்டனின் ​ெலாக் புக் (Log book) எனப்படும் குறிப்பு எழுதும் நோட்டுப் புத்தகம் கிடைத்துள்ளது. ஆனால், அந்த குறிப்புப் புத்தகத்தில் கடந்த 90 ஆண்டுகளாக எஸ்.எஸ். கொடபக்சி கப்பலுக்கும், அதில் பயணித்த 33 பேருக்கும் என்ன நடந்தது என்பது பற்றிய ஒரு தகவலும் கிடைக்கப் பெறவில்லை.கப்டனின் குறிப்புப் புத்தகம் உண்மையானது தான் என்றும், சரியாக 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் திகதி முதல் கப்டன் கப்பல் பயணம் பற்றிய குறிப்பு எழுதுவதை நிறுத்திக் கொண்டுள்ளார் என்றும் கியூபா நாட்டு வல்லுநரான ரோடோல்போ சல்வடோர் க்ருஸ் நம்புகிறார்.

க்யூபா நாட்டு அரசாங்கம்,இக்கப்பல் காணமல் போனது ஏன்?திரும்பி கிடைக்கப் பெற்றது எப்படி? என்பது பற்றிய விசாரணையை தொடங்கியுள்ளது.

இதுபோன்று கப்பல்கள் காணமல்போகும் நிகழ்வுகள் வணிக ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க இக்கப்பல் மீதான ஆய்வு மிகவும் அவசியமென்று கியூபா நாட்டு அதிகாரிகள் கருத்துக் கூறியுள்ளனர்.

பெர்முடா முக்கோணத்தில் உள்ள மர்மங்களும், அங்கு ஏன் அறிவியலும் தொழில்நுட்பமும் செயலிழந்து போகின்றன என்பதும் இதுவரை கண்டறியப்படாதவையாகவே உள்ளன.
Read more »