கற்பதும், கற்பிப்பதும் பர்ளு கிபாய

அறிவு எனும்போது அதனை உலக அறிவு, மார்க்க அறிவு எனும் இரு கூறுகளாக இஸ்லாம் பிரிக்கவில்லை. எமது சமூகத்தவர்கள் 'உலமாக்கள் என்று ஷரீஆ அறிவுகளைக் கற்றவர்களையும், கல்விமான்கள் என்று உலக அறிவுகளை- பொதுக் கல்விகளைக் கற்றவர்களையும் அழைப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், குர்ஆனிலோ, ஹதீஸிலோ இப்படியான பிரிவினையைக் காண முடிவதில்லை.

நபி(ஸல்) அவர்கள், கல்வியை ’பயனுள்ள கல்வி’, ’பயனற்ற கல்வி’ என்று மட்டுமே பிரித்திருக்கிறார்கள். ’அல்லாஹ்வே உன்னிடம் நான் பயனற்ற கல்வியை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்.’’(முஸ்லிம்) என்று அவர்கள் பிரார்த்தித்திருக்கிறார்கள்.

மேலும் ஒருவர் மரணித்ததன் பின்னரும் அவருக்குத் தொடர்ந்தும் நன்மையைப் பெற்றுத்தரும் அம்சங்கள் உள்ளன என்றும் "அவருக்காகப் பிரார்த்திக்கும் ஸாலிஹான பிள்ளை, ஸதகா அல்ஜாரியா, பயனளிக்கும் அறிவு" ஆகிய மூன்றும் தான் அவை என்றும் கூறினார்கள்.(முஸ்லிம்)


இங்கும்கூட அவர்கள் மார்க்க அறிவு, உலகஅறிவு என்று பிரிக்காமல் 'பயனுள்ள அறிவு’ என்று பொதுவாகவே கூறியிருக்கிறார்கள்.

எனவே, மனித சமூகத்தின் ஈருலக விமோசனத்துக்குத் தேவையானது என கருதப்படும் எந்தவொரு அறிவும் பயனுள்ளதாகவே அமையும். அது மார்க்கத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்டதாகவோ உலக விவகாரங்களுடன் நேரடியாக சம்பந்தப்பட்டதாகவோ அமைந்திருந்தாலும் சரியே. அந்த அனைத்து கல்வி ஞானங்களிலும் ஈடுபடுவதும் கற்பதும் கற்பிப்பதும் தவிர்க்க முடியாத 'பர்ளு கிபாயா'வாக அமையும். குர்ஆன், சுன்னா, பிக்ஹ், அகீதா, ஸீரா போன்ற மார்க்கத்துடன் நேரடியாகத் தொடர்பான துறைகளில் நிபுணத்துவம் மிக்க உலமாக்களை உருவாக்குவது போலவே, வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்ட அறிஞர்கள், தொழிநுட்பவியலாளர்கள், விஞ்ஞானிகள், ஊடகவியலாளர்கள் போன்ற உலக விவகாரங்களோடு தொடர்பான அறிவுகளில் ஆழமான அறிவு கொண்டவர்களை உருவாக்குவதும் 'பர்ளு கிபாயா'வாகவே கருதப்படும்.

முஹிப்புல் ஹக்
Read more »

அடுத்த வாரமளவில் நாட்டில் குண்டு வெடிக்கலாம்..!: கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டால் பரபரப்பு

அடுத்த வாரங்களில் நாட்டில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடத்தும்படி தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவினால் இந்த முறைப்பாடு நேற்று புதன்கிழமை செய்யப்பட்டுள்ளது.



மேலும், குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றை தேர்தல் நலனுக்காக மேற்கொள்ள சதி திட்டமொன்றை செய்து வருவதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
Read more »

எச்சரிக்கை ! கொழும்பு வாழ் மக்களுக்கு அறிவுறுத்தல் ! முகமூடிகள் அணிவது பாதுகாப்பானது !

கொழும்பு நகரின் மேற்பரப்பிலுள்ள வளிமண்டலத்திலுள்ள வளி மாசடைந்ததால் ஏற்பட்டுள்ள தற்போதைய அபாய நிலைமை தொடர்பில் கொழும்பு நகரவாழ் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தேசிய இடர்பாதுகாப்பு முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.



இதனால் முகமூடிகள் அணிந்து செல்வது பாதுகாப்பானது என சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதனால் சுவாசக் கோளாறுகள் உள்ள நோயாளிகளும், பிள்ளைகளும் இதுதொடர் பில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று தேசிய இடர்பாதுகாப்பு முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த சுவாசக் கோளாறுகள் உள்ள நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் களைப்பைத் தரக்கூடிய வேலைகளைத் தவிர்ப்பது நல்லதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வளிமண்டலத்தில் உள்ள வளியில் தூசுத் துகள்கள் மற்றும பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பதார்த்தங்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்த போதிலும், அது வீழ்ச்சி கண்டு வருவதாக பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இதேவேளை, இந்தியாவில் புதுடெல்லியை பாதித்துள்ள வாளிமாசடைதலினால் எற்பட்டுள்ள பாதிப்பு தற்பொழுது இலங்கையை பாதித்திருப்பதாக தேசிய கட்டிட மற்றும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த திணைக்களத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி இது தொடர்பாக தெரிவிக்கையில்,

நாட்டின் வளிமண்டலத்தில் காணப்படும் வளியானது இரு மடங்காக மாசடைந்திருப்பதாக தெரிவித்தார்.

கியுபிக் மீற்றருக்கு 50 மைக்றோ கிராம் ஆக சமனான வகையில் உள்ள காற்றில் சிறிய அளவிலான துகள்கள் 70 மைக்றோ கிராம் ஆக அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இதேபோன்று இந்த நிலைமை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் காற்று வீசும் திசை மாற்றமடைவதனால் இந்தியாவில் இருந்து இந்த தூசியுடனான மேகம் இலங்கை திசைக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது நிலவும் வளிமண்டலம் மாசடைவதனால் சுவாச நோயுடன் கூடிய நபர்கள், சிறுவர்கள் மற்றும் வயதானோர் இது தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று சரத் பிரேமசறி தெரிவித்துள்ளார்.



இந்நிலையில், இவ்வாறு வளி மாசடைந்திருப்பதால் சிறுவர்களுக்கு முகமூடி அணிவிப்பது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இந்த நிலைமை காரணமாக, சிறுவர்கள் சுவாசிப்பதில் சிக்கல் நிலைமையை எதிர்கொள்ள நேரிடலாம் என்று சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லும்போதும், ஏனைய சந்தர்ப்பங்களிலும், முகமூடியை அணிவது பாதுகாப்பானதாக இருக்கும்.

இந்நிலையில், தொடர்ச்சியான நோய் அறிகுறிகள் ஏதாவது தற்போதைய நாட்களில் அவதானிக்கப்படுமாயின், வைத்திய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கொழும்பு நகரின் வளிமண்டலப்பகுதியில் கடந்த இரு தினங்களாக பனி மூட்டம் அல்லது முகில்கல் போன்ற நிலை காணப்படுகின்றது. தூசுத் துகள்களே அவ்வாறு அவதானிக்கப்படுவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, கொழும்பில் வளி மாசடைதலானது இயல்பான மட்டத்திலிருந்து தற்கோது அது இரு மடங்காக அதிகரிகத்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு இன்றைய தினம் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.
Read more »

விபத்தில் பலியான மூவரினதும் பூதவுடல்கள் மடகஸ்காரில் நல்லடக்கம்

மடகஸ்காரில் அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களுள் வெலிகமையைச் சேர்ந்த அஸ்ஸெய்யித் ரிதா மெளலானா என்பவரும் உயிரிழந்தார். வெலிகமையைச் சேர்ந்த மொஹமட் மெளலானாவின் புதல்வரான இவர், தந்தையின் இரத்தினக்கல் வியாபாரத்தை செய்து வருகிறார்.

குறிப்பிட்ட தினம் இவர்கள் மாலை 5.00 மணி அளவில் களுத்துறையைச் சேர்ந்த ஜஉபர் ஸித்தீக் மற்றும் கன்னத்தோட்டைச் சேர்ந்த மொஹமட் மிஸ்பர் ஆகியோருடன் இவர் வியாபார நோக்கமாக வாகனத்தில் சென்றுள்ளனர்.

இச்சமயம் வாகனம் வீதியை விட்டு விலகி 250 அடி ஆழமான கங்கையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. எனினும் அடுத்த நாள் காலையிலேயே பிரதேசவாசிகள் கண்டுள்ளனர். இவர்களின் தகவலின் பிரகாரம் கங்கையிலிருந்து மூவரினதும் சடலம் மீட்கப்பட்டன.

உயிரிழந்த ரிதா மெளலானா சிறந்த சமூக சேவையாளர். அரசியலிலும் ஈடுபாடு காட்டி வந்துள்ளார். முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகரவோடு நெருங்கி பழகி வந்துள்ளார்.

இவரது ஜனாஸா பிரேத பரிசோதனையின் பின்னர் மடகஸ்காரிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
Read more »

நாவலபிட்டிய பகுதியில் SB திஸாநாயக்கவுடன் ஏற்பட்ட கைகலப்பில் 3 பேர் காயங்களுடன் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர்.


நாவலப்பிட்டிய கினிகத்ஹென பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற பொது ஜன பெரமுன கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் பி திசாநாயக்க அவர்கள் கலந்து கொண்டபோது கட்சி ஆதரவாளர்கள் சிலர் அவரை நுழைய விடாமல்தடுத்த நிலையில் அதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாவலர்கள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகவும் இதனால் சிலர் காயமடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Read more »

நிகாப் + புர்கா அணிந்து வரலாம், வாக்களிக்க, நுழையும்போது அதனை அகற்ற வேண்டும்


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் வாக்களிக்க வருகை தரும்போது புர்கா அல்லது நிகாப் அணியலாம் எனவும் வாக்களிப்பு நிலையத்திற்குள் உள்நுழையும்போது அவற்றை அகற்ற வேண்டும் எனவும் தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.


வாக்களிக்கும்போது வாக்களார் ஒருவர் தனது அடையாளத்தை நிரூபிக்க வேண்டியது அவசியம் எனவே அவரது அடையாளம் அடையாளஅட்டையில் முகத்துடன் இணையாக இருக்க வேண்டும் அதற்காக, அவர் முகத்தை மறைத்திருக்கும் நிகாப் மற்றும் புர்கா போன்றவற்றை அகற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.


எனினும், மேற்படி நிபந்தனைகளை கருத்திற்கொள்ளாமல் ஒரு வாக்களார் தனது நிகாப் மற்றும் புர்கா போன்றவற்றை அகற்றாது வாக்களிப்பதற்கு, வாக்களிப்பு நிலைய தலைமை அதிகாரி அனுமதி வழங்கக்கூடாது எனவும் சமன் ஸ்ரீ ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Read more »

கொழும்பு வந்த விமானத்தில், பயணி ஏற்படுத்திய குழப்பம் - பொலிஸாரிடம் ஒப்படைப்பு


சென்னையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த விமானத்தில் பயணி ஒருவர் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதனையடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியரை விமானத்தில் இருந்து வெளியேற்ற விமான ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


குறித்த பயணி விமானத்தினுள், யோகா பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வதற்கு ஆரம்பித்துள்ளார். இதனால் அவர் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு சென்னை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


தொடர்ந்து விமான ஊழியர்கள் விடுத்த கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் அவர் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார். அவர் வாரனாசியில் இருந்து இலங்கைக்கு பயணிக்கவிருந்துள்ளார்.


விமானத்தில் இருந்து பயணி வெளியேற்றப்பட்ட பின்னர் அவரது டிக்கடிற்கு செலுத்தப்பட்ட பணத்தில் அரைவாசி அவரிடம் வழங்குவதற்கு விமான நிறுவனம் இணங்கியுள்ளது.


பயணிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இல்லை என்பதனால் அவர் கைது செய்யப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
Read more »

திகன கலவரத்தில் முஸ்லிம்களை, ஏன் சஜித் சந்திக்கவில்லை - இதோ அவரது விளக்கம்


தான் கடுமையாக சுகயீனமுற்றிருந்ததால் திகன கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை சந்திக்க வர முடியவில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.


கண்டி மாவட்டம் திகன நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.


ஐக்கிய தேசிய கட்சிக்கு முஸ்லிம்களில் கணிசமான அளவினர் ஆதரவு வழங்கிவரும் நிலையில் கலவரங்களில் பாதிக்கப்பட்ட எந்த ஒரு முஸ்லிம் பிரதேசங்களுக்கு சஜித் செல்லவில்லை அவர்களுக்கு அறிக்கை ஒன்றின் மூலாமாவது ஆறுதல் கூறவில்லை என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் திகன நகரில் இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார்.
Read more »

சமையல் எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் முற்றாக தீரும் :முதித்த பீரிஸ்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரு தினங்களில் முற்றாக நீங்கிவிடும் என்று கூறிய லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பானர் முதித்த பீரிஸ் நாளை காலை 3650 மெட்ரிக்தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு கப்பலொன்று கொழும்பு வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டு நிலைவரம் தொடர்பில் இன்று அவரை தொடர்பு கொண்டு வினவிய போது இதனை கேசரிக்கு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது

எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான முழுமையான நடவடிக்கைகளை எமது நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் இருநாட்களுக்குள் தட்டுப்பாட்டை முழுமையாக நீக்க கூடியதாகவிருக்கும். இந்த நடவடிக்கைகளை நாம் கடந்த 03 ஆம் திகதியிலிருந்து ஆரம்பித்திருந்தோம். இந்நிலையில் , கடந்த 3 ஆம் திகதி 80 ஆயிரம் மெட்ரிக் தொன்னிற்கும் அதிகமான எரிவாயு வை கொள்வனவு செய்யதிருந்தோம்.

அதேபோல் கடந்த 04 ஆம் திகதி 110 ஆயிம் மெட்ரிக் தொன் எரிவாயுவையும்,5 ஆம் திகதி 80 மெட்ரிக் தொன்னிற்கு அதிகமான எரிவாயுவையும் கொள்வனவு செய்திருந்தோம்.

நேற்று கூட சுமார் 80 ஆயிரம் மெட்ரிக் தொன்னிற்கும் அதிக நிறையுடைய எரிவாயுவை வெளிநாட்டிலிருந்து கொள்வனவு செய்திருந்தோம். அதேவேளை நாளையும் , நாளை மறுதினமும் எரிவாயுவை வெளிநாட்டிலிருந்து கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

சாதாரணமாக நாளொன்றிற்கு 60 ஆயிரம் தொடக்கம் 65 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிவாயுவினையே விநியோகித்து வந்தோம். ஆயினும்,எரிபொருள் தட்டுப்பாட்டின் நிமித்தம்,ஒருஇலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவினை விநியோகிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதற்கான கேள்வியும் அதிகரித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டிற்கான காரணம்

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்த மட்டத்தில் காணப்பட்ட போதிலும், இலங்கையில் 250 ரூபாவால் எரிபொருளின் விலை குறைத்தமை இதற்கு முக்கிய காரணமாகும்.

அந்த வகையில் , எரிவாயுவின்விலை குறைந்தமையினால், மக்கள் அதனை அதிகமாக கொள்வனவு செய்வதில் நாட்டம் செலுத்தினர். அதுவே எரிபொருள் தட்டுப்பாட்டிற்கான பிரதான காரணமாகும்.

அதேவேளை , லிட்ரோ எரிவாயு நிறுவனம் ஓமானிலிருந்தே தேவையான எரிவாயுவினை கொள்வனவு செய்கின்றது. இந்நிலையில் அந்த நாட்டின் அரசியல் சூழ்நிலையும் இந்த தட்டுப்பாட்டில் தாக்கம் செலுத்தியுள்ளது.

அத்துடன், எரிவாயுவை கொண்டுவரும் கடற்பரப்பில் ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்றத்தின் காரணமாகவும் கப்பல்களை நாட்டிற்குள் கொண்டுவருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. அதேவேளை , நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையின் காரணமாக அன்றாடம் விறகு அடுப்பை பாவிக்கும் பாவனையாளர்கள் , எரிவாயுவை கொள்வனவு செய்ய முன்வந்தமையும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதகமான காரணிகளாக மாறியுள்ளன.

எரிபொருளின் விலை குறைவடைந்ததை அடுத்து எமது போட்டி நிறுவனங்கள் சில தமது களஞ்சியத்தில் காணப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ஆகவே,அவர்களுடைய வாடிக்கையாளர்களுடைய தேவையையும் தேசிய விநியோகஸ்தர்கள் என்ற வகையில் எமது நிறுவனத்தினூடாக வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.

இவ்வாறான காரணிகளினால் எரிபொருள் தட்டுப்பாட்டினை ஈடு செய்ய முடியாத நிலைமை எமக்கு எற்பட்டது. ஆகவே ,தான் இவ்வாறானதொரு நிலைமைஏற்பட்டது.

எமது விநியோகஸ்தர்கள் அவ்வாறு பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என கூறமுடியாது. ஏனெனில் அத்தகைய முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கவில்லை.

அதேவேளை,எமது விநியோகஸ்தர்கள் நம்பகரமான விநியோக நடவடிக்கையினையே இந்த தட்டுப்பாடான காலகட்டத்தில் மேற்கொண்டுள்ளனர்.
Read more »

நன்மைகளுடன் தீமைகளையும் தரும் நவீன தகவல் தொழில்நுட்பம்


தகவல் பரிமாற்றம் காலத்துக்குக் காலம் மாற்றமடைந்து வந்துள்ளது. மனிதன தோன்றிய காலத்திலேயே இத்தகைய தகவல் தொடர்பும் தோற்றம் பெற்றது. ஓலி, தீ, சைகை என்பனவே மனிதனின் ஆரம்பகட்ட தகவல் பரிமாற்ற நுட்பமாகக் காணப்பட்டன.

இதனையடுத்து கல்வெட்டு, ஓலைச்சுவடி, செப்பேடுகள் போன்றவை மூலமாகவும் இயல், இசை வாயிலாகவும் கருத்துகளைப் பிறருக்கு மனிதன் வெளிப்படுத்தினான்.அதன் பின்பு தகவல் தொடர்பு அச்சடித்த காகிதங்கள், புத்தகங்கள் எனறு வளர்ந்தது. விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப தபால், தந்தி, தொலைபேசி என்று தகவல் தொடர்புசானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தகவல்களை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்த்தன. இதன் முலம் தகவல் தொடர்பு துறையில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமானது.

இன்று தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப செல்வாக்கின் விளைவாக உலகம் சிறிய குடும்பம் போல சுருங்கி விட்டது. ஆரம்பத்தில் நாட்டு நடப்புக்களைத் தெரிந்து கொள்வதற்கு வானொலிச் செய்திகளையும், பத்திரிகைகளையும் எதிர்பார்த்து நின்றோம். இன்று அந்நிலை மாற்றம் பெற்று நடைபெறும் அனைத்து விடயங்களும், உடனுக்குடன் நொடிப்பொழுதில் காலடிக்கு வந்து சேருகின்றன. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் விளைவாக உலகின் வேகமான சுற்றுகைக்கு ஈடுகொடுக்க மனிதன் பழக்கமடைந்து விட்டான். இத்தொழிநுட்பத்தால் காலதாமதம் தவிர்க்கப்படுகின்றது.

தகவல் தொழிநுட்பத்தின் வளர்ச்சியால் மக்கள் மத்தியில் வாழ்க்கை முறையும் மாறியுள்ளது.இன்று உலகமே தகவல் தொழிநுட்ப வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது. இவ்வாறான தகவல் தொடர்பாடல் வளர்ச்சியால் பல்வேறு நன்மைகள் காணப்படுகின்றன.

தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் மாணவர்களது கல்வியில் மாத்திரமின்றி அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் பாரிய செல்வாக்கு செலுத்துவதாகவுள்ளது. இன்றைய காலத்தில் சிறுபிள்ளைகளைக் கூட இதன் செல்வாக்கு விட்டுவைக்கவில்லை. இன்று பிள்ளைகள் இயற்கையில் விளையாடுவதைக் காட்டிலும் அதிகமாகத் தொலைபேசி மற்றும் ஏனைய நவீன சாதனங்களிலேயே அதிகம் விளையாடுகின்றனர். நவீன தொடர்புசாதனங்களின் வருகையின் விளைவாக எந்தளவு நன்மைகள் காணப்படுகின்றனவோ அதேயளவு பிரதிகூலங்களும் காணப்படுகின்றன. தீய விளைவுகளும் தவிர்க்க முடியாததாக காணப்படுகின்றன. ஆகவே பயன்படுத்தும் பயனராகிய நாம் அதனைப் பயன்படுத்துவதில் அதிக அவதானம் எடுத்துக் கொண்டு எமது வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துதல் சிறந்தது.
Read more »

தயக்கம், தாமதம் நல்லதல்ல!


இலங்கையின் பிரதான தேர்தலொன்று தொடர்பில், வடக்கு- கிழக்குத் தமிழர்கள் மத்தியில் இன்று உள்ளதைப் போன்ற திரிசங்கு நிலைமையொன்று கடந்த காலத்தில் ஒருபோதும் ஏற்பட்டதில்லை.

ஜனாதிபதித் தேர்தலாகட்டும், இல்லையேல் பாராளுமன்ற பொதுத் தேர்தலாகட்டும்... வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் கடந்த காலத்தில் நிலைமை வேறுவிதமாகவே இருந்தது.

தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அவர்கள் உறுதியான நிலைப்பாடொன்று வந்து விடுவார்கள். ஆனால் அவர்கள் மத்தியில் கடந்த காலத்தில் தேர்தல் நிலைப்பாடு பெரும்பாலும் சுயமானதாக இருந்ததில்லை.

விடுதலைப் புலிகள் அங்கு செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் புலிகளின் நிலைப்பாடுதான் தமிழர்களின் முடிவில் பிரதிபலித்தது. புலிகள் தங்களது நிலைப்பாட்டை தமிழ் மக்கள் மத்தியில் திணித்தனர் என்று கூட கூற முடியும். புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த மக்கள் ஒருபோதுமே சுயமான முடிவுக்கு வந்ததில்லை. புலிகள் அவ்வாறு அனுமதித்ததும் இல்லை. 2005 இல் வடக்கு மக்களை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க விடாமல் தடுத்ததும் புலிகளின் தனிப்பட்ட முடிவுதான்.

புலிகள் இயக்கத்தின் முடிவுக்குப் பின்னர் காட்சிகள் மாற்றமடைந்தன. தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டைத் தீர்மானிக்கும் பிரதான சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவெடுத்தது. புலிகளின் ஆசீர்வாதத்துடன் அரசியல் சக்தியாக செல்வாக்குப் பெற்றிருந்த தமிழ்க் கூட்டமைப்பிடம் ‘முடிவெடுக்கும் பாத்திரம்’ தானாகப் போய்ச் சேர்ந்தது.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ்க் கூட்டமைப்பின் நிலைப்பாட்டையே அங்குள்ள தமிழ் மக்கள் வெளிப்படுத்தினர். 2015ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலையும், அதே வருடத்தில் ஓகஸ்ட் மாதம் நடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலையும் இதற்கான உதாரணங்களாகக் கூறலாம். தமிழ்க் கூட்டமைப்பின் முடிவுக்கு அமையவே அங்குள்ள தமிழர்கள் மைத்திரி_ ரணில் கூட்டணிக்கு ஏகோபித்த ஆதரவை வழங்கியிருந்தனர்.

தமிழர்களின் கடந்த கால முடிவை தவறென்று கூறுவதற்கில்லை. ஏனெனில் வடக்கு, கிழக்குத் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் தமிழ்க் கூட்டமைப்பினராவர். தமிழ்க் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு இசைந்து செல்ல வேண்டிய கடப்பாடு தமிழர்களுக்கு இருந்தது. அதேசமயம், குறித்த சமூகமொன்றைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசியல் பிரதிநிதிகளுக்கும் பெரும் பொறுப்பு இருக்கின்றது. மாறிவரும் அரசியல் நிலைவரங்களுக்கேற்ப, தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய கடப்பாடு அவர்களுக்குண்டு.

தமிழ்க் கூட்டமைப்பின் கடந்த காலத் தேர்தல் நிலைப்பாடுகளையும் தவறென்று கூற முடியாது. தமிழினத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், ஆறு தசாப்த காலத்துக்கு மேலாகத் தொடர்ந்து வருகின்ற இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை எட்டி விடலாமென்று நம்பியுமே தமிழ்க் கூட்டமைப்பினர் காலத்துக்குக் காலம் வேறுபட்ட தேர்தல் நிலைப்பாடுகளுக்கு வந்திருந்தனர்.





தமிழ்க் கூட்டமைப்பின் நிலைப்பாடுகளுக்கு தமிழ் மக்கள் இசைந்து செயற்பட்டது தொடர்பாக ஏனைய இன மக்கள் கூட தமிழினத்தின் அரசியல் ஒற்றுமையை அன்று பாராட்டியிருந்தனர்.

இவையெல்லாம் எமது கடந்தகால அனுபவங்களாகும். தேர்தலொன்று அறிவிக்கப்பட்டவுடன் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் நிலைப்பாட்டையே நாட்டின் ஒட்டுமொத்த சமூகங்களும் உற்று நோக்குவது வழமை. அம்மக்களின் முடிவை சர்வதேசம் கூட உற்று நோக்குவதுண்டு. அத்தேர்தல்களின் போதெல்லாம் தமிழ்க் கூட்டமைப்பின் முடிவும், தமிழர்களின் தீர்மானமும் வெவ்வேறானதாக இருந்ததில்லை. தமிழ்க் கூட்டமைப்பின் முடிவுக்காகவே தமிழர்கள் காத்திருந்த காலமொன்றும் அன்றிருந்தது.

அன்றைய நிலைமையை இன்றைய தேர்தல் சூழலுடன் ஒப்பிட முடியாதிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இன்னும் பன்னிரண்டு நாட்களே மீதமிருக்கின்றன.

இவ்வேளையில் தமிழரசுக் கட்சியிடமிருந்து உத்தியோகபூர்வமாக நேற்று முடிவு வெளியாகியுள்ளது.இது தமிழரசுக் கட்சியின் முடிவு. தமிழ்க் கூட்டமைப்பின் முடிவு அல்ல. தமிழரசுக் கட்சியின் முடிவு மிகத் தாமதமாகவே வந்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, வடக்கு, கிழக்குத் தமிழர்கள் மத்தியில் தேர்தல் தொடர்பாக வெளிப்படையான பிரதிபலிப்பைக் காண முடியாதிருக்கின்றது. தமிழர்களின் தேர்தல் களம் களையிழந்து போய்க் கிடக்கின்றது. அவர்களது தேர்தல் நிலைப்பாட்டை இன்னுமே உறுதியாகப் புரிந்து கொள்ள முடியாதிருக்கின்றது.

தமிழ்க் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியின் முடிவு ஒருபுறமிருக்க, தேர்தல் தொடர்பான தமது உறுதியான நிலைப்பாட்டை தமது மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய அரசியல் கடப்பாடும், தார்மிகப் பொறுப்பும் தமிழ்க் கூட்டமைப்புக்கு உண்டு. அதுவே அரசியல் அறம்!

தமிழ்க் கட்சிகள் இணைந்த பொதுஅமைப்பான தமிழ்க் கூட்டமைப்பின் முடிவுதான் இங்கு முக்கியம்.இப்பொறுப்பில் இருந்து தமிழ்க் கூட்டமைப்பினால் ஒருபோதுமே நழுவி விட முடியாது. அவ்வாறு நழுவிக் கொள்ள தமிழ்க் கூட்டமைப்பு முற்படுமானால், தமிழர்களின் ஏகபிரதிநிதிகளுக்கான பொறுப்பை அதன் தலைவர்கள் நிறைவேற்றத் தவறியுள்ளனர் என்றுதான் அர்த்தம்! அதேவேளை ஏகபிரதிநிதிகளென்று இனிமேல் கூறிக் கொள்வதிலும் அர்த்தம் இருக்கப் போவதில்லை.

தமிழ்க் கூட்டமைப்பின் தாமதமான செயற்பாடுகள் உசிதமானவையல்ல.ஒட்டுமொத்த தமிழ்க் கூட்டமைப்பின் முடிவை தாமதமின்றிஆணித்தரமாகக் கூற வேண்டிய பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு. தமிழ்க் கூட்டமைப்பின் தாமதமானது நழுவல் போக்காகுமென்று தமிழினம் சந்தேகம்கொள்ள இடமளிப்பது முறையல்ல!
Read more »