வெலிகம கடலில் நீராடச் சென்று காணாமல்போன இரு மாணவிகளில் ஒருவர் சடலமாக மீட்புவெலிகம பீச் பார்க் பகுதியில் கடலில் நீராடச் சென்ற நான்கு பாடசாலை மாணவிகளில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

ஒரு மாணவியின் சடலம் நேற்றைய தினம் (23.01.2022) மீட்கப்பட நிலையில் மற்றை காணாமல் போன மாணவியை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன


சம்பவத்தில் இருவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் ஆபத்தான நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போன 12 மற்றும் 15 வயதுடைய இரு மாணவிகளும் வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் நேற்று மதியம் பெற்றோருடன் கடலில் நீராடச் சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

0 Comments:

Post a Comment