வெலிகம தெனிப்பிடிய பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து இராணுவ படை வீரர் தற்கொலை.
| June 01, 2019
வெலிகம தெனிப்பிடிய பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து இராணுவவீரர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
வெலிகம தெலிஜ்ஜிவில பிரதேசத்தை சேர்த்த 28 வயது மதிக்கத்தக்க இராணுவ வீரரே இவ்வாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குடும்ப தகராறு காரணமாகவே தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கடற்படை மற்றும் ஊரு மக்கள் இணைந்து சடலத்தை தேடும் பணியில்
ஈடுபட்டு வருகின்றனர். பொலிஸார் மேலதிக விசாரணை நடாத்தி வருகின்றனர்