வெலிகம, கப்பரத்தோட்டையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் வெடிப்பு.காயமடைந்தவர்களில் பெண்ணொருவரும் அடங்குவார் இன்று (04) அதிகாலை 3.45 மணியளவில் வெலிகம, கப்பரத்தோட்ட, அவாரியாவத்த பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பெண் உட்பட மூவர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.

 இரண்டு மாடிகளைக் கொண்ட சுற்றுலா ஹோட்டல் வெடிப்பில் பலத்த சேதமடைந்ததுடன், ஹோட்டலைச் சுற்றியுள்ள வீடுகளும் சேதமடைந்தன.

 இந்த வெடிவிபத்தில் ஹோட்டல் உரிமையாளர், உரிமையாளரின் மகன் மற்றும் ஹோட்டலுக்கு அருகிலுள்ள வீடொன்றில் வசித்து வந்த பெண் ஒருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 வெடிப்புக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், வெலிகமவைச் சுற்றியுள்ள பகுதிகளில் இவ் வெடிப்புச் சத்தம் கேட்டதாக பலர் கூறுகின்றனர்.

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:

Post a Comment